சேலம், அக். 30- பெண்களை மயக்கி பாலியல் வன்முறை செய்த, சாமியாரை, சேலத்தில், காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன், (வயது 54) வீட்டில் கோவில் ஏற்படுத்தி, மாந்த்ரீகத் தொழில் செய்து வந்தார். ஜோதிடம் மட்டுமின்றி, மனோவசியம் செய்து நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி, பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஜோதிடம் பார்க்க வந்த பெண்களை, சாமியார் நாகராஜன் மயக்கி, பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந் தது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை படம் எடுத்து, மிரட்டுவதாகவும் தெரியவந்தது. இது குறித்து, அறிந்த அப்பகுதியினர், நாகராஜனை கட்டிப்போட்டு, அவ ருக்கு பக்தர்கள் அளித்த பொருட்களை அள்ளி சென்றனர். அவர்கள், நேற்று முன்தினம், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், அப்பகுதி யைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்களை, பாலியல் வன்முறைசெய்ததோடு, படம் பிடித்து, கைப்பேசியில் மிரட் டல் விடுத்ததும், பணம், நகைகளை பறித்ததும், தெரியவந்தது. இதையடுத்து, சாமியார் நாகராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். நாகராஜனை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அள்ளிச்சென்ற ஒருவரையும், காவல்துறையினர் கைதுசெய்தனர். தற்போது, சாமியாரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் குறித்த விவரங்களை, காவல்துறையினர் சேகரித்துள் ளனர். நாகராஜனிடம், காவல்துறையினர் தொடர்ந்து விசா ரித்து வருகின்றனர்.
- விடுதலை நாளேடு,30.10.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக