நாமக்கல், மார்ச் 17 நாமக் கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்தில் உதவியாளராக பணி யாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் நாமகிரிப்பேட்டை அரு கில் உள்ள அரியா கவுண்டம் பட்டி சண்டி கருப்புசாமி கோவி லில் பூசாரியாகவும் உள்ளார்.
இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கடந்த 13-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 2013ஆ-ம் ஆண்டு முதல் எனது கணவர் அண்ணாதுரை உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தார். அருள்வாக்கு சாமியா ரும், முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளரின் உதவியாளருமான ராஜேந்திரனிடம் எங்களை சிலர் அழைத்து சென்றனர். அவர், யாரோ செய்வினை வைத்து உள்ளனர். நான் மந்தி ரித்து தரும் எண்ணையை உட லில் தடவி வந்தால் குணமாகி விடும் எனக் கூறி 4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார். 6 மாதங்கள் கழித்து பவுர்ணமி பூஜை செய்ய வேண் டும் என்று கூறி ரூ. 80 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அந்த பூஜையில் மஞ்சள் நிற புட வைக் கட்டி கொண்டு கலந்து கொண்டேன்.
ஆனால் சாமியார் ராஜேந் திரன் எந்த எண்ணையும் தர வில்லை. தற்போது அங்குள்ள கோவில் முன்பு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நோய் சரியாகி விடும் எனக்கூறி 5 லட்சம் பணம் கேட்டார். நான் பணம் கொடுக்க மறுத்தேன். அதற்கு அவர் நீ பவுர்ணமி பூஜையன்று உடை மாற்றும் போது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி னார். அரசு ஊழியராக இருக் கும் ராஜேந்திரன் குடும்ப பிரச்சினை காரணமாக வரும் பெண்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்த ஆசியா மரியம் உத்தர விட்டார். இதையடுத்து ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அருள் வாக்கு பெற வரும் பெண் களிடம் தவறாக நடந்து கொள் வதாக சாமியார் ராஜேந்திரன் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
-விடுதலை,17.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக