புதன், 10 ஜனவரி, 2018

இந்த ஆண்டு பாபாக்களுக்கு ‘போதாத காலமா?’ (ஓராண்டில் மட்டும் பிடிபட்ட பாபாக்களின் பட்டியலைப் பாரீர்!)


1. ராம் ரகீம் பாபா 

குருமீத் என்ற ராஜஸ்தானைச் சேர்ந்த வர் தனது பெயரை  குருராம்ரகீம் என மாற்றி கைவிடப்பட்ட தேரா சச்சா சவுதா என்ற சமூக சேவை அமைப்பின் தலைவ ராக அந்த அமைப்பை மதம் தொடர்பான அமைப்பாக மாற்றினார். அதன் பிறகு  தன்னை ராமின் அவதாரம், இசுலாமிய மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல் லான ரகீம் என்பதையும் உடன் சேர்த்து ராம் ரகீம் என்று அழைத்துக்கொண்டார்.  

பஞ்சாப்-அரியானா எல்லை மாவட்ட மான சிர்சாவில் இவருக்கு சொந்தமான 300 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஆசிரமம் உள்ளது. பெயருக்குதான் இது ஆசிரமம். ஆனால் இதன் உள்ளே ஒரு தனி நாட் டையே உருவாக்கி வைத்திருந்தார். திரை அரங்கம், உணவகம், உல்லாச விடுதி என இந்தி திரைப்படங்களுக்கு இணையாக செயற்கை தீவு ஒன்றையும் இதன் உள்ளே அமைத்திருந்தார்.

இவர் மீது 2003 ஆம் ஆண்டு சிபிஅய்.இல் பெண்சீடர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.  சிபிஅய் இந்த வழக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைத் தது. அதன் பிறகு அந்த வழக்கு அப்படியே இருந்துவிட்டது. இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு சோனியா காந்தியை சந்தித்து அந்தப்பெண் சீடர் முறையிட்டார். 

இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இப்பெண் சீடர் தொடர்பான புகார் குறித்து தெரி விக்க, மீண்டும் சிபிஅய் இந்த வழக்கை கையில் எடுத்து, இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலையீடுகளுக்கு இடையில் இந்த வழக்கு சிபிஅய் விசா ரணை செய்துவந்தது.  

இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என்ற நிலையிலும் மோடி அரசு இவரை தூய்மை இந்தியா தூதுவராக நியமித்தது. மேலும் இவரது ஆசிரமத்திற்கு 57 கோடி ரூபாய் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கியது. இந்த நிலையில் பாலியல் வன்புணர்வு, கொலை ஆகிய குற்றங்கள் தகுந்த சான்றுகளுடன் உறுதிப்படுத்தப்பட்டு இவரை ‘வன்புணர்வுக் குற்றவாளி’ என குற்றம் சாட்டி 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது, ஆகஸ்ட் 25ஆம் தேதி வழங்கிய இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அரியானா, பஞ்சாப், டில்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ் தானில் வன்முறை வெடித்தது. அரியானா வில் மட்டும் 36-பேரை இவரது ஆதரவா ளர்கள் கொலைசெய்தனர்; 300க்கும் அதிக மானோர் காயமடைந்தனர்.

2. சாமியார் வீரேந்திர தீக்சித் 

ஆன்மீகப் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி பல பெண்களை ஆடைகளே இல்லாமல் பணிசெய்ய வைத்தவர். இவர் நேரடியாகவே நான் கிருஷ்ணன். நீங்கள் எல்லாம் கோபியர்கள் என்று கூறி பெண் களிடம் மூளைச் சாயம் ஏற்றினார்.

டில்லி ரோகிணி பகுதியில் உள்ள சாமி யார் வீரேந்திர தீக்சித் மிகவும் பிரபல மானவர். இவர் வசதிபடைத்தவர் வாழும் பகுதியில் எந்த அனுமதியுமில்லாமல் ஆன் மீகப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஒன்றை நடத்திவந்தார். இவரது ஆன்மீக பல்கலைக்கழகத்தைப் பார்வையிட வரும் பெரும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை தங் களின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக நடை பெற்று வந்த இந்த மோசடிகுறித்து ஒரு பெண் காணொலி ஒன்றை சமூக வலை தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் உடலில் ஆடைகள் ஏதுமின்றி பல பெண் கள் வெற்றுத்தரைகளில் படுத்து உறங்கு வது - சாமியார் வீரேந்திர தீக்சித்திற்கு மசாஜ் செய்யும் பெண்கள். சில பெண்கள் கூண்டில் அடைக்கப்பட்ட படங்கள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்தின் துணையுடன் சாமியாரின் ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஆசிரமத்தில் பல பெண்கள் பரிதாபகரமான நிலையில் காணப்பட்டனர். இரும்புக் கதவுகளுக்குப் பின்னும் மின் வேலிகளுக்குள்ளும் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்து, காவல்துறை உதவியோடு அவர்களை மீட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிஅய் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இவரது ஆசிரம வருகைக் குறிப்பேட் டில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பல பாஜக தலைவர்கள் பெயர் பதிவாகியுள் ளது என்று இந்தி செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால் அவர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அது போலியான வருகைப் பதிவேடு என்றும் டில்லி பாஜக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவர் 7 ஆண்டுகளாக இந்த ஆசிரமத்தை நடந்தி வந்துள்ளார். இதற்கு முன்பு அரியானாவில் ஒரு ஆசிரமம் நடத்திவந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய ஆசிரமத்தை காவல் துறையினர் சோதனை நடத்துவது தெரிந்த உடன்  சாமியார் வீரேந்திர தீக்சித் தலைமறைவாகி விட்டார். இவரை 2018 பிப்ரவரிக்குள் சரண் அடையும்படி டில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டு உள்ளது. ஊழலுக்கு எதிராக சாமியார் ராம்தேவ்பாபா 2013ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தில் இவரும் தனது பெண் சீடர்களுடன் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. ஓம் பாபா 

தன்னை சிவனின் அவதாரமாக கூறிக் கொண்டு நவீன ரக பெரிய பேருந்து ஒன்றை ஆசிரமாக மாற்றி ஊர் ஊராக சுற்றி பணம் பார்க்கும் ஓம் பாபா என்ற விவேகானந்த ஜா, எளிமையாக பணம் பண்ண சாமியார் தொழிலைச் செய்ததாக வும் இதற்காக 5 ஆண்டுகள் பயிற்சி மற்றும் பல லட்சங்களை முதலீடு செய்ததாகவும் கூறுகிறார். 

டில்லியில் தொடர்ந்து நவீன ரக மோட்டார் பைக்குகள், மற்றும் வெளிநாட்டு கார்கள் திருடுபோவது குறித்து விசாரித்து வந்த காவல்துறைக்கு கடந்த ஆண்டு டில்லி விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஒரு முக்கிய பிரமுகரின் இறக்குமதி கார் ஒன்று திருடுபோனது. இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்துவந்த டில்லி காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் ஆனந்த பருபத் என்ற இடத்தைச்சேர்ந்த மிட்டாய்க் கடை உரிமையாளர் மற்றும் அவரது உற வினர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.  

அப்போது அவர்கள் ஓம் பாபா என்ற விவேகானந்த ஜாவின் சீடர்கள் என்று தெரியவந்தது. மேலும் ஓம் பாபாவின் திட்ட மிடுதலின் பேரில் நகரில் வசதியானவர்கள் வசிக்கும் பகுதிகளில் கவனக்குறைவாக விடப்பட்ட விலைஉயர்ந்த கார், மோட்டார் பைக்குகளை திருடி அதை பீகார், அரியானா உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலையில் சாமியார் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் ‘பிக்பாஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச் சியில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப் பிடத்தக்கது.    

இவரது நவீனரக பேருந்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பல பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. இவருக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லாத நிலையில் கார்களை விற்கும் பணத்தை தங்கமாக மாற்றிவைக்கும் வித்தி யாசமான பழக்கம் கொண்டவர். இதனடிப் படையில் இவரிடம் இருந்து கிலோக்கணக்கில் தங்கத்தை கைப்பற்றி டில்லி காவல்துறையினர் மேலும் விசாரணை செய்துகொண்டு வரு கின்றனர். 

4. இச்சாதாரி பரமானந்த பாபா 

இவரது தொழில் பாலியல் தொழில். முக்கிய பிரமுகர்களுக்கு உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் பெண்களை வரவழைத் துத் தரும் பேராற்றல் பெற்றவர். இவரும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லி காவல் துறையால் கைதுசெய்யப்பட்டார்.   

இந்த ஆண்டு இந்திய ரயில்வேத்துறை யில் வேலை வாங்கித் தருவதாக டில்லி மற்றும் அரியானா போன்ற மாநிலங் களில் பல பட்டதாரிகளிடம் லட்சக் கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. இந்த புகாரை விசாரித்த அரியானா காவல்துறையினர் வசந்த விகார் பகுதியில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்த சதாசிவ் மிஸ்ரா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இச்சாதாரி பரமானந்த பாபா என்பவர் மத்திய அரசில் பல பிரமுகர்களின் நட்பு இருப்ப தாலும் அவர்கள் மூலம் பல அரசு வேலைகள் வாங்கித் தருவதாகவும் என்னிடம் கூறினார். 

இதனை அடுத்து நான் பலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கினேன். நான் வாங்கிய பணம் அத்தனையும் இச்சாதாரி பாபாவிடம் கொடுத்துள்ளேன் என்றார். இதனை அடுத்து இச்சாதாரி பாபாவை காவல் துறையினர் கைது செய்தனர். இவரைக் கைதுசெய்யச் சென்ற போது இவரது இல்லத்தில் இருந்து 22 பாலியல் தொழிலாளிகளையும் கைது செய்தனர். இதில் 3 பேர் வெளிநாட்டைச்சேர்ந்த இளம்பெண்கள் என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் விசாகாலம் முடிந்த பிறகும் நீண்டகாலம் இந்தியாவில் தங்கியிருந்தது தெரியவந்தது. 

இவர் ஆன்மீக கூட்டங்கள் அனைத் தையும் அய்ந்து நட்சத்திர விடுதிகளில் மிகவும் பெரும் பொருட்செலவில் நடத்துவார். இவரது ஆன்மீக கூட்டங்க ளுக்கு லட்ச ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்ட விசாரணையில் இவர் மீது 2010-ஆம் ஆண்டு தெற்கு டில்லி சங்கேத் மார்க் காவல்நிலையத்தில் பாலியல் தொடர்பான குற்றவழக்கு இருப்பதும், ராஜஸ்தான் உட்பட மூன்று மாநில காவல் நிலையங்களில் இவர்மீது வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. 

இவரது உண்மையான பெயர் சிவ் சர்மா - பின்னர் இவர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டு இச்சாதாரி (ஆசை நீக்கிய) பரமானந்த என்ற பெயரில் சாமியார் வேடத்தில் இருந்து உள்ளார். 

5. ராதே மா 

இந்த ஆண்டு பெண் சாமியார் ஒரு வரும் மும்பை காவல்துறையிடம் சிக்கியுள்ளார். மும்பையைச்சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான சாமியாராக இருக்கும் பஞ் சாபைச் சேர்ந்த கவுர் என்ற பெண்மணி தன்னை ராதையின் அவதாரமாக அறிவித்துக்கொண்டு ‘ராதே மா’ என்ற பெயரில் வலம் வருகிறார். 

இவருக்கு மிட்டாய் நிறுவன தலை வர் மும்பை புறநகர் பகுதியில் மிகப் பெரிய மாளிகை ஒன்றை கட்டித்தந்துள்ளார். 

அதே போல் இவருக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பல வசதிகள் கொண்ட பண்ணை வீடுகளும் உள்ளது. இவர் மீது பாலியல் தொழிலுக்கு தள்ளினார் என்ற குற்றச்சாட்டு உட்பட பல பிரமுகர்களை பணம் கேட்டு மிரட்டிய வழக்கும் உள்ளது. இந்த நிலையில் மிட்டாய்க்கடை அதிபரின் மருமகளிடம் அதிக அளவு வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய வழக்கில் பெண்க ளுக்கு எதிரான பெண் வன்கொடுமைச் சட்டத்தின்  கீழ் இவர் கைது செய்யப்பட்டு, பிணையில் உள்ளார். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் இவர் டில்லி சென்ற போது, டில்லியில் இணை ஆணையர் ஒருவர் இவரை தனது இருக்கையில் அமரவைத்து பணிவிடை செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

6. ராகவேஷ்வரா பாரதி

400 ஆண்டுகள் பழமைவாய்ந்த மடமாக கருதப்படும் சிமோகாவில் உள்ள மடம் சிறீராமச்சந்திர மடம், இம்மடத்தின் தலை வர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களா கவே உள்ளனர். இம்மடத்தின் தலைவராக ராகவேஷ்வரா பாரதி என்பவர் உள்ளார். இம்மடத்திற்கு என்று தனி செயற்கைக் கோள் தொலைக்காட்சி உள்ளது. 

இத்தொலைக்காட்சியில் அறிவிப்பாள ராக பணிபுரிய கன்னட பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரபலமான ஒரு பெண்ணை அழைத்திருந்தார். 

அந்தப் பெண்ணும், ராகவேஷ்வரா பாரதி மற்றும் அவரது மகனும் ஒரே அறையில் இருந்த காட்சி கருநாடக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, இந்த விவகாரம் தெரிந்ததும் பொதுமக்கள் மடத்தின் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சாமியார் அயல்நாடுகளில் இருந்து மடத்தின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் பெற்றும் அதை தன்னுடைய சொந்த செலவிற்கு பயன் படுத்துகிறார் என்றும், மட நிலம் தொடர் பான முறைகேடுகள் தொடர்பாகவும் இந்தச்சாமியார், 

அவரது மகன் மற்றும் மடத்தின் தலைமை நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. 

அந்த வகையில் சமீபமாக நித்தியா னந்தா பிரபல நடிகையுடன் ஆபாசமாக இருந்த காணொலி உண்மையானதுதான் என்று தடயவியல் ஆய்வில் உண்மை வெளியானது. 

இந்த ஆண்டுதான் சாமியார்கள் குழு ஒன்று கூடி ஃபிராடு (Fraud) சாமியார் பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் நித்தியானந்தா உட்பட 17 சாமியார்கள் உள்ளனர்.

- விடுதலை ஞாயிறு மலர், 30.12.17

செவ்வாய், 2 ஜனவரி, 2018

மோசடிச் சாமியார்கள்: இரண்டாவது பட்டியல் வெளியீடு



அலகாபாத், ஜன.1 இந்து மதம், பக்தியின் பெயரால் பாமர மக்களை வஞ்சித்து வரு கின்ற சாமியார்களின்  மோசடிகள் தொடர்ச் சியாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டி ருக்கின்றன.

பாலியல் வன்முறைகள், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் சாமியார்கள்ஈடுபட்டுவருவதுவெளிச் சத்துக்கு வந்த நிலையில், மோசடி சாமி யார்களின் பட்டியலை சாமியார்களுக் கான தலைமை அமைப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் அகில பாரதீய அகாரா பரிஷத் வெளியிட்டது.

முதல் பட்டியல்

அகில பாரதிய அகாரா பரிஷத் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிட்ட மோசடி சாமியார் பட்டியலில் 14 சாமியார்கள் இடம் பெற்றிருந்தனர். ஆசாராம் பாபு என்கிற அசு மல் சிறுமலானி, ராதே மா என்கிற சுக்பீந்தர் கவுர், சச்சின் தத்தா என்கிற சச்சிதானந்த் கிரி, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் ராம் ரகீம் குர்மீத் சிங், ஓம் பாபா என்கிற விவே கானந்த் ஜா, நிர்மல் பாபா என்கிற நிர்மல்ஜீத் சிங், ஷிவ்மூர்த்தி  திவேதி என்கிற இச்சாதாரி பீமானந்த், சுவாமி அசிமானந்த், ஓம் நமஹ சிவாய் பாபா, நாராயண் சாய், ராம்பால், ஆச்சார்யா குஷ்முனி, பிரகஸ்பதி கிரி, மல்க்கான் சிங் ஆகிய 14 பேரையும் மோசடி சாமியார்கள் என்று அகாரா பரிஷத் அமைப்பு பட்டிய லிட்டது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பட்டியல்

அகில பாரதீய அகாரா பரிஷத் எனும சாமியார்களுக்கான தலைமை அமைப்பு மோசடி சாமியார்களின் பட்டியலை ஏற்கெ னவே வெளியிட்டதைப்போல், தற்பொழுது மோசடி சாமியார்கள்குறித்த இரண்டாவது பட்டியலையும் அவ்வ மைப்பு வெளியிட் டுள்ளது. அதன்படி, டில்லியைச் சேர்ந்தவரான வீரேந்திர தீக் ஷித் கல்நேமி, உத்தரப்பிரதேசம் பாஸ்தியைச் சேர்ந்தவரான சச்சிதானந்த் சரஸ் வதி, அலகாபாத் திரிகால் பவந்த் ஆகிய மூவ ரையும் மோசடி சாமியார்கள் என்று அறிவித் துள்ளது.

அகில பாரதீய அகாரா பரிஷத்தின் எச்சரிக்கை

சாமியார்களுக்கானதலைமைஅமைப் பாகிய அகல பாரதீய அகாரா பரிஷத் தலைவர் சுவாமி நரேந்திர கிரி கூறுகை யில், “இவர் களைப் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பழைமைகளுக்குதொடர்பில்லாத அவர் களின் செயல்கள் கேள்வி களுக்குரியதாகவே உள்ளன. மற்ற சாதுக்கள் மற்றும் சன்னியாசி களுக்கு அவப் பெயரை ஏற்படுத்துவதாக அவர்களின் செயல்கள் உள்ளன. நாங்கள் உத் தரப் பிரதேச மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 2019ஆம் ஆண்டு நடை பெற உள்ள கும்பமேளாவையொட்டி,தீவிரமாக கண்காணிப்பதற்காக குழு அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் அனைத்து மடங்களிலிருந்தும்  சாமியார்கள் உறுப் பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள் ளோம்’’ என்றார். இந்து தர்மத்தை பாது காப்பதற்காக எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால்மடங்கள் நிறு வப்பட்டு, சங்கரரின் வழிகாட்டுதலின் படி கடுமை யான துறவறம் மேற்கொண்டவர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வழியில் அகாரா பரிஷத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தன்னைத்தானே சாமியார்களாக, கூறிக்கொள் வோர் குறித்து விழிப்பை ஏற் படுத்த அகாரா பரிஷத் எச்சரிக்கை வெளியிட்டு வருகிறது.

- விடுதலை நாளேடு,1.1.18

.


திங்கள், 13 நவம்பர், 2017

பெண்களிடம் பாலியல் வன்முறை: சாமியார் கைது

சேலம், அக். 30- பெண்களை மயக்கி பாலியல் வன்முறை செய்த,  சாமியாரை, சேலத்தில், காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம், தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன், (வயது 54) வீட்டில் கோவில் ஏற்படுத்தி, மாந்த்ரீகத் தொழில் செய்து வந்தார். ஜோதிடம் மட்டுமின்றி, மனோவசியம் செய்து நோய்களை குணப்படுத்துவதாகக் கூறி, பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜோதிடம் பார்க்க வந்த பெண்களை, சாமியார் நாகராஜன் மயக்கி, பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந் தது. பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை படம் எடுத்து, மிரட்டுவதாகவும் தெரியவந்தது. இது குறித்து, அறிந்த அப்பகுதியினர், நாகராஜனை கட்டிப்போட்டு, அவ ருக்கு பக்தர்கள் அளித்த பொருட்களை அள்ளி சென்றனர். அவர்கள், நேற்று முன்தினம், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், அப்பகுதி யைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்களை, பாலியல் வன்முறைசெய்ததோடு, படம் பிடித்து, கைப்பேசியில் மிரட் டல் விடுத்ததும், பணம், நகைகளை பறித்ததும், தெரியவந்தது. இதையடுத்து, சாமியார் நாகராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். நாகராஜனை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அள்ளிச்சென்ற ஒருவரையும், காவல்துறையினர் கைதுசெய்தனர். தற்போது,  சாமியாரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் குறித்த விவரங்களை, காவல்துறையினர் சேகரித்துள் ளனர். நாகராஜனிடம், காவல்துறையினர் தொடர்ந்து விசா ரித்து வருகின்றனர்.
- விடுதலை நாளேடு,30.10.17

செவ்வாய், 10 அக்டோபர், 2017

சிறுமியிடம் பாலியல் வன்முறை : பாதிரியார் கைது


திருவனந்தபுரம், அக்.10 கேரள மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் உள்ள கன்டந்திட்டா பகுதியில் தென்னிந்திய திருச் சபையை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயத்தில் பைபிள் வகுப்புக்கு, அப்பகுதியை பத்து வயது சிறுமி நேற்று சென்றாள்.

தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக அங்கு வந்த அவளது தந்தை, அந்த சிறுமியை அங்கு பணியாற்றும் பாதிரியார் பாலியல் வன்முறை செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் அடிப்ப டையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவலர்கள் பாதிரியார் தேவராஜ்(65) என்பவரை கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
-விடுதலை, 10.10.17

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

பாலியல் வன்கொடுமை, கொலைகளில் ஈடுபட்ட சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பு

ரூ.30 லட்சம் அபராதம்



ரோடக், ஆக.29  பெண் சீடர்கள் இருவரை பாலியல் வன்முறை செய்த வழக்கில், சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனை  விதித்து சிபிஅய் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனக்கு கருணை காட்டும்படி, நீதிபதியிடம் சாமியார் கதறி அழுதார். தண்டனை விபரம்  வெளியாவதைத் தொடர்ந்து அரியானாவில் ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டதால், வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.

அரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ‘தேரா சச்சா சவுதா’ ஆன்மீக அமைப்பின் தலைமை சாமியார் குர்மீத் ராம் ரகீம்  சிங் (50). இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் சீடர்கள் இருவர், சாமியார் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். 1999ஆம் ஆண்டு முதல் 2001  வரை சாமியார் தங்களை மிரட்டி பாலியல் வன் முறை செய்ததாக கடந்த 2002இல் புகார் அளித்தனர்.

15 ஆண்டுகளாக நடந்த வழக்கு

கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அரியானாவின் பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் கடந்த 25ஆம் தேதி தீர்ப் பளித்தது. இதில்,  சாமியார் குர்மீத் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி ஜகதீப் சிங், தண்டனை விபரம் 28ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவித்தார். இதைத்  தொடர்ந்து சாமியார் குர்மீத், ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்.தீர்ப்பு வெளியானதும், அரியானாவில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. சாமி யாரின் ஆதரவாளர்கள், பஞ்ச்குலா நீதிமன்ற வளாகத்தை சுற்றிய  பகுதியிலும், ஆசிரம தலைமையகம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத் திலும் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள், கடைகள் அடித்து  நொறுக்கப் பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த வன்முறையில் 38 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். துணை ராணுவம் குவிக்கப்பட்டும், 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டும் அரியானாவில் நடந்த பயங்கர வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாமியார் குர்மீத்தின் தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட இருந்ததால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது. பஞ்சாப்-அரியானா  உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சாமியார் குர்மீத் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுனாரியா சிறையில் சிறப்பு சிபிஅய் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சிறைச் சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளையும் ராணுவம் சீல் வைத்தது. சிறையை சுற்றி  10 கிமீ. தொலைவுக்கு யாரும் நுழைய அனு மதிக்கப்படவில்லை. ரோடக் மாவட்டம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டது.அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப் பட்டன. வதந்திகள் பரவுவதை தடுக்க செல்போன் இன்டர்நெட்  சேவை துண்டிக்கப் பட்டிருந்தது. சிறைச்சாலையை சுற்றி, பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். ரயில் நிலையம்,  பேருந்து  நிலையம் உள்ளிட்ட பொது இடங் களில் காவலர்கள்  குவிக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

சிறையில் சிறப்பு நீதிமன்றம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சிபிஅய் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் சண்டிகரில் இருந்து ரோடக்  மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். சுனாரியா சிறைச்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.

சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி ஜகதீப் சிங், தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாக, இரு தரப்பு வாதங் களை கூற தலா 10  நிமிடங்கள் வழங்கினார். அப்போது, சாமியார் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சாமியார் குர்மீத் சமூக சேவகர் என்பதால், அவருக்கு தண்டனை  வழங்கு வதில் கனிவு காட்ட வேண்டும் என கெஞ்சினார். சிபிஅய் தரப்பில், சாமியாருக்கு அதிக பட்ச தண்டனை வழங்க கேட்டுக் கொள் ளப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜகதீப் சிங்,  சாமியார் குர்மீத் துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இரு பெண்களை பாலியல் வன்முறை செய்த இரு குற்றச்சாட்டுகளுக்கு தலா 10  ஆண்டு சிறையும், தலா ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 
தலா ரூ.14 லட்சம் 

அபராதத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா ரூ.14 லட்சம்  வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். தலா 10 ஆண்டு சிறை தண்டனையையும் ஏககாலத்தில் இல் லாமல், தனித்தனியாக அனுபவிக்க வேண்டும்  எனவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தண்டனை விபரத்தை கேட்டதும், அங்கு ஆஜர்படுத்தப்பட்ட சாமியார் குர்மீத் உடைந்து போனார். கண்களில் கண்ணீருடன் கதறி அழுத அவர்,  நீதிபதியின் கையை பிடித்து தன்னை மன்னிக்கும்படியும், கருணை காட்டுமாறும் புலம்பினார். இதையடுத்து, குர்மீத்துக்கு மருத்துவ பரிசோதனை  மேற் கொள்ளப்பட்டு மீண்டும் சிறையில் அடைக் கப்பட்டார். தீர்ப்பு விபரம் வெளியானதைத் தொடர்ந்து வன்முறைகள் சம்பவங்கள் நடக்காமல் இருக்க  ராணுவம், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா மாவட்டத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. மாநிலத்தில் ஒன்றிரண்டு சம்ப வங்களை தவிர வன்முறை இன்றி அமைதி நிலவியது. குர்மீத்துக்கு வழங்கப்பட்ட தண் டனையை பல்வேறு தரப்பினர்  வரவேற்றுள் ளனர். இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக சாமியார் தரப்பில் கூறப்பட் டுள்ளது.

கண்டதும் சுட உத்தரவு

சாமியார் குர்மீத் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதும், கடந்த 25ஆம் தேதி நடந்த பயங்கர வன்முறையில் அரியானா மாநில அரசுக்கு கடும் அவப்பெயர்  ஏற் பட்டது. இதனால், தீர்ப்பு விபரம் வெளி யானதும் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. இதனால்,  கலவரத்தில் ஈடு படவோ, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ யார் முயன்றாலும் கண்டதும் சுட உத்தரவிடப் பட்டிருந்தது. ரோடக் மாவட்ட  துணை ஆணையர் அதுல் குமார் கூறுகையில், வன்முறையை யாராவது பரப்பினால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த காவல்துறையினர் தயங்க மாட்டார்கள்  என்றார்.

தீவிர கண்காணிப்பினால், சாமியார் ஆதர வாளர்கள் ஒருவர் கூட சுனாரியா சிறையை ஒட்டிய பகுதியில் நுழைய முடியவில்லை.

-விடுதலை29.8.17

சனி, 19 ஆகஸ்ட், 2017

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சாமியார் கைது



புதுடில்லி, ஆக. 11 தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்ட சாமியார் சதாச்சாரி என்கிற சுவாமிஓம் என்பவர் தேசிய குற்றவியல் தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சாமியாரின் சகோதரர் பிர மாத் ஜா என்பவருக்கு சொந்த மான மிதிவண்டி உதிரிபாகங் கள் கடையை உடைத்து, அந்த கடையிலிருந்து 11 மிதிவண் டிகளை திருடிச் சென்றதாக அவர்மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

டில்லி லோதி குடியிருப்பு காவல்நிலையத்தில் சாமியார் சதாச்சாரி என்கிற சுவாமிஓம் மீது 2008ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்ற வழக்குகளில் தொடர்புள்ள சாமியார் தொடர்ச்சியாக தலை மறைவானதையடுத்து, 2014ஆம் ஆண்டில் தேடப்படும் குற்றவாளியாக டில்லி நீதிமன் றம் அறிவித்தது. அவருக்கு எதிராக பிடியாணையையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

காவல்துறையின் தேசிய குற்றப்பிரிவு  தனிப்படை அமைத்து சாமியார் சதாச்சா ரியை தேடி வந்தது. இறுதியில் டில்லி பஜன்புரா பகுதியில் உள்ள அவருடைய வீட்டி லேயே சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட் டியாளராகவும் பங்கேற்றவராம்.

காவல்துறை குற்றப்பிரிவு டிசிபி மாதுர் வர்மா கூறுகை யில், பஜன்புராவில் உள்ள குடியிருப்பில் சாமியார் பதுங் கியிருக்கிறார் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் படி அவரை கைது செய்தோம் என்றார்.

-விடுதலை,11.8.17

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

14 பேர் படுகொலை - பாலியல் வன்முறை செய்த சங் பரிவாரைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் உறுதி!

குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது

14 பேர் படுகொலை - பாலியல் வன்முறை செய்த

சங் பரிவாரைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் உறுதி!

மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை, மே 5 -குஜராத்தில் மோடி ஆட்சியின் போது, பில்கிஸ் பானு என்ற முஸ்லிம் இளம்பெண்ணின் 3 வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் ஒரே இடத்தில் வைத்து சங்-பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

6 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவும், 12 பேர் கொண்ட சங்-பரிவாரக் கூட்டத்தால், மிகக் கொடூரமான முறையில் கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் 2008- ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல்முறையீடு மனு தள்ளுபடி

இதை எதிர்த்து, குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 11 பேருக்குமான ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில், கடந்த 2002- ஆம் ஆண்டு மோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைக் காரணம் காட்டி, சங்-பரிவார் கும்பல் முஸ்லிம் மக்களை நரவேட்டையாடியது. குழந்தை களைக்கூட தீயில் போட்டு பொசுக்கியது. பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மிகக் கடுமை யாகப் பாதிக்கப்பட்ட குடும்பம்தான் பில்கிஸ் பானுவு டையது.

குஜராத்தின் தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானு (19), தனது 3 வயது குழந்தை உட்பட குடும்பத்தினர் 16 பேருடன், சபர்வாத் என்ற இடத்தில் இருந்து பானிவேலா என்ற இடத்தை நோக்கி, கடந்த 2002-ஆம் ஆண்டு மார்ச் 3- ஆம் தேதி பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய சங்-பரிவார் கும்பல், பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உள்பட 14 பேரை அந்த இடத்திலேயே படுகொலை செய்தது. 3 வயது சிறுமி சலீகாவின் தலை கல்லில் அடித்துச் சிதைக்கப்பட்டது. அத்துடன், 6 மாதக் கர்ப் பிணியாக இருந்த பில்கிஸ் பானுவையும், 12 பேர் கொண்ட கும்பல் மிகக் கொடூரமான முறையில் பாலி யல் வன்முறைக்கு உள்ளாக்கியது.

வழக்கை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டல்கள்

தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை மிகத் துணிச்சலுடன் வெளியுலகுக்கு கொண்டு வந்த பில்கிஸ் பானு, நீதிகேட்டு நெடியப் போராட்டம் நடத்தினார். காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிய வைத்தார். ஆனால், வழக்கை திரும்பப் பெறச் சொல்லி அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன.

ஒருகட்டத்தில், இந்த வழக்கு குஜராத்தில் நடந்தால் விசாரணையில் நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த பானு, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

மும்பை சிபிஅய்

சிறப்பு நீதிமன்றத்திற்கு

பானுவின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

அங்கு வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதி மன்ற நீதிபதி யு.டி. சால்வி, கடந்த 2008-ஆம் ஆண்டு ஜனவரி 21- ஆம் தேதி தீர்ப்பளித்தார். அதில், பில்கிஸ் பானுவை வல்லுறவுக்கு உள்ளாக்கியது; அவருடைய குடும்பத்தினரைக் கொலை செய்தது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறிய நீதிபதி, ஜஸ்வந்திபாய், கோவிந்த்பாய், சைலேஷ் பட், ராதீஷாம் ஷா, பிபின் ஜோஷி, கேசர்பாய் கோகானியா, பிரதீப் மோர்தியா, பாஹாபாய் வோஹானியா, ராஜன் பாய் சோனி, நித்தேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகிய 12 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

இவர்களுக்கு இந்திய தண்டனைவியல் சட்டம் 302 (கொலை), 120 பி (சதித் திட்டம்), 149 (குற்றம் செய்யும் நோக்குடன் ஒன்று கூடியது), 376 (2) (இ) (ஜி) (கர்ப்பிணியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் ஆயுள் தண்டனையும் வழங்கினார்.

இவர்களில் ஒருவர் இறந்த விட்ட நிலையில், குற்றவாளிகளில் 11 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, குற்றவாளி களுக்கு ஆயுள் தண்டனை போதாது; அவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று சிபிஅய் யும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

ஆவணங்களை திருத்திய

6 பேருக்கும் தண்டனை

இவ்வழக்குகளை விசாரித்து வந்த மும்பை உயர் நீதிமன்றம், வியாழனன்று தனது தீர்ப்பை வழங் கியது. அதில், பில்கிஸ் பானுவின் வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ள உயர்நீதிமன்றம், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளி களுக்கு சாதகமாக ஆவணங்களை திருத்திய மருத்து வர்கள் மற்றும் அதிகாரிகள் என புதிதாக 6 பேருக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

-விடுதலை,5.5.17