ரோம், ஜூலை 15-_ பாதிரிமார்களில் ஏறக் குறைய இரண்டு விழுக் காட்டளவினர்மீது பாலி யல் வன்முறைக் குற்றச் சாட்டு உள்ளதாக போப் பிரான்சீஸ் தெரிவித் துள்ளார்.
இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மதக் குருமார்கள்மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருப்பதை, போப்பின் திருச்சபை இல்லத்திலேயே தொழுநோயாக உள்ளது என்றும் வருணித்துள்ளார்.
லா ரிபப்ளிகா நாளி தழின் நிறுவனரும், 90 வயதுள்ள நாத்திகருமான யூஜினோ ஸ்கால்ஃபரி பல முறை போப்புகளைக் கண்டித்து எழுதி வந்துள் ளார். யூஜினோவுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாட லில் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது,என்னுடன் பணியாற்றுபவர்களில் என்னிடம் (சிறார்களிடம் பாலியல் வன்முறைக்கு எதிராக இருப்பதால்) மோதல் போக்கில் இருக் கிறார்கள். குறிப்பாக சர்ச்சுகளில் சிறார்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபடுவோர் இரண்டு விழுக்காட் டளவில் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விவரத்தகவல்கள் என்னை புதிய சிந்தனைகளுக்கான நடவடிக்கைகளில் தள்ள வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இந்தத் தகவல் புதைகுழியாகவே பார்க்கப்படுகிறது என்று போப் கூறினார்.
சர்ச்சுகள் குறித்த 2012 ஆண்டின் புள்ளி விவரங் களின்படி, கத்தோலிக்கக் கிறிஸ்துவ பாதிரிகள் 4,14,000 பேர் உலகம் முழுவதும் உள்ளனர்.
வாடிகன் தொடர்பா ளர் ஃபெடரிகோ லோம் பார்டி கூறும்போது, லா ரிபப்ளிகா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் களை முழுமையாக போப் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. சிறுவர்கள்மீதான பாலியல் வன்முறைகுறித்த புகாரில் கர்தினால்கள் இருப்பதாகக் கூறப்படுவ தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சிறுவர்களுக்கான வாசகர்களை கவர்வதற் காக அப்படி வெளியிட் டுள்ளது என்று கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக 26 பெண்கள் போப்பிடம் பாதிரிமார் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவும், மதப்பணி களில் ஈடுபடும் பெண் களும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,15.7.14