புதன், 11 செப்டம்பர், 2019

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளிடம் பாலியல் வன்முறை

பாஜக அமைச்சரின் முகத்திரையைக் கிழித்த மாணவி


ஷாஜகான்பூர், செப்.11, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று சமூக இணையளத்தில் காணொலி ஒன்று வெளியிட்டார். அதில் தான் படித்த கல்லூரியை நடத்தி வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சின்மயானந்த்(72) தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்றும் கொன்றுவிடுவதாக மிரட்டுவ தாகவும் புகார் கூறினார். அடுத்த நாளே அவர் காணாமல் போனார். இது குறித்து அந்த மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் காணாமல் போன அந்த மாணவி ராஜஸ் தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் ஷாஜகான்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சின்மயானந்த், என்னை பலாத்காரம் செய்தார். ஓராண் டுக்கு மேலாக எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் காணொலி உட்பட அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவர் பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றார்.

-  விடுதலை நாளேடு, 11.9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக