சனி, 15 ஆகஸ்ட், 2015

சாயிபாபா பக்தரின் கண் திறந்தது


1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.
அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!
தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,
நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.
சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.
ஆண் புணர்ச்சி
அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.
துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.
அவசரத் தேவை
எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும்,  தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.
நாத்திக மாநாடு
அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம். அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.
ஒன்றுபடுவோம்
மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.
அன்போடு விவரமாக எழுதுங்கள்.
தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)
-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலா ளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்?  இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!
-விடுதலை14.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக