வெள்ளி, 23 ஜனவரி, 2015

பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சில்மிஷம்





ராமநாதபுரம்: பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை  நிர்வாணப்படுத்தி சில்மிஷம் செய்த, தேவிபட்டினத்தை சேர்ந்த  அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர்  கணேசமூர்த்தி (35). அதிமுகவை சேர்ந்த இவர் தேவிப்பட்டினம் கிளை  ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். தேவிபட்டினம்,  நவபாஷாண கோயிலுக்கு வருவோரை அணுகி தோஷம் கழிக்க  பரிகாரம் என்ற பெயரில் பூஜை செய்து வந்துள்ளார். 3 நாட்களுக்கு  முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை  பிறந்தது. தொப்புள் கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால்  பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன்  தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக்குள்  கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். பூஜையின் போது  அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந்திருந்த அந்த  பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50  மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில்  வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால்  பார்க்க முடியாது. இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார  பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்ற அந்த பெண்ணை  நிர்வாணமாக்கியுள்ளார்.

சிறிய லிங்கத்தை வைத்து பெண் ணின் உடல் முழுவதும் 108 முறை  தடவி கொடுத்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். கணேசமூர்த்தியின்  இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக  சொல்லவில்லை. ஊருக்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளை  கூறி கதறி அழுதுள்ளார். தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு  கற்பூரசுந்தரம் என்பவர்தான் பரிகார பூஜைக்காக கணேசமூர்த்தியை  சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து  வைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள்  கற்பூரசுந்தரத்திடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம்,  கணேசமூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி கற்பூரசுந்தரத்தை கடுமையாக தாக்கி,  கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து  கற்பூரசுந்தரம் தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதில்,  பெண்களை இரவில் தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து சென்று  நிர்வாணப்படுத்தி, சில்மி ஷம் செய்து வந்த விபரத்தையும் விரிவாக  தெரிவித்துள்ளார். கொலை மிரட் டல் விடுத்த வழக்கில்  கணேசமூர்த்தியை போலீ சார் நேற்று கைது செய்தனர். பெண்களிடம்  சில்மிஷம் செய்தது குறித்து, வழக்கு ஏதும் பதியவில்லை.

இதையறிந்த தேவிபட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு  உறுப்பினர் மகேந்திரன், தேவிபட்டினம் போலீசில் தனியாக புகார்  அளித்துள்ளார். இதில், யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக  நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து, கணேசமூர்த்தி மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

போலிகளுக்கு எப்போது வரும் தடை?

வெளியூரை சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேசமூர்த்தி தனது  சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை  அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பக்தர்களை  குறி வைத்து இந்த பரிகார பூஜைகளை செய்துள்ளார். இளம்பெண்கள்  என்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்ய வேண்டும்  என்பாராம். கோயில் வளாகத்தில் இதுபோன்ற போலி ஆ‘சாமி‘கள்  ஏராளமானோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்த  தடை விதிக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக