ஞாயிறு, 11 ஜனவரி, 2015

2 மத குருக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


. இஸ்லாமாபாத், டிச. 25_ பாகிஸ்தானின் லாகூர் நகரின் அருகே கடந்த அக் டோபர் மாதம் கிறிஸ்தவ இணையர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளை யில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணி யாற்றி வந்தனர்.
அந்த கிறிஸ்தவ இணை யர் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனின் பக் கங்களை தீயிட்டு கொளுத்தி, அந்த புனித நூலை அவ மதித்து விட்ட தாக சக் கிராமத்தில் உள்ள இரண்டு மசூதிகளின் மூலம் அப் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி தகவல் பரவியது.
இதைக் கேட்டு கொதித் தெழுந்த ஏராளமானவர் கள் உள்ளூர் மதத் தலை வரின் தலைமையில் முஹம் மத் யூசுப் குஜ்ஜாரின் செங் கல் சூளைக்கு விரைந்தனர். சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த கும்பல், அந்த இணையரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்தது.
இதிலும் ஆவேசம் தணியாத சிலர் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் உடல் கருகி அந்த இணையர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பலரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். இவர்களில் சிலர் மீது லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய செங்கல் சூளையின் உரிமையாளர், இரண்டு மதகுருக்கள், 4 பெண்கள் உள்பட 59 பேர் மீது இன்று குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட் டது.
ஜனவரி மாதம் 2-ஆம் தேதி முதல் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெற்றோரை இழந்த இந்த இணையரின் குழந்தைகளுக்கு 50 லட்சம் ரூபாயும், 10 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என பஞ்சாப் மாகாண முதல் அமைச்சர் ஷாபாஸ் ஷரிப் அறிவித்துள்ளார்.

விடுதலை,25.12.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக