திங்கள், 11 மே, 2015

பக்தையைத் தீண்டிய அர்ச்சகனுக்கு செருப்படி!

பக்தி படுத்தும் பாட்டைப் பாரீர்!
பக்தையைத் தீண்டிய அர்ச்சகனுக்கு செருப்படி!
நேர்த்திக் கடன் என்ற பெயரில் விளக்கமாற்று அடி!!

முரதாபாத், மே 8_- உத்தரப்பிரதேசத்தில் கோயில் பக்தையிடம் பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகனுக்குப் பக்தைப் பெண்மணி சரமாரியாக செருப்படி கொடுத்தார். தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி அருகே மாமன் - மைத்துனன் உறவு என்ற பெயரில் - சடங்கில் கோயில் விழாவில் ஒருவருக்கு ஒருவர் விளக்கமாற்றால் (துடைப்பத்தால்) அடித் துக் கொண்டனர். பக்தி யின் பரிதாபம் இதுதான்.
உத்தரப்பிரதேசத்தில் கோயிலில் பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த கோயில் அர்ச்சனுக்கு அப்பெண் ணிடமிருந்து செருப்படி, தர்ம அடி கிடைத்தது.
முதலில் கோயிலுக்குள் சென்ற பெண் வழிபாடு செய்துகொண்டிருந்தார். அப்போது அந்தக் கோயில் பூசாரி ஆபாசமான படங் களை அப்பெண் பார்க் கும் விதமாக காட்டியபடி இருந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் அமை தியாக வழிபட்டுக் கொண் டிருந்தார். திடீரென கோயில் அர்ச்சகன் அப் பெண்ணைத் தொட்டு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள் ளான். உடனே அப்பெண் சத்தம்போட்டுள்ளார். கோயிலின் வேறு பகுதி யில் இருந்து சத்தம் கேட்டு அங்கு வந்த ஒருவர் இதுகுறித்து அர்ச் சகனிடம் விசாரிக்கும் போது, பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று  மறுத்துள்ளான். ஆவேச மடைந்த அப்பெண் தன் செருப்பால் சரமாரியாக அர்ச்சகனைத் தாக்கினார். ஆவேசம் அடங்காதவராக பூஜைத் தட்டாலும் சரமாரியாகத் தாக்கினார். சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கினார். அப்போது அப்பெண் ணையும், விசாரணை மேற்கொண்டவரையும் அர்ச்சகன் தாக்கத் தொடங்கினான்.
தகவலறிந்த காவல் துறையினர் கோயிலுக்கு விரைந்து சென்று அர்ச் சகன்மீது வழக்குப்பதிவு செய்து, அர்ச்சகனைக் கைது செய்தனர்.
அர்ச்சகனைப் பெண் தாக்கிய வீடியோ பதிவு கோயிலில் இருந்த வெப் கேமராவில் பதிவாகி உள்ளது. தொலைக்காட்சி கள், ஊடகங்கள், இணை யம் வாயிலாக பலரும் கண்டு அர்ச்சகனைத் தாக்கிய பெண்ணைப் பாராட்டினார்கள்.
துடைப்பத்தால் அடித்து  நேர்த்திக்கடனாம்
ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. விழாவில் மாமன், மைத்துனர் (மச்சான்)உறவு முறை யினர் பழைய துடைப்பத் தால் ஒருவரை, ஒருவர் அடித்துக் கொள்ளும் நேர்த்திக் கடன் நிகழ்ச்சி நடந்தது. மறவபட்டி முத்தாலம் மன் கோயில் பொங்கல் விழாவில் அம்மனுக்கு கரகம் எடுத்து, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்து பொங்கல், மா விளக்கு ஏற்றி, தீச்சட்டி எடுத்து வழிபட்டனர்.
இரண்டாம் நாளில் மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள் கோயில் முன் கூடினர். உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டு வேஷ மிட்டு பழைய துடைப்பத் தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பலரும் பங்கேற்றனர். வெளியூரில் இருந்து வருபவர்கள் உறவு முறை அல்லாத வர்களை யாரையும் இவர் கள் தொந்தரவு செய்வ தில்லை.
அம்மனுக்கு நேர்த்திக் கடனாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடத்துவதாகவும், இந்த நிகழ்ச்சியால் சுப காரி யங்கள் நடப்பதாகவும் கிராம மக்கள் நம்புகின் றனர்.
சேலம் அன்னதானப் பட்டியில் செருப்படி கோயில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது தெரிந்ததே பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது உண்மையா இல்லையா?

-விடுதலை,8.5.15பக்-1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக