புதன், 21 ஜனவரி, 2015

சில்மிஷத்தில் ஈடுபட்ட 2சாமியார்களுக்கு தர்மஅடி

மாந்திரீகத்தால் பிரச்னையை தீர்ப்பதாக கூறி பூஜையின்போது சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 போலி சாமியார்களுக்கு தர்மஅடி



சென்னை: செங்கல்பட்டு அருகே மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (30), பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (30) பட்டதாரிகளான இருவரும் கம்ப்யூட்டர் டிசைனர்கள். இவர்கள், சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பார்த்த விளம்பரத்தில், ‘ குடும்ப கஷ்டமா? உடனே எங்களது செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். மாந்திரீகம் மூலம் உங்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அந்த செல்போன் நம்பருக்கு ராதாகிருஷ்ணன் போன் செய்துள்ளார். எதிர்முனையில் பேசியவர், ரூ.20 ஆயிரம் தந்தால் மாந்திரீக முறைபடி பூஜை செய்து பிரச்னைகளை தீர்ப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதையடுத்து சூளைமேடு பகுதியை சேர்ந்த காதர்பாஷா (39), அபுசாத்கர் (30) ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்தனர். ராதாகிருஷ்ணனிடம் ரூ.20,000 பெற்றுக்கொண்டனர். பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என கூறியுள்ள னர். அதற்கு ராதாகிருஷ் ணன் மறுத்துள்ளார். 15 வயது சிறுமியையாவது அழைத்து வரும்படி ஆசாமிகள் கூறியுள்ளனர். இதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். அப்படியானால் நீங்கள் பூஜையின்போது நிர்வாணமாக நின்றால் தான் பூஜை முழுமை பெறும் என கூறியுள்ளனர். ஒருவழியாக ராதாகிருஷ் ணன் டவல் கட்டிக்கொண்டு நின்றுள்ளார். பூஜை நடந்து கொண்டிருந்த போது அந்த ஆசாமிகள் திடீரென ராதாகிருஷ்ணன் கட்டியிருந்த டவலை அவிழ்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராதாகிருஷ்ணன் கூச்சலிட்டார். 

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் இருவரும் தப்பிஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து காதர்பாஷா, அபுசாத்கரை கைது செய்தனர். இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர். மாந்திரீகம் மூலம் பிரச்னையை தீர்ப்பதாக ஏமாற்றி வாலிபரிடம் போலி சாமியார்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  -தினகரன்29.12.14,பக்3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக