திங்கள், 5 பிப்ரவரி, 2018

அம்பலத்துக்கு வருகிறது சாமியார்களின் திருவிளையாடல்கள்




தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக்கொண்டவரான வீரேந்திர தேவ் தீக்சித்  (வயது 70) பக்தர்களிடமிருந்து பணம், நிலம் உள்ளிட்ட பொருள்களை பக்தியின் பெயரால் அபகரித்து வந்தார்.

மேலும், ஆசிரமத்தில் சேவை என்கிற பெயரில் பக்தர்களின் மகள்களையும் ஆசி ரமத்தில் முடக்கியுள்ளார். அதன்பின்னர் அப்பெண்களை அவர்களின் பெற்றோர் காண விரும்பினாலும் அனுமதி மறுக்கப் பட்டது.

ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் பலரும் தங்கள் மகள்களை மீட்கக்கோரி வழக்குரைஞர் ஷலப் குப்தாவிடம் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மகள்களை மீட்கப்போராடிவரும் பெற்றோர்

அப்பெண்களின் பெற்றோர்   தங்களின் மகள்களை மீட்பதற்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு உதவிட யாரு மில்லாத  நிலையில், வழக்குரைஞருக்கு எழுதியுள்ள கடிதங்களில்,

Òஎன் மகள் எங்கே அடைக்கப்பட்டிருக் கிறார் என்று கூட எங்களுக்குத் தெரிய வில்லை. என் மகளை சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை. ஆசிரமத்தில் ஆபாச மான நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக கேள்விப்படுகிறோம்.

மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே எங்கள் மகளை சந்திக்கும்போது, அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆசிரமத் திலேயே தொடர்ந்து இருக்கப்போவதாகவும் கூறிவிடுகிறாள் ஆனால், அங்கே மிகவும் அச்சத்துடனும, பலவீனமாகவும் இருக் கிறாள். ஆசிரமத்தில் உள்ளவர்களின் அழுத்தம் காரணமாகவே அவள் அப்படி சொல்கிறார்கள் என்றே எண்ணுகிறோம். எப்படியாவது எங்கள் மகளை மீட்டுக் கொடுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்ÕÕ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூக அதிகாரங்களுக்கான தொண்டு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் குப்தா அளித்த புகாரின்பேரில், டில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித் ஆசிரமங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண் டனர். அதனையடுத்தே பெற்றோர் தரப்பி லிருந்து தங்களின் மகள்களை மீட்கக்கோரி டில்லி காவல்துறையினருக்கும், வழக்குரைஞர் குப்தாவுக்கும் மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

40ஆண்டு கால சாமியாரின் மோசடிகள்

கடந்த 40 ஆண்டுகளாக சாமியார் தீக்சித்தின் Ôபுனிதமற்றÕ சாம்ராஜ்யத்தின் உள்ளே நடைபெற்றுவரும் அக்கிரமங்கள் குறித்து Ôபக்தர்கள்Õ பலரும் வெளியிட்டு வரு கின்றனர்.

கோரக்பூர் வனிதா எனும் சீடர் கூறியதாவது:

“ஆசிரமத்தில் சீடர்களாக சேர்க்கப்படு பவர்கள் முதலில் அவர்களின் உறவுகளிட மிருந்து பிரிக்கப்படுகின்றனர். வாழ்விணை யர்களிடமிருந்து முற்றிலுமாக எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாத அளவுக்கு பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மிகவும் குறைவான அளவே உணவு அளிக்கப் படுகிறது. சமூக உறவுகளிலிருந்து அறவே துண்டிக்கப்பட்டு, பொது நிகழ்வுகளில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டுவிடுவார்கள்’’ என்கிறார்.

பக்தர்களின் பெயரால் பெண்கள் ஆசிரமத்தில் சென்று சேருவது எப்படி?

75 வயதான சாமியார் வீரேந்திராவின்  பக்தி மற்றும் பாலியல் சதி வலையில் சிக்கியவர்களில் பலரும் பிரம்ம குமாரிகள் ஆவர். ஆசிரமத்தின் முகவர்களாக செயல்பட்டு வந்தவர்கள் அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, நடுத்தர வகுப்புகளைச் சார்ந்தவர்களை சத் சங்கத்தின் பெயரில் அல்லது கீதை வழி என்று கூறிக்கொண்டு   Ôமாதாக்கள்Õ என்றும், Ôபையாக்கள்Õ எனும் பெயரில் ஆசிரமங்களில் அடைக்கப்பட்டனர்.

பிரம்ம குமாரிகள்

லேகி கிருபளானி நிறுவிய பிரம்ம குமாரிகள் அமைப்பினர் வீரேந்திராவின் சீடர்களாக மாற்றப்பட்டனர். வீரேந்திர தீக்சித் சீடர்களுக்கு ஏழு நாள்கள் உபதேசம் செய்வாராம். ஆனால், பலரும் பின்னரே அவர் ஒரு மோசடிக்காரர் என்பதை உணர்ந்தனர்.

சாமியாரிடம் மகளைப் பறிகொடுத்த காவல்துறை உதவியாளர்

சாமியாரின் சீடராகவே இருந்தவரான காவல்துறை உதவி ஆய்வாளர் கே.கார்க் கூறுகையில், “அவரை நாங்கள் கடவுளாக கருதினோம். சீடர்களாக வருபவர்களை மூளைச்சலவை செய்து, அவர்களிடமிருந்து பணம், சொத்துகள் மற்றும் அவர்களின் மகள்களையும் மகிழ்வுடனே அளிக்க செய்துவிடுகிறார்கள்’’ என்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய 16 வயது மகளை ஆசிரமத்துக்கு அனுப்பிவைக்குமாறு காவல்துறை உதவி ஆய்வாளர் கார்க்கிடம் சாமியார்  வீரேந்திர தீக்சித் கூறியபோது, ஆன்மிகத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொள்வாள் என்று நம்பி அனுப்பினோம்.   2003ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காம்பிள் எனும் சிறு நகரில் உள்ளஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டாள். அதன்பிறகு 2004, 2005 என அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வாரந்தோறும் தியானம் செய்வதற்காக ஆசிரமத்துக்கு நாங்கள்  சென்றபோதிலும் அவளைப் பார்க்கவே முடியவில்லை.  இரண்டு முறை மட்டுமே தொலைபேசி மூலமாகமட்டுமே எங்களால் எங்கள் மகளிடம் பேச முடிந்தது’’ என்றார்.

காவல்துறையினராலேயே பெண்களை மீட்க முடியவில்லை

கே.கார்க் ஒரு காவல்துறையில் பயிற்சி களைப் பெற்று, உதவியாளராக இருந்த போதிலும், அவரால் சாமியாரிடமிருந்து தன் மகளை இதுநாள் வரையிலும் மீட்க முடிய வில்லை. அவர் மகள் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டும் இன்னமும் மீட்க முடியவில்லை.

சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித்தின் எளிமையான தோற்றத்தைக் கண்ட மக்கள் ஏமாறுகின்றனர். அவரின் சீடர்களோ அவரை கடவுள் என்றே கூறுகின்றனர். 2020ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று அவர் கூறுவதை நம்புகிறார்கள். அவர்கள் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக நன்கொடை களை வழங்குவதன்மூலம் தங்களையே சாமியாரிடம் ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.

கடவுளைத் தேடினோம்

சாத்தானைத்தான் கண்டோம்

ஆசிரமத்தின் சேவை ஊழியராக (சேவாதர்) இருந்து வருகின்ற பெண் பாண்டா சவீதா. அவரிடமிருந்த பெருமதிப்புமிக்க  சொத்துகள், ரூ.10 லட்சத்தை சாமியாரிடம் கொடுத்தது மட்டுமல்லாமல், 2007ஆம் ஆண்டில் தன் மகளையும் தீக்சித்திடம் ஒப்படைத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் தன் மகளுடன் ஆசிரமத்தைவிட்டு தப்பினார்.

அவர் கூறும்போது, “நாங்கள் கடவுளைத் தேடி சென்றோம். ஆனால் சாத்தானைத்தான் கண்டோம்’’ என்கிறார்.

14 வயது சிறுமிகள் பாதிப்பு

ஆன்மிகக் கல்வி போதனை என்கிற பெயரில், 14 வயது பெண்களை குடும்பத் தினரிடமிருந்து அபகரித்துள்ளார். முதலில் குழந்தைகளை குடும்பத்தினரிடமிருந்து பிரித்து, குடும்பத்தினரை எளிதில் சந்திக்க முடியாதபடி செய்து விடுகிறார்கள்.

டில்லி ஆசிரமத்தில் காவல்துறையினரின் சோதனையின்போது, ஏராளமான சிறைச் சாலைக் கொட்டடிகள் போன்று சிறு சிறு அறைகள் ஆசிரமத்துக்குள் இருந்தன. ஆசிரமம் முழுவதும் கண்காணிப்பு கேம ராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரமத் துக்குள் உள்ள எவர் ஒருவரும் அவர் களுக்குள்ளாகவே எளிதில் சந்தித்துபேசிவிட முடியாத அளவுக்கு கெடுபிடிகள்.

குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள முடியாத கெடுபிடிகள்

ஆசிரமத்தில் உள்ள பெண்களின் குடும்பத்தார் சந்திக்க வேண்டுமானால் பெற்றோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கும் அவர்கள் நான்கு மணி நேரம் காத்திருக்கவேண்டும். பெரிய அறையில்தான் சந்திக்க விரும்புபவர்கள் நிறைய பேர் முன்னிலையில்தான் சந்தித்துக்கொள்ள வேண்டும். மகளிடம் அந்தரங்கமாக அவளின் தாயால்கூட பேச முடியாது. ஆசிரமத்தில் உள்ள தங்களின் மகள்களைக் காண விரும்புவோர் ஆசிரமம் உள்ள டில்லியிலே தங்க நேரிடும். தெலங் கானா மாநிலத்திலிருந்து வரும் பெற்றோர் தங்கள் மகளைக் காணவேண்டும் என்று விரும்பினால்,  அவர்கள் டில்லியிலேயே தங்கிவிட வேண்டியதுதான். காரணம், இரண்டு ஆண்டுகளில் தொடர் முயற்சியின்பேரில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே சந்திப்பதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்

ஆராய்ச்சியாளர்

அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவரான தங்களின் மகள் ஆசிரமத்தில் இருந்தார்.  ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுகுனு பகுதியைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மகளை சந்திப்பதற்கு அனுமதி கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்   அவர்கள் தங்கள் மகளைச் சந்திப்பதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், தங்கள் மகள் 2015ஆம் ஆண்டில் ஜூலை மாதத்திலேயே  திடீரென காணாமற்போனாள்.

ரோகினி ஆசிரமத்தில் சோதனையில்

50 பெண்கள் மீட்பு

சமூக அதிகாரத்துக்கான அறக்கட்ட ளையின் முயற்சியால் சாமியார்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.   19.12.2017 அன்று ரோகினி ஆசிரமத்தில் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டது. சோதனையின்போது ஆசிரமத்தி லிருந்து 50 பெண்கள் மீட்கப்பட்டனர்.

பெண்களில் வயதானவர்களை ஆசிர மத்தைவிட்டு வெளியேறவிடாமல்,  சேவை ஊழியர் பணி (சேவாதர்) அளிக்கப்படுகிறது. பேகன்கள், மாதாக்கள் எனப்படும்  ஆசிர மத்தின் அறைகளில் அடைக்கப்பட்டு இருப்பார்கள்.  அவர்களை வயதான பெண்கள் எவரும் சந்திக்க முடியாது.

ஆசிரமத்தில் இளம் பெண்கள் Ôபேகன் களாகÕ அடைக்கப்பட்டிருப்பார்கள். சவீதாவின் மகளும் பேகனாகவே அடைக்கப்பட்டி ருந்தார். அதிகாலை 2 மணியிலிருந்து அதிகாலை 2.30 மணி வரை  தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்ற சாமியாரின் உபதேசங்களை கவனிக்க வேண்டும். அடுத்த இரண்டு மணி நேரங்களாக சாமியாரின் படத்தையே உற்றுநோக்கி தியானம் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த அதிகாலை நேரத்திலேயே குளித்து, அதிகாலை 4 மணிக்கு தயாராக வேண்டும். நாள்முழுவதும் சாமியாரின் உபதேசங்களை (முரளி-போதனை) கேட்கவேண்டும். பெற்றோருடன் போக விரும்பும் பெண்கள் சபிக்கப்படுவார்கள் என்று போதனையின்போது சாமியார் அச்சுறுத்துவாராம்.

பிரம்ம குமாரிகள் நிறுவனர் லேக் ராஜ் கிருபளானிக்கு சிவன் ஞானத்தை அளித்த தாகக் கூறியே அவருடைய போதனைகளை ÔமுரளிÕ என்று குறிப்பிடப்படுவதைப்போல், சாமியார் வீரேந்திர தேவ் தீக்சித் உபதே சங்களையும் ÔமுரளிÕ என்றே ஆசிரமத்தில் கூறிவருகின்றனர்.

பெண்களுடன் இரவுப்பொழுதில்

Ôகுப்த பிரசாதமாம்Õ

ஆசிரமத்துக்கு சாமியார் வரும்போ தெல்லாம் 8 முதல் 10 பேரை தேர்வு செய்து இரவு நேரத்தில் Ôகுப்த பிரசாதம்Õ அளிப்பாராம். காவல்துறை உதவி ஆய்வாளர் கே.கர்க், சவீதா ஆகியோர் கூறியதன்படி சாமியார் பாலியல் தொல்லைகளை பெண் சீடர்களுக்கு அளித்து வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

16,108 ராணிகளாம்

சவீதா கூறுகையில், வீரேந்திரா தேவ் தீக்சித் தன்னை கிருஷ்ணன் என்று கூறிக்கொள்வதால், Ôகுப்த பிரசாதம்Õ அளிப் பதற்காக தேர்வு செய்யப்படும் பெண்கள் ÔராணிÕ என்று அழைக்கப்படுகின்றனர். கிருஷ்ணனைப்போலவே சாமியாருக்கு 16,108 ராணிகள் உள்ளனர். ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்ட பெண்களின் மாதவிலக்கு பதிவுகள் பராமரிக்கப்படுகின்றன’’ என்றார்.

ஆசிரமத்தில் உள்ள பெண்கள் எழுதி வைத்த புகார்களாக தாள்கள் கண்டெடுக்கப் பட்டன. அவற்றில், அப்பெண்களின் உறவி னர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள் ளது. மோசமாக நடத்துவது, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்கள் அவற்றில் கூறப்பட்டுள்ளன.

வழக்குரைஞர் குப்தா கூறுகையில், “பெண்கள் எழுதிய கடிதங்கள், புகார்களில் கூறப்பட்டவர்களின் பெயர்கள் அனைத்தும் பார்வையாளர் பதிவேட்டில் அனுமதிக்கப் பட்ட ஆண்களின் பெயர்களாகவே உள்ளன. இது சந்தேகத்துக்கிடமானதாக உள்ளது’’ என்றார்.

சாமியார்களை கடவுளாக கருதும் நோய்

பெண்கள் ஏராளமானவர்கள் சாமியார் தீக்சித்தை  கடவுள் என்று நம்புவது அதிர்ச்சிகரமானதுமல்ல புதியதுமல்ல. ஏற்கெனவே, சாமியார்களாக உள்ள ஆசாராம், ராம் ரகீம், ராம்பால் ஆகியோருக்கும் சீடர்களாக, பக்தர்களாக ஏராளமானவர்கள் இருந்துள்ளனர்.

சமூகவியலாளர் சிவ விஸ்வநாதன் கூறுகையில், வாழ்க்கைமுறைகள்குறித்த மக்களின் தேடுதல்களால்தான், சாமியார்களை கடவுள் என்று கருதுகின்ற தன்மையானது அதிகரித்து வருகிறது. முன்பு அரசியல் வாதிகள்  மக்களை கவர்ந்தார்கள். இப்போது  மதத்தை மய்யப்படுத்தியுள்ளனர். குரு என்பவர் அனைத்தையும் செய்யும் வலிமை பொருந்தியவர் என்று கருதுவதால் இது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன என்றார்.

சாமியாரின் ஆசிரமங்கள்

1976-77இல் அத்யாத் மிக் விஷ்வவித்யாலயா அல்லது ஆன்மிக பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
பன்னாட்டளவில் 25ஆயிரம் பக்தர்கள் உள்ளனர்.

இந்தியா, நேபாளத்தில் 160 ஆசிரமங்கள்

ஆசிரமத்தில் 60 முதல் 70 விழுக்காட்டளவில் பெண்களே உள்ளனர். மாதாக்கள், பேகன்கள் நிலைகளிலிருந்து சிவசக்தியாக உயர்த்துவதாகக் உறுதி கூறப்பட்டது.

- விடுதலை ஞாயிறு மலர், 27.1.18

வியாழன், 1 பிப்ரவரி, 2018

சிறீவில்லிபுத்தூர் ‘ஜீயரின்' ரவுடித்தனப் பேச்சு

ஆண்டாளைப்பற்றிப் பேசினால் சோடா பாட்டில் வீசுவோம்; கல்லெறிவோம்!

சிறீவில்லிபுத்தூர் ‘ஜீயரின்' ரவுடித்தனப் பேச்சு



விருதுநகர், ஜன 27 கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எதிரான கண்டன கூட்டத்தில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும்,கல் எறியத்தெரியும், என சிறீ வில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியுள்ளார்.

‘தினமணி' நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியொன்றில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றினார். அதில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி பேசினார். அந்த உரையில், வைரமுத்து ஆண் டாள் குறித்து தரமற்ற வார்த்தைகளில் பேசியதாக கூறி, வைரமுத்துவிற்கு எதிராக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக, ஜீயர் சடகோப ராமானுஜர், வைரமுத்து சிறீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்.

இந்நிலையில், வைரமுத்துவுக்கு எதிராக ஆண் டாள் கோவிலில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் மீண்டும் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது, ‘‘குளத்தூர் பகுதியில் ஆண்டாள் குறித்து 3 ஆம் தேதி ஒருவன் பேசப் போறானாம்; ஏற்கெனவே ஒருத்தன் (வைரமுத்து) ராஜபாளையத்தில் பேசிவிட்டுச் சென்று விட்டான். அதற்கான பலனை அனுபவிக்கிறான். இப்போது குளத்தூரில் பேசப்போகிறானாம்.

சோடா பாட்டில் வீசுவோம்!

குளத்தூரில் மட்டுமல்ல, உலகின் எந்த இடத்திலும் ஆண்டாளைப்பற்றிப் பேசக்கூடாது; எந்த ஒரு இந்துக்கடவுள் குறித்தும் பேசக்கூடாது. இனி யாரும் கடவுள் குறித்து ரோட்டில் மேடை போட்டுப் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் நாம் அங்கே போகணும். இத்தனை நாள் சாமியார் எல்லாம் சும்மா உட் கார்ந்திருந்தோம். இனிமேல் நாங்களும் கல்லெறிய முடியும், கண்ணாடி உடைப்போம், சோடா பாட்டில் எறிவோம்.

குடியரசு தினம், குடிப்பதற்குத்தான் இருக்கிறது. இன்று 26 ஆம் தேதி, குடியரசு தினம். ஆனால், டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கின்றன'' என்றார்.

அப்போது, அருகிலிருந்தவர்கள் உற்சாகமாக சிரித்தனர். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது..

ஜீயரின் இந்த ரவுடித்தனப் பேச்சுக்காக பூணூல் அறுப்புப் போன்ற எண்ணம் இயக்கத் திற்கு அப்பாற்பட்டவர்களிடம் எழுந்தால் என்ன செய்வது என்று கவலைப்பட வேண்டியுள்ளது. வன்முறை இருகூர் உள்ள ஆயுதம் அல்லவா!
- விடுதலை நாளேடு, 27.1.18