வெள்ளி, 23 மார்ச், 2018

தோஷம் நீக்குவதாகக் கூறி பணம் மோசடி செய்த சாமியார் கைது



விருகம்பாக்கம்,மார்ச்23தோஷம் நீக்குவதாகக் கூறி, பொதுமக்களி டம் பணம் மோசடி செய்த  சாமியாரை, காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, விருகம்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர், ரகுராஜ், 76. இவரது மனைவி மங்களம், 70.

இவர்களது வீட்டிற்கு, 15 ஆம் தேதி வந்த, நான்கு பேர், தங்களை பிரபல சாமியார் மற் றும் சீடர்கள் என, அறிமுகம் செய்து கொண்டனர். பின், 'இந்த வீட்டில் வசிப் போருக்கு தோஷம் உள்ளது. அதற்கான நிவர்த்தி பூஜை செய்தால், தோஷம் நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்' என, கூறியுள்ளனர்.

'தோஷம் நீக்கும் பரிகார பூஜைக்கு, 95 ஆயிரம் ரூபாய் செலவாகும். பூஜை பொருட்கள் வாங்க, 5,000 ரூபாய் முன் பணம் தர வேண்டும்' என்றும், அவர்கள்தெரிவித்தனர்.இதை நம்பிய ரகுராஜ், அந்த கும்பலிடம், 5,000 ரூபாய் கொடுத்தார். அவர்களும், பூஜை பொருட்கள் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றனர். ஆனால், வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து, வந்தவர்களால் ஏமாற்றப்பட்டதை ரகுராஜ் உணர்ந்துள்ளார்.

கேமரா பதிவு ஆய்வு

இது குறித்த புகாரின்படி, வழக்கு பதிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய் தனர். இதில்,சாமியார் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் பயன்படுத் திய காரின் பதிவு எண் மூலம் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, விருகம் பாக்கம்நடேசன்நகரில்,காவல் துறையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டபோது, அவ் வழியே வந்த காரை மடக்கி விசாரித்தனர். அதில், அந்த கார், சாமி யார் கும்பல் பயன்படுத்திய கார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர், காரில்வந்தஇருவரையும், காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றனர்.அவர் களிடம் விசாரித்ததில், திருவண் ணாமலை மாவட்டம், போளூ ரைச் சேர்ந்த பிரகாஷ், 52, மற்றும் கார் ஓட்டுனர், ராஜேந்திரன், 36, என்பது தெரியவந்தது. மேலும், சாமியார் போல் தாடி வளர்த்துள்ள பிரகாஷ், ருத்திராட்சை மாலை மற்றும் காவி உடை அணிந்து, தனியாக வசிக்கும் முதியோரிடம், தோஷ பரிகாரம் செய்வதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள  சாமியாரின் கூட்டாளி களான, திருக்கோவிலூரைச் சேர்ந்த கருணாநிதி மற்றும் முருகன் ஆகியோரை, தேடி வருகின்றனர்.
- விடுதலை நாளேடு, 23.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக