புதன், 10 ஜனவரி, 2018

இந்த ஆண்டு பாபாக்களுக்கு ‘போதாத காலமா?’ (ஓராண்டில் மட்டும் பிடிபட்ட பாபாக்களின் பட்டியலைப் பாரீர்!)


1. ராம் ரகீம் பாபா 

குருமீத் என்ற ராஜஸ்தானைச் சேர்ந்த வர் தனது பெயரை  குருராம்ரகீம் என மாற்றி கைவிடப்பட்ட தேரா சச்சா சவுதா என்ற சமூக சேவை அமைப்பின் தலைவ ராக அந்த அமைப்பை மதம் தொடர்பான அமைப்பாக மாற்றினார். அதன் பிறகு  தன்னை ராமின் அவதாரம், இசுலாமிய மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல் லான ரகீம் என்பதையும் உடன் சேர்த்து ராம் ரகீம் என்று அழைத்துக்கொண்டார்.  

பஞ்சாப்-அரியானா எல்லை மாவட்ட மான சிர்சாவில் இவருக்கு சொந்தமான 300 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஆசிரமம் உள்ளது. பெயருக்குதான் இது ஆசிரமம். ஆனால் இதன் உள்ளே ஒரு தனி நாட் டையே உருவாக்கி வைத்திருந்தார். திரை அரங்கம், உணவகம், உல்லாச விடுதி என இந்தி திரைப்படங்களுக்கு இணையாக செயற்கை தீவு ஒன்றையும் இதன் உள்ளே அமைத்திருந்தார்.

இவர் மீது 2003 ஆம் ஆண்டு சிபிஅய்.இல் பெண்சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.  சிபிஅய் இந்த வழக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைத் தது. அதன் பிறகு அந்த வழக்கு அப்படியே இருந்துவிட்டது. இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு சோனியா காந்தியை சந்தித்து அந்தப்பெண் சீடர் முறையிட்டார். 

இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இப்பெண் சீடர் தொடர்பான புகார் குறித்து தெரி விக்க, மீண்டும் சிபிஅய் இந்த வழக்கை கையில் எடுத்து, இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலையீடுகளுக்கு இடையில் இந்த வழக்கு சிபிஅய் விசா ரணை செய்துவந்தது.  

இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்ற நிலையிலும் மோடி அரசு இவரை தூய்மை இந்தியா தூதுவராக நியமித்தது. மேலும் இவரது ஆசிரமத்திற்கு 57 கோடி ரூபாய் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கியது. இந்த நிலையில் பாலியல் வன்புணர்வு, கொலை ஆகிய குற்றங்கள் தகுந்த சான்றுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டு இவரை ‘வன்புணர்வுக் குற்றவாளி’ என குற்றம் சாட்டி 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வழங்கிய இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், டில்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ் தானில் வன்முறை வெடித்தது. அரியானா வில் மட்டும் 36-பேரை இவரது ஆதரவா ளர்கள் கொலைசெய்தனர்; 300க்கும் அதிக மானோர் காயமடைந்தனர்.

2. சாமியார் வீரேந்திர தீக்சித் 

ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி பல பெண்களை ஆடைகளே இல்லாமல் பணிசெய்ய வைத்தவர். இவர் நேரடியாகவே நான் கிருஷ்ணன். நீங்கள் எல்லாம் கோபியர்கள் என்று கூறி பெண் களிடம் மூளைச் சாயம் ஏற்றினார்.

டில்லி ரோகிணி பகுதியில் உள்ள சாமி யார் வீரேந்திர தீக்சித் மிகவும் பிரபல மானவர். இவர் வசதிபடைத்தவர் வாழும் பகுதியில் எந்த அனுமதியுமில்லாமல் ஆன் மீகப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒன்றை நடத்திவந்தார். இவரது ஆன்மீக பல்கலைக்கழகத்தைப் பார்வையிட வரும் பெரும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை தங் களின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக நடை பெற்று வந்த இந்த மோசடிகுறித்து ஒரு பெண் காணொலி ஒன்றை சமூக வலை தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் உடலில் ஆடைகள் ஏதுமின்றி பல பெண் கள் வெற்றுத்தரைகளில் படுத்து உறங்கு வது - சாமியார் வீரேந்திர தீக்சித்திற்கு மசாஜ் செய்யும் பெண்கள். சில பெண்கள் கூண்டில் அடைக்கப்பட்ட படங்கள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்தின் துணையுடன் சாமியாரின் ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஆசிரமத்தில் பல பெண்கள் பரிதாபகரமான நிலையில் காணப்பட்டனர். இரும்புக் கதவுகளுக்குப் பின்னும் மின் வேலிகளுக்குள்ளும் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்து, காவல்துறை உதவியோடு அவர்களை மீட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஅய் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இவரது ஆசிரம வருகைக் குறிப்பேட் டில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பல பாஜக தலைவர்கள் பெயர் பதிவாகியுள் ளது என்று இந்தி செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால் அவர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அது போலியான வருகைப் பதிவேடு என்றும் டில்லி பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவர் 7 ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தை நடந்தி வந்துள்ளார். இதற்கு முன்பு அரியானாவில் ஒரு ஆசிரமம் நடத்திவந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய ஆசிரமத்தை காவல் துறையினர் சோதனை நடத்துவது தெரிந்த உடன்  சாமியார் வீரேந்திர தீக்சித் தலைமறைவாகி விட்டார். இவரை 2018 பிப்ரவரிக்குள் சரண் அடையும்படி டில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டு உள்ளது. ஊழலுக்கு எதிராக சாமியார் ராம்தேவ்பாபா 2013ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் இவரும் தனது பெண் சீடர்களுடன் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. ஓம் பாபா 

தன்னை சிவனின் அவதாரமாக கூறிக் கொண்டு நவீன ரக பெரிய பேருந்து ஒன்றை ஆசிரமாக மாற்றி ஊர் ஊராக சுற்றி பணம் பார்க்கும் ஓம் பாபா என்ற விவேகானந்த ஜா, எளிமையாக பணம் பண்ண சாமியார் தொழிலைச் செய்ததாக வும் இதற்காக 5 ஆண்டுகள் பயிற்சி மற்றும் பல லட்சங்களை முதலீடு செய்ததாகவும் கூறுகிறார். 

டில்லியில் தொடர்ந்து நவீன ரக மோட்டார் பைக்குகள், மற்றும் வெளிநாட்டு கார்கள் திருடுபோவது குறித்து விசாரித்து வந்த காவல்துறைக்கு கடந்த ஆண்டு டில்லி விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு முக்கிய பிரமுகரின் இறக்குமதி கார் ஒன்று திருடுபோனது. இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்துவந்த டில்லி காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் ஆனந்த பருபத் என்ற இடத்தைச்சேர்ந்த மிட்டாய்க் கடை உரிமையாளர் மற்றும் அவரது உற வினர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.  

அப்போது அவர்கள் ஓம் பாபா என்ற விவேகானந்த ஜாவின் சீடர்கள் என்று தெரியவந்தது. மேலும் ஓம் பாபாவின் திட்ட மிடுதலின் பேரில் நகரில் வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளில் கவனக்குறைவாக விடப்பட்ட விலைஉயர்ந்த கார், மோட்டார் பைக்குகளை திருடி அதை பீகார், அரியானா உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலையில் சாமியார் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் ‘பிக்பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச் சியில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப் பிடத்தக்கது.    

இவரது நவீனரக பேருந்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இவருக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லாத நிலையில் கார்களை விற்கும் பணத்தை தங்கமாக மாற்றிவைக்கும் வித்தி யாசமான பழக்கம் கொண்டவர். இதனடிப் படையில் இவரிடம் இருந்து கிலோக்கணக்கில் தங்கத்தை கைப்பற்றி டில்லி காவல்துறையினர் மேலும் விசாரணை செய்துகொண்டு வரு கின்றனர். 

4. இச்சாதாரி பரமானந்த பாபா 

இவரது தொழில் பாலியல் தொழில். முக்கிய பிரமுகர்களுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பெண்களை வரவழைத் துத் தரும் பேராற்றல் பெற்றவர். இவரும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லி காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார்.   

இந்த ஆண்டு இந்திய ரயில்வேத்துறை யில் வேலை வாங்கித் தருவதாக டில்லி மற்றும் அரியானா போன்ற மாநிலங் களில் பல பட்டதாரிகளிடம் லட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. இந்த புகாரை விசாரித்த அரியானா காவல்துறையினர் வசந்த விகார் பகுதியில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்த சதாசிவ் மிஸ்ரா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இச்சாதாரி பரமானந்த பாபா என்பவர் மத்திய அரசில் பல பிரமுகர்களின் நட்பு இருப்ப தாலும் அவர்கள் மூலம் பல அரசு வேலைகள் வாங்கித் தருவதாகவும் என்னிடம் கூறினார். 

இதனை அடுத்து நான் பலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கினேன். நான் வாங்கிய பணம் அத்தனையும் இச்சாதாரி பாபாவிடம் கொடுத்துள்ளேன் என்றார். இதனை அடுத்து இச்சாதாரி பாபாவை காவல் துறையினர் கைது செய்தனர். இவரைக் கைதுசெய்யச் சென்ற போது இவரது இல்லத்தில் இருந்து 22 பாலியல் தொழிலாளிகளையும் கைது செய்தனர். இதில் 3 பேர் வெளிநாட்டைச்சேர்ந்த இளம்பெண்கள் என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் விசாகாலம் முடிந்த பிறகும் நீண்டகாலம் இந்தியாவில் தங்கியிருந்தது தெரியவந்தது. 

இவர் ஆன்மீக கூட்டங்கள் அனைத் தையும் அய்ந்து நட்சத்திர விடுதிகளில் மிகவும் பெரும் பொருட்செலவில் நடத்துவார். இவரது ஆன்மீக கூட்டங்க ளுக்கு லட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்ட விசாரணையில் இவர் மீது 2010-ஆம் ஆண்டு தெற்கு டில்லி சங்கேத் மார்க் காவல்நிலையத்தில் பாலியல் தொடர்பான குற்றவழக்கு இருப்பதும், ராஜஸ்தான் உட்பட மூன்று மாநில காவல் நிலையங்களில் இவர்மீது வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 

இவரது உண்மையான பெயர் சிவ் சர்மா - பின்னர் இவர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு இச்சாதாரி (ஆசை நீக்கிய) பரமானந்த என்ற பெயரில் சாமியார் வேடத்தில் இருந்து உள்ளார். 

5. ராதே மா 

இந்த ஆண்டு பெண் சாமியார் ஒரு வரும் மும்பை காவல்துறையிடம் சிக்கியுள்ளார். மும்பையைச்சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான சாமியாராக இருக்கும் பஞ் சாபைச் சேர்ந்த கவுர் என்ற பெண்மணி தன்னை ராதையின் அவதாரமாக அறிவித்துக்கொண்டு ‘ராதே மா’ என்ற பெயரில் வலம் வருகிறார். 

இவருக்கு மிட்டாய் நிறுவன தலை வர் மும்பை புறநகர் பகுதியில் மிகப் பெரிய மாளிகை ஒன்றை கட்டித்தந்துள்ளார். 

அதே போல் இவருக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பல வசதிகள் கொண்ட பண்ணை வீடுகளும் உள்ளது. இவர் மீது பாலியல் தொழிலுக்கு தள்ளினார் என்ற குற்றச்சாட்டு உட்பட பல பிரமுகர்களை பணம் கேட்டு மிரட்டிய வழக்கும் உள்ளது. இந்த நிலையில் மிட்டாய்க்கடை அதிபரின் மருமகளிடம் அதிக அளவு வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் பெண்க ளுக்கு எதிரான பெண் வன்கொடுமைச் சட்டத்தின்  கீழ் இவர் கைது செய்யப்பட்டு, பிணையில் உள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இவர் டில்லி சென்ற போது, டில்லியில் இணை ஆணையர் ஒருவர் இவரை தனது இருக்கையில் அமரவைத்து பணிவிடை செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

6. ராகவேஷ்வரா பாரதி

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மடமாக கருதப்படும் சிமோகாவில் உள்ள மடம் சிறீராமச்சந்திர மடம், இம்மடத்தின் தலை வர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களா கவே உள்ளனர். இம்மடத்தின் தலைவராக ராகவேஷ்வரா பாரதி என்பவர் உள்ளார். இம்மடத்திற்கு என்று தனி செயற்கைக் கோள் தொலைக்காட்சி உள்ளது. 

இத்தொலைக்காட்சியில் அறிவிப்பாள ராக பணிபுரிய கன்னட பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரபலமான ஒரு பெண்ணை அழைத்திருந்தார். 

அந்தப் பெண்ணும், ராகவேஷ்வரா பாரதி மற்றும் அவரது மகனும் ஒரே அறையில் இருந்த காட்சி கருநாடக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, இந்த விவகாரம் தெரிந்ததும் பொதுமக்கள் மடத்தின் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சாமியார் அயல்நாடுகளில் இருந்து மடத்தின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் பெற்றும் அதை தன்னுடைய சொந்த செலவிற்கு பயன் படுத்துகிறார் என்றும், மட நிலம் தொடர் பான முறைகேடுகள் தொடர்பாகவும் இந்தச்சாமியார், 

அவரது மகன் மற்றும் மடத்தின் தலைமை நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. 

அந்த வகையில் சமீபமாக நித்தியா னந்தா பிரபல நடிகையுடன் ஆபாசமாக இருந்த காணொலி உண்மையானதுதான் என்று தடயவியல் ஆய்வில் உண்மை வெளியானது. 

இந்த ஆண்டுதான் சாமியார்கள் குழு ஒன்று கூடி ஃபிராடு (Fraud) சாமியார் பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் நித்தியானந்தா உட்பட 17 சாமியார்கள் உள்ளனர்.

- விடுதலை ஞாயிறு மலர், 30.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக