திங்கள், 20 ஜூலை, 2015

பெண்களிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த துறவிகள்!

கும்பமேளாவின் யோக்கியதையைப் பாரீர்!
பெண்களிடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த துறவிகள்!

அம்மண சாமியார்களின் அட்டகாசம்!


நாசிக், ஜூலை 18_   நாசிக் நகரில் நடந்துவரும் கும்பமேளாவில் பெண் துறவித்தலைவரான திரிகால் பவந்தாவிற்கும் அவரது பெண் சீடர்களுக் கும் ஆண் துறவிகள் பாலி யல் தொந்தரவு கொடுத் ததாகவும் அந்தத்துறவிகள் மீது விழாக்குழுவினர் நட வடிக்கை எடுக்க மறுப்ப தாகவும் திரிகால் பவந்தா செய்தியாளர்களிடம் கூறினார்.  நாசிக் நகரில் ஜூலை 14-முதல் கும்பமேளா என்னும் கூட்டுக் குளியல் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் அம்மணச் சாமியார்கள் தான் முதன் முதலாக முழுக்குப் போடு வார்களாம் அவர்கள் குளித்த பிறகுதான் மற்ற வர்கள் குளிக்க வேண்டும் என்ற விதியுள்ளது. இந்த நிலையில் பெண் துறவி களுக்கு முதலில் குளிக் கவும் அல்லது அவர் களுக்கு என்று தனியான ஒரு இடம் ஒதுக்கித்தரவும் பெண் துறவித் தலைவர் திரிகால் பவந்தா வேண்டு கோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் திரி கால் பவந்தா செய் தியாளர்களிடம் பேசும் போது  அயோத்தியில் உள்ள சாமியார் மடத் தலைவன் சாமியார் ஞான தாஸ் மீது புகார் கூறியுள் ளார். புதனன்று காலை அவர் நாசிக்கில் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் நான் இந்தியாவில் முதன் முதலாக பெண் துறவிகளுக்கான அமைப்பு ஒன்றை நடத்தி வருகி றேன். எனது அமைப்பு இந்து மத விதிகளின் படியும் சாஸ்திர சம்பி ரதாயங்களின் படியும் இயங்கி வருகிறது. ஆனால் ஆரம்பம் முதலே என் னையும் எனது பெண் சீடர் களையும், சாமியார்களின் தலைமை அமைப்பின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் ஞானதாஸ்  கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு நான் நாசிக் கும்பமேளாவில் பெண் துறவிகள் கலந்து கொள் வார்கள் என்று அறிவித் திருந்தேன். இதற்காக கடந்த நவம்பர் முதல் அனைத்துப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்று பரப் புரை செய்து வந்திருக் கிறோம். நானும் எனது பெண் சீடர்களும் செல் லும் இடமெல்லாம் சாமி யார்கள் பாலியல்ரீதியான தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். எங்களின் உடல் அங்கங்களைத் தொட்டு தொந்தரவு கொடுப்பது அசிங்கமான செய்கைகள் செய்வது வாடிக்கையாக கொண்டு எங்களை துன்புறுத்தி வந்தனர்.
பெண்கள் கூடாரத்துக்குள் நுழைந்த தடியர்கள்!
இந்த நிலையில் நாங்கள் கடந்த 10 ஆம் தேதி நாசிக் வந்து எங்களுக்கு என்று தனிக்கூடாரம் அமைத்து புண்ணியக்குளியலுக்காக தயாராகி வந்துள்ளோம். நான் நகர நிர்வாகத்திடம் பெண் துறவிகளுக்கு ஆண் சாமியார்களால் தொந் தரவு வர வாய்ப்புள்ளது ஆகையால் எங்களுக்கு தனியாக குளிக்க இடம் வேண்டும் என்றும், எங் களுக்கு பாதுகாப்பு வேண் டுமென்றும் கூறியிருந் தோம் இந்த நிலையில் சில சாமியார்கள் கும்பமேளா விற்கு முதல்நாள் பெண்கள் தங்கியிருந்த கூடாரத்திற் குள் நுழைந்துள்ளனர்.  நான் பாதுகாப்பு காரணங் களுகாக சிலரைச் சந்திக்க சென்று இருந்த போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.   இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் நான் நாசிக் கும்பமேளா விழாக் கமிட்டியிடம் புகார் அளிக்கச் சென்றேன். அப்போது வழிமறித்த சாமியார் மடத் தலைவன் ஞானதாஸ் என்பவன் என்னையும் எனது பெண் சீடர்களையும் வழிமறித்து தவறாக நடக்க முயன்றான். இந்தச் சம்பவத்தின் போது சாமியார்கள் அனைவரும் பெருங் கூட்டமாக எங் களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். மேலும் நான் மக்களிடையே இந்த கொடுமையைக் கூற ஒலி வாங்கியை எடுத்த போது தேவையற்ற இடங்களில் சாமியார் ஞானதாஸூம் அவரது சீடரும் தொட் டுத் துன்புறுத்தினர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சி யில் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.  ஒரு மத ரீதியான விழா நடந்து கொண்டு இருக்கும் போது தொலைக்காட் சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் போதே இந்தச் சாமி யார்கள் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இவ் வளவு நடந்தும் விழா நிர்வாகம் சாமியார்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொலைக் காட்சி செய்தியாளர்களிடம் கூறினார்.
பெண் சாமியார் திரிகால் பவாந்தா 2008-ஆம் ஆண்டு பெண் துறவி களுக்கான அமைப்பு (அகாடா) ஒன்றை உரு வாக்கினார். இவர் ஆரம் பித்த காலத்தில் இருந்தே இவரது அமைப்பின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. (குறிப்பு: கடந்த ஆண்டு உண்மை இதழிலும் கட்டு ரையாக வெளி வந்திருந்தது).
விடுதலை,18.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக