செவ்வாய், 28 மே, 2019

பில்லி சூன்ய ஏமாற்று சாமியார் பெண்ணை சூறையாடிய கேவலம்



விழுப்புரம், மே28, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட  சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட் டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆகும். திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாக வும் கூறி வந்துள்ளார்.

இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத் தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களில் வலம் வந்தார். அவரை நம்பியவர்களில் பெண் கள் பலரும் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடிச் சென் றுள்ளனர். அந்த சமயத்தில் அவர் களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடு களுக்கு சென்று வந்தார். இதில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களை கணவரிடமிருந்து பிரித்து, தன்வச மாக்கி குடும்பம் நடத்தி வந்ததாக வும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடியும் சென்றுள்ளார்.

தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

மாந்திரீகம், பில்லி சூனியம் நீக்குவதாக கூறி திண்டிவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களான பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள் ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள் ளார். பில்லி சூனியம் எடுப்பதுபோல் சென்று, பெண்களையும் ஏமாற்றி வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்பேசிமூலம் தொடர்பு கொண்டார். அப்போது தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரிசெய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென் றார். அங்கு அவர்களது பிரச்சி னைகள் மற்றும் குடும்பத்தில் உள்ள வர்களின் விவரங்களை கேட்டறிந் தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய் விடும் என்று தெரிவித்தார். கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, எனவே எனது பாதுகாப்பில் அவள் இருக்க வேண் டும் என்று தெரிவித்தார்.

இதை நம்பிய அவர்கள், தங் களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த இளம்பெண்ணை சாமியார் ஓங்கூருக்கு அழைத்து வந்தார். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-ஆவது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகை யால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.

இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் ஆசைக்கு இளம் பெண்ணும் சம்மதிக்கவில்லை. எனவே அவரிடம், உனது அண் ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம் பெண் ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்.

இது குறித்து தனது தந்தையிடம் இளம்பெண் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் விஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

பாலியல் வன்முறை புகாரில் சாமியார் மணியும், அவருக்கு உத விய பெண் ஹேமாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையினர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு மோசடிகளை செய்து வந்துள்ளார் என்பது தெரிய வந் தது. ஹேமாவை அவரது கணவரி டம் இருந்து பிரித்து வந்து தன்வசப் படுத்திக்கொண்டதும் தெரியவந் தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப் பிலையுடன் வலம் வந்துள்ளார்.அவர் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் எனும் கோணத்தில்  காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 28.5.19

வெள்ளி, 10 மே, 2019

இந்திய சாமியாரின் ஆபாசக் கைவரிசை!

ஆஸ்திரேலியாவில் ஆசாமி கைது!




பாலியல் தொடர்பான குற்றத்திற்காக கைதாகி சிட்னி சிறையில் உள்ள சாமியார்


ஆனந்த் கிரியுடன் உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்.


சிட்னி,மே10இந்தியாவைச்சேர்ந்த சாமி யார் ஆனந்த் கிரி என்பவர் பாலியல் தொடர்பான குற்றத்திற்காக ஆஸ்தி ரேலியா நாட்டில் கைது செய்யப்பட் டுள்ளார். இவரது பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அல காபாத் நகரத்திலுள்ள அனுமான் கோயிலில் சாமியாராக இருப்பவர் ஆனந்த் கிரி. இவர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருந்தபோது பெண் ணிடம் தவறான செய்கையில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவில் கம்பி எண்ணுகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூட்டி ஹில் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் யாகம் செய்ய சென்றுள்ளார். அப்போது 34 வயதுள்ள ஒரு பெண் ணிடம் தவறான நோக்கத்தோடு உடல் பாகத்தில் கை வைத்துள்ளார். இதை அந்தப் பெண் தட்டிக்கேட்டார். உடனே அவரும், அவருடன் சென்றவர்களும் அந்தப்பெண்ணை தாக்கினார்கள். இதே போல்  2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 29 வயதுடைய ஒரு பெண்ணிடம் தனது குறும்புத்தனத்தைக் காட்டினார். இந்த இரண்டு பேரும் சிட்னி காவல்துறையிடம் புகார் அளித்தி ருந்தனர். இந்த நிலையில் இவர் மீண்டும் சிட்னி சென்றார்.

அங்குள்ள ஒரு பொது இடத்தில் மதம் தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது அவரை சிட்னி காவ லர்கள் கைது செய்தனர். பின்னர் பிணையில் விடுவிக்குமாறு சிட்னி நீதிமன்றத்தில் இவர் சார்பாக வழக் குரைஞர்கள் மனுதாக்கல் செய்தனர். ஆனால், நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது. மீண்டும் சிறை வைக் கப்பட்டுள்ள இவர் மீதான வழக்கை ஜூன் 23 ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய தூதரகமே வழக்கிற்கு உதவியது.


சாமியார் மீதான பாலியல் குற்றச் சாட்டு மற்றும் பெண்ணைத் தாக்கியது தொடர்பான வழக்கில் இந்திய தூத ரகமே சாமியார் ஆனந்த கிரிக்கு ஆதர வாக வழக்குரைஞர்களை அமர்த்தி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் விசா குளறுபடி களால் மாணவர்கள் பலர் கல்வியை பாதியிலேயே விட்டு விட்டு நாடு திரும்பிய நிலையில் இதற்கு உதவாத இந்திய தூதரகம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சாமியாருக்குத் தொடர்ந்து விசா வழங்கியதுமல்லாமல் அவருக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கும் சென்று வாதாடியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

- விடுதலை நாளேடு, 10.5.19