ஞாயிறு, 2 ஜூலை, 2017

அர்ச்சகர்மீது பாலியல் வன்முறை நில அபகரிப்பு புகார் - வழக்கு

பத்ரிநாத், ஜூலை 2 பத்ரிநாத் கோயிலின் மேனாள் தலைமை அர்ச்சகர்  மற்றும் பத்ரிநாத், கேதார்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அலுவலர் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரினியான ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சாமியாரிணி சமோலி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பத்ரிநாத் கோயில் மேனாள்  தலைமைப்பூசாரியான விஷ்ணு பிரசாத் நம்பூதிரி மற்றும் தலைமை செயல் அலுவலர் பி.டி.சிங் ஆகிய இருவர்மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சமோலி காவல்துறை கண்காணிப்பாளர் திருப்தி பட் கூறும்போது, “மும்பையைச் சேர்ந்த சாமியாரிணி என்பவர் பத்ரிநாத் கோயிலுக்கு கடந்த மாதம் சென்றார். அப்போது அர்ச்சகர்  விஷ்ணு பிரசாத் நம்பூதிரியும், பத்ரிநாத் கோயில் தலைமை நிர்வாக செயல் அலுவலர் பி.டி.சிங்கும் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “பத்ரிநாத் கோயிலின் மேனாள் தலைமை அர்ச்சகர் விஷ்ணு பிரசாத் நம்பூதிரியும், பத்ரிநாத் கோயில் தலைமை செயல் அலுவலர் பி.டி.சிங் இருவரும் சேர்ந்து மும்பை சாமியாரிணியின் சொத்துகளை அபகரிக்க முயன்றுள்ளனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக அய்யத்துக்கிடமான வகையில் சாமியாரிணியின் குடும்பத்திலிருந்து அய்ந்து பேர் காணாமற் போயுள்ளனர். சாமியாரிணியின் குடும்பத்தினர் காணாமற்போனதுகுறித்து விசாரணை செய்யவும் ஒரு குழு மும்பைக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். இதேபோன்று கடந்த காலங்களிலும் பாலியல் புகாருக்கு பத்ரிநாத் கோயில் மேனாள் தலைமை அர்ச்சகர் கேசவ் பிரசாத் நம்பூதிரி என்பவர் உள்ளானார்.  கடந்த 2014 ஆம் ஆண்டில் டில்லியில் விடுதியில் குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட புகாரின்பேரில் காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,2.7.17

ஞாயிறு, 21 மே, 2017

கேரளாவில் பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண்: முதல்வர் பாராட்டு




திருவனந்தபுரம், மே 21- தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை இளம்பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தைரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.
கேரள தலைநகர் திருவனந் தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது தந்தை நீண்டகாலமாக படுக்கையாக உள்ளார். இத னால் வேதனையில் இருந்த இந்த குடும்பத்துக்கு கணேசா னந்தா தீர்த்தபாடம் என்கிற ஹரிசுவாமி (வயது 54) என்ற சாமியார் கடந்த சில ஆண்டு களுக்கு முன் அறிமுகமானார்.
கொல்லத்தில் உள்ள சட்டம்பி சுவாமி ஆசிரமத்தை சேர்ந்தவர் என்று அந்த இளம் பெண்ணின் தாயிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த சாமியார் அடிக்கடி இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார். அவரை நம்பிய இளம் பெண்ணின் தாயும், தங்கள் வீட்டில் அடிக்கடி பூஜை செய் யுமாறு சாமியாரை கேட்டுக் கொண்டார்.
அதன்பேரில் அந்த வீட் டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் வேதனைக்குள் ளான அந்த இளம்பெண், காம வெறி பிடித்த சாமியாருக்கு தக்க தண்டனை வழங்க முடிவு செய்தார். இதற்கான தருணம் பார்த்து அவர் காத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவிலும் சாமியார் அந்த இளம்பெண்ணின் வீட் டுக்கு சென்றார். அங்கு அவர் இளம்பெண்ணை வலுக்கட் டாயமாக பாலியல் வன்கலவி செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்தார்.
இதை எதிர்பாராத ஹரி சுவாமி வலி தாங்காமல் அல றித்துடித்தார். இதனால் அதிர்ச் சியடைந்த அந்த இளம்பெண், சாமியார் தன்னை கொன்று விடுவார் என்ற நோக்கில் உடனே அவசர எண் 100 மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சாமியாரை மீட்டு திருவனந்தபுரம் மருத் துவக்கல்லூரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு அவ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் குழாய் சீரமைக்கப்பட் டது.
பின்னர் சாமியார் ஹரி சுவாமி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் நடத்தப்பட்ட விசார ணையில், அந்த இளம்பெண் 10ஆம் வகுப்பிலிருந்தே சாமி யாரின் இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தெரிய வந் தது. எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த குற்றத்தை மறைக்க முயன்றதாக இளம் பெண்ணின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கேர ளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தன்னை பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு கள் குவிகிறது. கேரள முதல்-வர் பினராயி விஜயன் இளம் பெண்ணின் தீரச்செயலை பாராட்டியுள்ளார்.
-விடுதலை,21.5.17

சனி, 20 மே, 2017

திங்கள், 3 ஏப்ரல், 2017

கூடுவாஞ்சேரி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: காவல்துறையினரிடம் சிக்கிய சாமியார்

கூடுவாஞ்சேரி, ஏப். 3- கூடுவாஞ்சேரியில், பரிகாரத்திற்கு வந்த பெண்ணிடம், தவறாக நடக்க முயன்று, கொலை முயற்சியில் ஈடுபட்ட  சாமியார், கைது செய்யப்பட்டான்.

கூடுவாஞ்சேரி, வள்ளி நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (34). பல்லாவரத்தில், தையலராக பணியாற்றுகிறார். இவர் மனைவி துர்கா தேவி (24). இவர்களுக்கு, 2 வயதில், மகன் உள்ளான். துர்கா தேவிக்கு, அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டுஉள்ளது. பலவித மருந் துகள் எடுத்தும், பிரச்சினை தீரவில்லை. நந்திவரம், ராணி அண்ணாநகரில் உள்ள அண் ணாமலை (48) என்ற சாமியா ரிடம், அருள்வாக்கு பெற்றால் குணமாகும் என, சிலர் கூறி யுள்ளனர்.

அதன்படி, ஜனவரியில், துர்கா தேவி, அவர் பாட்டியு டன் அண்ணாமலை சாமியாரு டன் சென்றுள்ளார். அப்போது, அண்ணாமலை, துர்கா தேவி யிடம், அத்துமீறியபாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளான். அதைத் தடுக்க முயன்ற துர்கா தேவியின் கழுத்தையும் நெரிக்க முயன்று உள்ளான்.

இதை யாரிடமும் கூறி னால், குழந்தையை முடமாக்கி விடுவேன் என, மிரட்டியுள் ளான். இதனால், பயந்த துர்கா தேவி, அங்கிருந்து தப்பி, பாட்டியுடன் வீடு திரும்பினார். இதுகுறித்து, அவர் யாரிடமும் கூறவில்லை. ஆனால், கடந்த சிலநாட்களாக, உடல் மற்றும் மனதளவில், துர்காதேவி அதி கமாக சோர்வுற்றுள்ளார். இரண்டு முறை தற்கொலை முயற்சியி லும் ஈடுபட்டுள்ளார்.

இதையறிந்த அவரது கண வர் சந்தோஷ் குமார், நேற்று முன்தினம், துர்காதேவியிடம் விசாரிக்கையில்,  சாமியார் அண்ணாமலையின் அட்டூழி யங்களை கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த சந்தோஷ் குமார் மற்றும் அப்பகுதிவாசி கள், சாமியாரைப் பிடித்து, கூடு வாஞ்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சந்தோஷ் குமார் புகாரின் அடிப்படை யில், அண்ணாமலையிடம், கூடுவாஞ்சேரி காவல்துறை ஆய்வாளர் ரவிக்குமார் விசா ரணை மேற்கொண்டார்.

விசாரணையில் தெரியவந்த தாவது:  சாமியார் அண்ணா மலை, சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவன். சில ஆண்டுகளுக்கு முன், நந்திவரம் அரசுப் பள்ளி அருகே,டூவீலர் மெக்கானிக்காக பணி செய்து உள்ளான்.அதிக முடி வளர்த்து, கொண்டை போட்டு வலம் வந்த இவன், பார்ப்பதற்கு சாமியார் போல் தோற்றமளித்துள்ளான்.

இதையே சாதகமாக்கி, தொழிலாகவும் தொடங்கியுள் ளான்.நந்திவரம், ராணி அண் ணாநகரில், ஆசிரமம் போன்ற அமைப்பை உருவாக்கி, அங்கு, அருள்வாக்கு கூறி, பணம் சம் பாதித்துவந்துள்ளான். இந் நிலையில், துர்கா தேவியிடம் அத்துமீறியதால், சிக்கியுள் ளான். இது போல பலரிடம் அவன், தவறாக நடக்க முயன் றதாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளான்.

இவ்வாறு காவல்துறையினர் கூறினர். சாமியார் அண் ணாமலை மீது, கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவு களின் கீழ், வழக்குப்பதிவு செய்து, அவனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்த னர்.

-விடுதலை,3.4.17

வெள்ளி, 17 மார்ச், 2017

அருள் வாக்கு கூறுவதாக சாமியார் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்



நாமக்கல், மார்ச் 17 நாமக் கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அலுவ லகத்தில்  உதவியாளராக பணி யாற்றி வந்தவர் ராஜேந்திரன். இவர் நாமகிரிப்பேட்டை அரு கில் உள்ள அரியா கவுண்டம் பட்டி சண்டி கருப்புசாமி கோவி லில் பூசாரியாகவும் உள்ளார்.

இவர் மீது திருச்செங்கோடு கொல்லப்பட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை மனைவி கடந்த 13-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 2013ஆ-ம் ஆண்டு முதல்  எனது கணவர் அண்ணாதுரை உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தார்.  அருள்வாக்கு சாமியா ரும், முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளரின் உதவியாளருமான ராஜேந்திரனிடம்  எங்களை சிலர் அழைத்து சென்றனர். அவர், யாரோ செய்வினை வைத்து உள்ளனர். நான் மந்தி ரித்து தரும் எண்ணையை உட லில் தடவி வந்தால் குணமாகி விடும் எனக் கூறி  4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார். 6 மாதங்கள் கழித்து பவுர்ணமி பூஜை செய்ய வேண் டும் என்று கூறி ரூ. 80 ஆயிரம் பெற்றுக் கொண்டார். அந்த பூஜையில் மஞ்சள் நிற புட வைக் கட்டி கொண்டு கலந்து கொண்டேன்.

ஆனால் சாமியார் ராஜேந் திரன் எந்த எண்ணையும் தர வில்லை. தற்போது அங்குள்ள கோவில் முன்பு ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நோய் சரியாகி விடும் எனக்கூறி  5 லட்சம் பணம் கேட்டார். நான் பணம் கொடுக்க மறுத்தேன்.  அதற்கு அவர் நீ பவுர்ணமி பூஜையன்று உடை மாற்றும் போது எடுக்கப்பட்ட  ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி னார். அரசு ஊழியராக இருக் கும் ராஜேந்திரன் குடும்ப பிரச்சினை காரணமாக வரும் பெண்களை மிரட்டி பணம் வசூலித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்த ஆசியா மரியம் உத்தர விட்டார்.  இதையடுத்து ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் அருள் வாக்கு பெற வரும் பெண் களிடம் தவறாக நடந்து கொள் வதாக சாமியார் ராஜேந்திரன் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

-விடுதலை,17.3.17

வியாழன், 29 டிசம்பர், 2016

பாதிரிமார்களில் இரண்டு விழுக்காட்டினருக்குமேல் பாலியல் வன்முறை : ஃபோப் ஒப்புதல்!


ரோம், ஜூலை 15-_ பாதிரிமார்களில் ஏறக் குறைய இரண்டு விழுக் காட்டளவினர்மீது பாலி யல் வன்முறைக் குற்றச் சாட்டு உள்ளதாக போப் பிரான்சீஸ் தெரிவித் துள்ளார்.

இத்தாலி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மதக் குருமார்கள்மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருப்பதை, போப்பின் திருச்சபை இல்லத்திலேயே தொழுநோயாக உள்ளது என்றும் வருணித்துள்ளார்.

லா ரிபப்ளிகா நாளி தழின் நிறுவனரும், 90 வயதுள்ள நாத்திகருமான யூஜினோ ஸ்கால்ஃபரி பல முறை போப்புகளைக் கண்டித்து எழுதி வந்துள் ளார். யூஜினோவுடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாட லில் போப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது,என்னுடன் பணியாற்றுபவர்களில் என்னிடம் (சிறார்களிடம் பாலியல் வன்முறைக்கு எதிராக இருப்பதால்) மோதல் போக்கில் இருக் கிறார்கள். குறிப்பாக சர்ச்சுகளில் சிறார்கள் மீதான பாலியல் வன் முறைகளில் ஈடுபடுவோர் இரண்டு விழுக்காட் டளவில் உள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விவரத்தகவல்கள் என்னை புதிய சிந்தனைகளுக்கான நடவடிக்கைகளில் தள்ள வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இந்தத் தகவல் புதைகுழியாகவே பார்க்கப்படுகிறது என்று போப் கூறினார்.

சர்ச்சுகள் குறித்த 2012 ஆண்டின் புள்ளி விவரங் களின்படி, கத்தோலிக்கக் கிறிஸ்துவ பாதிரிகள் 4,14,000 பேர் உலகம் முழுவதும் உள்ளனர்.

வாடிகன் தொடர்பா ளர் ஃபெடரிகோ லோம் பார்டி கூறும்போது, லா ரிபப்ளிகா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் களை முழுமையாக போப் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. சிறுவர்கள்மீதான பாலியல் வன்முறைகுறித்த புகாரில் கர்தினால்கள் இருப்பதாகக் கூறப்படுவ தற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. சிறுவர்களுக்கான வாசகர்களை  கவர்வதற் காக அப்படி வெளியிட் டுள்ளது என்று கூறினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக 26 பெண்கள் போப்பிடம் பாதிரிமார் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கவும், மதப்பணி களில் ஈடுபடும் பெண் களும்  திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விடுதலை,15.7.14

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சிறுமி பாலியல் வன்கொடுமை கத்தோலிக்க பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


திருவனந்தபுரம், டிச. 10- கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட் டம், புத்தன் வேலிகரா பகுதி யைச் சேர்ந்த 14 வயது சிறு மிக்கு அதே பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் எட் வின் பிக்காரஸ் (வயது 41) பாலியல் தொல்லை கொடுத் தார் என சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் செய் தார்.
இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பாதிரியார் எட்வின் பிக்காரஸ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை பலமுறை பாலியல் வன்முறை செய்தது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அச் சிறுமிக்கு பாதிரியார் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து காவல்துறையினர் எட் வின் பிக்காரசை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு எர்ணாகுளம் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி நிஷார் அகமது வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங் கினார்.
வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரின் நடவடிக்கையால் 14 வயது சிறுமி பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர், பொறுப் பேற்றுள்ள ஆலய உறுப்பினர் கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்டது அந்த சிறுமி மட்டுமல்ல. ஆலய, உறுப்பினர்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். இச்செயலை புரிந்த குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்ததால் அவருக்கு தண்டனை வழங்குவதில் சலுகை காட்ட நீதிமன்றம் விரும்பவில்லை. சட்டத்திற் குட்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, குழந்தைகள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் இந்திய தண்டனை சட்டம் 375 (ஏ), 376 (1), 375 (பி), 376 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் இவ ருக்கு இரட்டை ஆயுள் தண் டனை விதிக்கப்படுகிறது மற் றும் அபராதமாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
மேலும் நீதிபதி, தனது தீர்ப்பில் குற்றவாளி எட்வின் பிக்காரசின் சகோதரர் சில்வஸ் டர் பிக்காரசுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
குற்ற சம்பவம் நடந்ததும் குற்றவாளி எட்வின் பிக்கா ரஸ் தலைமறைவானபோது அவ ருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக இந்ததண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.
இதுபோல சிறுமிக்கு பாலி யல் தொல்லை நடந்ததும் அவரை பரிசோதனை செய்த அரசு டாக்டர் அஜிதா, சிறு மிக்கு நேர்ந்த கொடுமையை உடனடியாக காவல்துறையின ருக்கு தெரிவிக்காமல் மறைத்த தோடு, குற்றவாளியின் தவ றுக்கு துணைபோனதையும் கடுமையாக கண்டித்தார்.
பாதிரியார் எட்வின் பிக்கா ரஸ் மீது புகார் கூறப்பட்டு அவர், கைது செய்யப்பட்டதுமே பாதிரியார் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,11.12.16