வியாழன், 3 நவம்பர், 2016

மொபைல் போனுக்காக மகளையே பலி கொடுத்த பாதகன்


கவுகாத்தி, நவ.3 அசாம் மாநிலத்தில், தொலைந்து போன மொபைல் போனை கண்டுபிடிக்க, நான்கு வயது மகளை பலி கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டான்.
அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சர்பானந்தா சோனவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் சாரைதியோ மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், நான்கு வயது சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விசாரணை யில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகின. அந்த பகுதியைச் சேர்ந்த, ஹனுமன் பும்ஜியின் மொபைல் போன் தொலைந்து விட்டது. அதை கண்டு பிடித்து தரும்படி, மந்திரவாதி அப்துல்
ஜலிலை, அவன் அணுகினான். அவன் குடும்ப விவரங்களை கேட்டறிந்த ஜலில், பும்ஜியின், நான்கு வயது மகளை பலி கொடுத்தால், மொபைல் போனை கண்டுபிடித்து விடலாம் என, கூறியுள்ளான்; அதற்கு, பும்ஜி இணக்கம் தெரிவித்தான். இதையடுத்து, அருகில் உள்ள வனப்பகுதியில், சிறுமி பலியிடப்பட்டாள். இந்த சம்பவம் தொடர்பாக, பும்ஜி, மந்திரவாதியின் உதவியாளன் ஆரிபுல் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மந்திரவாதி ஜலில், அவன் சகோதரன் ஜலில் ஆகி யோரை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப் பகுதியில் பெருத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-விடுதலை,3.11.16