செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

கோவிலில் வெள்ளி தகடுகளை திருடிய அர்ச்சக பார்ப்பனர்கள் கைது


கும்பகோணம், பிப்.4 மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோவிலில் படிச்சட்டத்தின் மீது இருந்த வெள்ளித் தகடுகளை திருடியதாக அர்ச்சகர்கள் 2 பேரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் பகுதியில் பரிமள ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த கோவி லில் உற்சவர் சாமி சிலையை தூக்கி செல்ல பயன்படும் படிச்சட்டம் மரத்தால் செய்யப்பட்டு அதன் மேல் வெள்ளித் தகடுகளால் கவசம் இடப்பட்டு இருந்தது.

இந்த படிச் சட்டத்தின் மேல் இருந்த வெள்ளி தகடுகள் கடந்த 2014-ஆம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்டு திருட்டு போனது. இதுகுறித்து காவல்துறையில் எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை.

சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையில் புகார்

இந்த நிலையில் படிச்சட்டத்தில் இருந்த வெள்ளிக் கவசத்தை திருடிய வர்கள், பழைய படிச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக வெள்ளிக் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை தயார் செய்து கோவிலில் வைக்க முயற்சி செய்வதாக சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையில் புகார் மனு அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கோவிலில் இருந்த படி சட்டத்தின் வெள்ளி கவசம் திருடு போனது உறுதி செய்யப்பட்டது.

தீட்சிதர்-பட்டர் கைது

இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், படிச் சட்டத்தில் இருந்த வெள்ளித் தகடுகளை திருடிய குற்றவாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் தீவிர விசார ணையில் சிறீநிவாச ரங்க பட்டர் மற்றும் முரளிதர தீட்சிதர் ஆகிய இருவரும் இணைந்து படிச் சட்டத்தில் இருந்த வெள்ளி தகடுகளை திருடியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் வெள்ளித் தகடுகளை கட்டி களாக உருக்கி மயிலாடுதுறையில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து புதிய படிச் சட்டம் செய்ய ஆர்டர் கொடுத்து உள்ளதும், புதிய படிச் சட்டம் செய்வதற்கு நன்கொடை யாளர்கள் மூலம் பணம் கொடுக்க சொல்லி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

15 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து இருவரும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி மயிலாடுதுறையில் உள்ள சம்பந்தப் பட்ட நகைக்கடைக்கு நேரில் சென்ற காவல்துறையினர், அங்கு புதிதாக படி சட்டம் செய்ய வைத்திருந்த 15 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசா ரணை செய்யும் கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் நேற்று (3.2.2022) ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வியாழன், 23 செப்டம்பர், 2021

பா.ஜ.க. தலை எடுத்ததால் ஏற்பட்ட நிகர பலன்?


சாமியார்களின் தலைமை மடங்கள் என்று கூறிக்கொண்டு பல இருந்தாலும், அலகாபாத் பாகம்பரி மடம் தான் அனைத்து சாமியார் மடங்களுக்கும் தலைமையானது என்று கூறப்படுகிறது. இதன் தலைவராக இருந்த சாமியார் நரேந்திர கிரி, அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதனை அடுத்து இவரது மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

அலகாபாத்தில் உள்ள அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற இந்திய சாமியார்களின் தலைமையிடம், சங்கராச்சாரியார் உருவாக்கிய மடங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், மற்ற எந்த ஒரு சாமியார் மடமும் போலியானது என்று அறிக்கை விட்டுள்ள இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் சாமியார்  நரேந்திர கிரி.

இந்த நரேந்திரகிரி சாமியார் முலாயம் சிங் ஆட்சிக்காலத்திலும், அகிலேஷ் ஆட்சிக் காலத்திலும் பாஜகவின் உதவியால் அரசை கலைத்துவிடுவேன் என்று மிரட்டியவர்.  அதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேச தலைமைக் காவல் ஆணையரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக வளைத்துக் கொண்டார். இதன் காரணமாக தலைமை செயலகத்தில் உத்தரப் பிரதேச தலைமைக்காவல் ஆணையரே பட்டினிப் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அந்த அளவிற்கு சாமியார் அரசியலில் தனது ஆதிக்கத்தைக் செலுத்தியிருந்தார்.

 மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரிக்கு முறையற்ற பெண் தொடர்புகள் அதிகம் உண்டு. இவர் தமது பாதுகாப்பாளராக இருந்தவரின் மனைவியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்து அந்த விவகாரம் வெளியே தெரிந்த உடன் அந்தப் பாதுகாவலருக்குப் பல கோடி மதிப்பிலான மாளிகையை எழுதிக்கொடுத்தார். இதனை அடுத்து ஊர்க்காரர்கள் சில ஆயிரங்கள் மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்த காவலருக்கு பல கோடி மதிப்பு மாளிகை எப்படி சொந்தமானது என்று கேட்டுப் போராட்டம் நடத்தினர்.

 இந்த விவகாரத்தில் சாமியார் தனது பெயர் வராமல் இருக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து எதிர்ப்பாளர்களை மடக்கிய தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மடத்தை நிர்வகிக்கும் சில நிர்வகிகளுக்கும், சாமியாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது,

 இந்த நிலையில் இவரது மோசடிகளை வெளிக்கொண்டு வருவோம் என்று மிரட்டிய அவரது முக்கிய சீடர்கள் - பல பெண் களோடு அவர்களும் தொடர்பில் இருந்து மடத்தின் சொத்துக்களை வாரி வழங்கினர். 

சமீபத்தில் சாமியாரின் தலைமை சீடரும், யோகா குரு என்று தன்னைக் கூறிக்கொள்ளுபவருமான   ஆனந்த கிரி முதலமைச்சர் ஆதித்யநாத்தைச் சந்தித்து  தலைமை சாமியார் நரேந்திர கிரி குறித்துப் பல புகார்களை சான்றுகளோடு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இதனைத் தொடர்ந்து தற்போது மரணமடைந்த சாமியார் நரேந்திர கிரி தன்னுடைய சீடர்கள் குறித்த புகாரை கொடுக்க  மோடி, அமித்ஷா,  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் போன்றவர்களை சந்திக்க முயற்சித்தார். கரோனா காரணமாக அவருக்கு அனுமதி கிடைக்காததால் தனது சீடர்களின் முறையற்ற பாலியல் காணொலிகள், அவர்கள் பெண்களுக்கு எழுதிக்கொடுத்த மடத்தின் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மோடிக்கு அனுப்ப முடிவு செய்து சேகரித்து வைத்திருந்தார். இதனை அறிந்துகொண்ட   யோகா குரு என்று தன்னைக்கூறிக்கொள்ளும் ஆனந்த கிரி  கடுமையான மோதலில் ஈடுபட்டார் 

இதையடுத்து, அகாடா பரிஷத் மற்றும் பாகம்பரி மடத்திலிருந்து ஆனந்த் கிரி வெளியேற்றப்பட்டார்.  இந்த நிலையில் தலைமை சாமியார் நரேந்திரகிரி அய்யத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.  அவரது அறையில் இருந்த பல பொருட்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதும் தெரியவந்துள்ளது.

 சாமியார் மடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல, அயோத்தியில் உள்ள சாமியார் மடங்களில் வெளிநாடுகளில் இருந்து கூட விலைமாதர்களை சீடர்கள்  என்ற பெயரில் அழைத்துவந்து கூத்தடித்த விவகாரங்கள் காணொலிகளாக வெளியாகி சாமியார்களின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.

 இப்படி பல சாமியார்கள் பாலியல் வக்கிரம் கொண்டு அலைவதும், சிக்கிக் கொண்ட பிறகு சொத்துக்களை எழுதிக் கொடுப்பதும் மக்களிடத்தில் அவமதிப்பை ஏற்படுத்தி விட்டது. சாமியார்களின் மோசடிகளைப் பயன்படுத்தி சிலர் சாமியார்களிடம் பெண்களை அனுப்பி அதை ரகசியமாக படம் பிடித்து மிரட்டுவது, அவ்வாறு மிரட்டுபவர்கள் கொலை செய்யப்படுவதும், அலகாபாத், வாரணாசி, பைசாபாத் (அயோத்தியா) போன்ற இடங்களில் பொதுவான காட்சியாக உள்ளது.  ஆனால் இப்போது இந்தியாவிற்கு சாமியார்களின் தலைவராக உள்ள நரேந்திர கிரி மரணம் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது,

 இவர் 2015 ஆம் ஆண்டு பாலியலைத் தூண்டும் போதை மருந்துகளை கொண்டுவரச்சொன்னதாக டில்லி விமான நிலையத் தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கூறியதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மடத்திற்கு நாடு முழுவதும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் பக்தர்கள் நன்கொடையாக கொடுத்தவை ஆகும்.

உ.பி.யில் முதல் அமைச்சராக இருப்பவரே - ஒரு மடத்தின் தலைவராக இருந்தவர்தானே!

பா.ஜ.க. அரசியலில் தலை எடுக்க ஆரம்பித்ததால் ஏற்பட்ட நிகர பலன் இதுதான்!

இந்துராஜ்ஜியம் அமைக்கத் துடிப்போர் பதில் கூறுவார்களா?

ஞாயிறு, 25 ஜூலை, 2021

சிக்கினார் திருச்சி சாமியார்!

 

புதுடில்லி, ஜூலை 22 ரவுடிகள் ‘என்கவுன்ட்டர்' பட்டியல் தொடர் பான ஒலிப்பதிவு சர்ச்சையில் சிக்கிய திருச்சி அல்லித்துறை சாமியாரையும், அவருடன் அலை பேசியில் பேசியதாகக் கூறப் படும் வழக்குரைஞரையும் காவல் துறையினர் நேற்று (21.7.2021) கைது செய்தனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (32). தேஜஸ் சுவாமிகள் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் அல்லித்துறை வன்னி யம்மன் கோயில் பகுதியில் வசித்தபடி ஜாதகம் பார்த்து வருகிறார். வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் பிரபலங் கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கிய நபர்கள் அதிகளவில் வந்து சென்றதால் குறுகிய காலத்தில் பிரபலமானார்.

இந்நிலையில் ரவுடிகள் ‘என்கவுன்ட்டர்‘ பட்டியல் தொடர்பாகவும், முக்கியப் பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு சைரன் காரில் சென்றது தொடர்பாகவும் வழக்குரைஞர் கார்த்திக் என்பவரிடம் சாமியார் பேசுவதுபோன்ற ஒலி பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து சாமியாரிடம் ஜீயபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும் அந்த ஒலிபதிவுக்கும் தொடர்புஇல்லை என சாமியார் தெரிவித்தார்.

மேலும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறு செய்துஇருப்பதாக சோமரசம்பேட்டை காவல் நிலையம், சைபர் கிரைம்பிரிவு ஆகியவற்றில் சாமியாரும் கடந்த 12ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படி தனிப்படை காவல்துறையினர் நேற்று  (21.7.2021) அதிகாலை அல்லித்துறையில் உள்ள வீட்டுக்குச் சென்று சாமியாரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல ரவுடிகள் பட்டியல் குறித்து சாமியாருடன் அலைபேசியில் பேசியதாக கூறப்படும் வழக்குரைஞரான கார்த்திக் என்பவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் பொன்மலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சாமியார், வழக்குரைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, பொன் மலை பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜை, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கொட்டப் பட்டு ஜெய், பணம் கேட்டுமிரட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் ரவுடியை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க உதவுமாறு அல்லித்துறை சாமியாரிடம் ரவுடி கொட்டப்பட்டு ஜெய் முறையிட்டதைத் தொடர்ந்து, புகார் அளித்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுந்தர்ராஜை சாமியார், வழக்குரைஞர் கார்த்திக் உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையிலேயே சாமியார், ரவுடி கொட்டப்பட்டு ஜெய், வழக்குரைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

வெள்ளி, 5 மார்ச், 2021

சர்ச்சை பாபா

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மதத்தின் பெயரால் நடந்த மூடச்சடங்கு குழந்தையின் உயிரைப்பறித்த அவலம்


பாதிரியார் மீது வழக்குப்பதிவு

புகாரெஸ்ட், பிப். 8- தென்கிழக்கு அய்ரோப்பிய நாடாகிய ருமேனியாவில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட சடங்கான 'ஞானஸ்நான'த் தின்போது  தண்ணீரில் அழுத் தப்பட்ட குழந்தை பரிதாப மாக உயிரிழந்தது.

ருமேனியா நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தையை பாதிரியார் தண்ணீரில் 3 முறை அமிழ்த்தி எடுத்துள்ளார். இதனை யடுத்து சில மணி நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலில் தண்ணீர் இருந் ததையும், தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட குழந்தைக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டதையும் உறுதி செய் தனர். இதனையடுத்து தேவா லய பாதிரியார்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகி றது. ருமேனியா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றதாக வும், இதனால் 'ஞானஸ்நானம்' நடைமுறைகளை மாற்ற வேண் டும் எனவும் கோரிக்கை எழுந் ததாகவும் அந்நாட்டு ஊட கங்கள் தெரிவித்துள்ளது.

புதன், 23 டிசம்பர், 2020

சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்! பக்தி வியாபாரம் பாரீர்!

செவ்வாய், 3 மார்ச், 2020

காவிகளின் "கிருஷ்ணலீலா!" பெண்ணைக் கடத்தி மடாதிபதி ஓட்டம்

பெண்ணைக் கடத்தி மடாதிபதி ஓட்டம்

கோலார், பிப். 29-  சிவராத்திரி நாளில் கோயிலுக்கு வந்த 20 வயது இளம் பெண்ணுடன் 45 வயது மடாதிபதி ஓடிப் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டம் கோலார் தாலுகாவில் உள்ள எவுலியாகிராமத்தில் பழைமையான பீமலிங் கேஷ்வரசாமி சேவாஷ்வரம மடம் உள்ளது.  இதில் தத்தாத்ரேயா  சவதூதா (வயது 45) என்பவர் மடா திபதியாக  இருந்து வரு கிறார். மடத்தில் முழுக்க முழுக்க சைவ நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

சேவாஷ் வரமத்திற்கு எவுலியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில் லாமல், அதை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிரா மத்தினரும் வந்து தங்கள் குடும்ப கஷ்டங்களை மடா திபதியிடம் கூறி ஆலோ சனை பெற்று வந்தனராம்.

இம்மடத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் சிவ ராத்திரி விழா என்று கூறி காலை தொடங்கி நள்ளி ரவு வரை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. தினமும் நூற்றுக்கணக்கான பக் தர்கள் வந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி முதல் மடாதிபதி தத்தாத்ரேயா சவதூதாவை மடத்தில் காணவில்லை . அவர் எங்கு சென்றார் என்று புரியாமல் அனைவரும் தவித்து வந்தனர். சேவாஷ்ரமத்தில் உள்ள மூலவருக்கு மடத்தில் இருக்கும் சீடர்களே பூஜை செய்து வருகிறார்களாம்.

இதனிடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரும் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். அவரையும் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் 20 வயது இளம்பெண்ணுடன் 45 வயது மடாதிபதி ஓடிப் போனதாக கிராமத்தினருக் குத் தகவல் கிடைத்தது. இது குறித்து கோலார் ஊரக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனிடையில் அவர்கள் இருவரும் ரகசியமாகத் திரு மணம் செய்து கொண்டுள்ள தகவல் கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. மடாதிபதி மற்றும் அவருடன் சென் றுள்ளதாக கூறப்படும் இளம் பெண்ணை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் எவுலியா கிராமம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள கிரா மங்களிலும் பரபரப்பை ஏற் படுத்தி, சாமியாரின் காமக் கொடூரத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

 - விடுதலை நாளேடு, 29.2.20