புதன், 11 செப்டம்பர், 2019

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளிடம் பாலியல் வன்முறை

பாஜக அமைச்சரின் முகத்திரையைக் கிழித்த மாணவி


ஷாஜகான்பூர், செப்.11, உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று சமூக இணையளத்தில் காணொலி ஒன்று வெளியிட்டார். அதில் தான் படித்த கல்லூரியை நடத்தி வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சின்மயானந்த்(72) தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கிறார் என்றும் கொன்றுவிடுவதாக மிரட்டுவ தாகவும் புகார் கூறினார். அடுத்த நாளே அவர் காணாமல் போனார். இது குறித்து அந்த மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில் காணாமல் போன அந்த மாணவி ராஜஸ் தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர் ஷாஜகான்பூரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: சின்மயானந்த், என்னை பலாத்காரம் செய்தார். ஓராண் டுக்கு மேலாக எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு என்னிடம் காணொலி உட்பட அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அவர் பல மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றார்.

-  விடுதலை நாளேடு, 11.9.19

புதன், 4 செப்டம்பர், 2019

தோஷம் கழிப்பதாகக் கூறி மோசடி: சாமியார்கள் கைது

சென்னை, ஆக.13 சென்னையில் தோஷம் கழிப்பதாகக் கூறி மோசடி யில் ஈடுபட்ட  சாமியார்களை காவல் துறையினர்  விரட்டிப் பிடித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரை ஆசிரியர் காலனியில் ஓய்வு பெற்ற அரசு வங்கி அதிகாரி சந்திரபால் பாண்டியன்(65) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பின்னர் மகனின் உயிரிழப்பு குறித்து தெரிந்து கொள்ள குடும்பத்துடன் திருவண் ணாமலைக்கு சென்று குறி கேட்டுள்ளனர்.

அப்போது முகவரியை பெற்ற   சாமியார்கள்,  தங்களது குழுவை சேர்ந்த 5 பேரை கடந்த மாதம் 21-ஆம் தேதி அந்த வீட்டிற்கு அனுப்பி மகன் இறந்ததை கூறி வீட்டின் உரிமையாளரை நம்ப வைத்து பின்னர் தோஷம் கழிக்க வேண்டும் என கூறியதால் அவர்களும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அங்கு  சாமியார்கள் பூஜை செய்துவிட்டு 4 பவுன் நகை, ரூ. 1,000 ரூபாய் ஆகிய வற்றுடன் காரில் தப்பிச் சென்றனர். பின்னர், வீட்டின் உரிமையாளர் பூஜையில் வைத்த நகை காணாமல் போனதை அறிந்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில்  தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை நடத்திய காவல்துறை நீலாங்கரை, அடையார், போரூர், சிறீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 60- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்தனர். இதையடுத்து வாகனப் பதிவு எண் மூலம் அதன் உரிமையாளர் ராம்ஜி என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணை யில் காரை ஆறு மாதத்திற்கு முன்பு அண்ணாநகர் கார் விற்பனையகத் தில் விற்பனை செய்ததும்,  வேலூர் காட்பாடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் வாங்கியதும் தெரியவந்தது.

அவரைப் பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவரது உறவின ரும்  சாமியாருமான திருவண்ணா மலையைச் சேர்ந்த ஜோசபை(67) கைது செய்தனர்.  ஜோசப் கைது செய்யப்பட்டதை அறிந்த உதய குமார்(37) சென்னை அண்ணா சாலை அருகே காரில் தப்பிச் செல்வதை செல்லிடப்பேசி சிக்னல் மூலம் தெரிந்து கொண்ட காவ லர்கள் இரண்டு இருசக்கர வாகனத் தில் காரைத் துரத்தி உதயகுமாரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், 4 பவுன் தங்க நகை, பணம்  ஆகியவற்றைப் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூவரைத் தேடி வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 13. 8 .19

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக்கூடு குவியல்கள்

லிமா, செப். 1- பெரு நாட்டின் தலைநகரான லிமாவின் வடக்குக் கடற்கரை பகுதியில் உள்ள மிகப் பெரிய பலியிடும் பீடத்தின் அருகில் 227 குழந்தைகளின் எலும்பு கூடு களை கண்டறிந்துள்ளனர்.  கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த கடற்கரைக்கு அருகில் உள்ள பம்பா-லா-க்ரூஸ் நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச் சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட் டபோது 56 குழந்தைகளின் எலும் புக்கூடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டன. அதன் விளை வாக கடந்த ஆண்டில் பம்பா-லா-க்ரூஸில் பலியிடப்பட்ட 140 குழந் தைகள் மற்றும் 200 ஒட்டகங்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கடற்கரை பகுதியில் கண்டறியப் பட்ட பலிபீடத்தில் 227 குழந்தை களின் எலும்புக்கூடுகள் கண்டறி யப்பட்டுள்ளன. இதுகுறித்து தலைமை தொல்பொருள் ஆராய்ச் சியாளர் ஃபெரன் காஸ்டிலோ கூறுகையில், "பலியிடப்பட்ட குழந் தைகளின் எலும்புகள் கண்டெடுக் கப்பட்ட மிகப்பெரிய தளம் இது. கடவுள்களை கவுரவிக்கவும், எல் நினோ நிகழ்வு நடக்காமல் இருக்க இயற்கையை சமாதானப்படுத்தவும் 4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலியிடப்பட்டுள் ளனர்" என தெரிவித்தார்.
மேலும், கி.பி.1200_1475ஆம் ஆண்டுவரை பெரு நாட்டில் நிலவி வந்த சிமு நாகரீகத்தில்தான் இந்த பலியிடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
- விடுதலை நாளேடு, 1.9.19