ஞாயிறு, 25 ஜூலை, 2021

சிக்கினார் திருச்சி சாமியார்!

 

புதுடில்லிஜூலை 22 ரவுடிகள் ‘என்கவுன்ட்டர்பட்டியல் தொடர் பான ஒலிப்பதிவு சர்ச்சையில் சிக்கிய திருச்சி அல்லித்துறை சாமியாரையும்அவருடன் அலை பேசியில் பேசியதாகக் கூறப் படும் வழக்குரைஞரையும் காவல் துறையினர் நேற்று (21.7.2021) கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (32). தேஜஸ் சுவாமிகள் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னி யம்மன் கோயில் பகுதியில் வசித்தபடி ஜாதகம் பார்த்து வருகிறார்வெளிநாட்டு பிரமுகர்கள்அரசியல் பிரபலங் கள்தொழிலதிபர்கள் உட்பட முக்கிய நபர்கள் அதிகளவில் வந்து சென்றதால் குறுகிய காலத்தில் பிரபலமானார்.

இந்நிலையில் ரவுடிகள் ‘என்கவுன்ட்டர்‘ பட்டியல் தொடர்பாகவும்முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு சைரன் காரில் சென்றது தொடர்பாகவும் வழக்குரைஞர் கார்த்திக் என்பவரிடம் சாமியார் பேசுவதுபோன்ற ஒலி பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினஇதுகுறித்து சாமியாரிடம் ஜீயபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர்அப்போது தனக்கும் அந்த ஒலிபதிவுக்கும் தொடர்புஇல்லை என சாமியார் தெரிவித்தார்.

மேலும்தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறு செய்துஇருப்பதாக சோமரசம்பேட்டை காவல் நிலையம்சைபர் கிரைம்பிரிவு ஆகியவற்றில் சாமியாரும் கடந்த 12ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி தனிப்படை காவல்துறையினர் நேற்று  (21.7.2021) அதிகாலை அல்லித்துறையில் உள்ள வீட்டுக்குச் சென்று சாமியாரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல ரவுடிகள் பட்டியல் குறித்து சாமியாருடன் அலைபேசியில் பேசியதாக கூறப்படும் வழக்குரைஞரான கார்த்திக் என்பவரையும் பிடித்து விசாரித்தனர்அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் பொன்மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சாமியார்வழக்குரைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போதுபொன் மலை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜைஅதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கொட்டப் பட்டு ஜெய்பணம் கேட்டுமிரட்டியுள்ளார்இதுதொடர்பான புகாரின்பேரில் ரவுடியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதையடுத்துஇந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க உதவுமாறு அல்லித்துறை சாமியாரிடம் ரவுடி கொட்டப்பட்டு ஜெய் முறையிட்டதைத் தொடர்ந்துபுகார் அளித்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜை சாமியார்வழக்குரைஞர் கார்த்திக் உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர்இந்தப் புகாரின் அடிப்படையிலேயே சாமியார்ரவுடி கொட்டப்பட்டு ஜெய்வழக்குரைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

1 கருத்து:

  1. We have been pleasantly surprised to discover numerous slot themes, able to take you to totally different worlds, even while you’re vegging out on the couch! Explore ancient Greek mythology, take a trip to Egypt, or return to classic casinos with these fruity sevens. Determine aggressive salary ranges, compare employee compensation with market benchmarks, and get immediate entry to 1xbet dependable salary survey information online. Check out ERI’s Salary Assessor to get differential pay for night shifts, day shifts, and swing shifts. Using ERI’s strong database, have the ability to|you possibly can} accurately price jobs based on industry-specific shift differential insurance policies. ERI compiles shift differential pay information based on salary survey information to assist customers discover dependable compensation info.

    பதிலளிநீக்கு