திங்கள், 29 அக்டோபர், 2018

பாலியல் வன்முறை : பூசாரி கைது

சூரத், அக்.26 குஜராத்தில், தாயின் மருத்துவ செலவுக்காக, பண உதவி கேட்டு வந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்த பூசாரியை, காவல்துறையினர் கைது செய்தனர்.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் மாவட்டத்தில் உள்ள தபோலி என்ற இடத்தை சேர்ந்த கரண் ஸ்வரூப்தாஸ் பாபுபாய் சவானி, 24. இவர் சுவாமி நாராயண் கோவிலில், பூசாரியாக பணியாற்றி வந்தார். இதே பகுதியை சேர்ந்த, 20 வயது பெண், தன் தாயாரின் அறுவை சிகிச்சைக்காக, பண உதவி கேட்டு, பூசாரி கரண் ஸ்வரூப்தாஸை, சமீபத்தில் அணுகினார்.உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த கரண், அந்த பெண்ணை, பாலியல் வன்முறை செய்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு, வேறு எங்கும் உதவி கிடைக்காததால், நேற்று முன் தினம், மீண்டும் பண உதவி கேட்டு, கரணை சந்தித்தார்.அப்போது, இரண்டாவது முறையாக, அந்த பெண்ணை, கரண் ஸ்வரூப்தாஸ், பாலியல் வன்முறை செய்தார். இது பற்றி, அந்த பெண்ணின் பெற்றோர், காவல்துறையினர் புகார் அளித்தனர்.இதையடுத்து, கரண் ஸ்வரூப்தாஸை, காவல்துறையினர் கைது செய்தனர்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

வெள்ளி, 19 அக்டோபர், 2018

சாமியார்கள் ராஜ்ஜியத்தில்.... உய்யலாலா? கொலை - பாலியல் வன்முறை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை



புதுடில்லி, அக்.17 அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பால் சிங்ஜடின்.அய்.டி.அய்.டிப்ளமோபட்ட தாரியான இவர் அரியானாவில் நீர்ப்பாசனத் துறை இளநிலைப் பொறியாளராகப் பணி யாற்றினார்.

திருமணமாகி மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ள நிலையில் திடீர் என்று ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சாமி யாரானார். அரியானாவில் கரோதா கிராமத் தில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் அரி யானா முழுவதும் ஆசிரமங்கள் தொடங்கி ஆன்மிக சேவை ஆற்றுவதாக கூறிக் கொண்டார்.

இவர் ஆன்மிகம் தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசினார். இதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் காயம் அடைந்தார். இதையடுத்து சாமியார் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாகவும் புகார் கூறப்பட்டது.

இதையடுத்து காவல்துறை ராம்பால் மீது வழக்குப் பதிவு செய்து கடந்த 2014- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப் பட்டார். அப்போது ஏற்பட்ட மோதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை பலியானது.

ஹசார் நீதிமன்றத்தில் அவர் மீதான பல்வேறு வழக்குகள் தனித்தனியாக விசா ரிக்கப்பட்டு வந்தன. இதில் 2 வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் அவருக்கு ஹசார் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

சாமியார் ராம்பால் ஹசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற வழக்குகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

 - விடுதலை நாளேடு, 17.10.18

2 கொலை வழக்கு சாமியார் ராம்பால் குற்றவாளி என தீர்ப்பு

ஹிசார், அக்.13 அரியானா மாநில அரசில் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கி, பின்னர் ஆன்மிகத்தில் இறங்கி சாமியார் ஆனவர் ராம்பால் (வயது 63). பர்வாலா என்ற இடத்தில் அவரது ஆசிரமம் அமைந் துள்ளது. நவம்பர் 19, 2014 அன்று சாமியாரின்  ஆசிரமத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர் பாக ராம்பால் மற்றும் அவரது  ஆதரவா ளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. நவம்பர் 2018 இல் ஒரு பெண் அவரது ஆசிரமத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக ராம்பால் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மீது  இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொலைகள்  தொடர்பான  வழக் கில் சாமியார் ராம்பால்  கைது செய்யப்பட்டு   சிறையில் அடைக்கப்பட்டார். ராம்பால் கைதானதை தொடர்ந்து காவல் துறையினருக்கும், சாமியாரின் ஆதரவா ளர்களுக்கும் இடையே நடை பெற்ற மோதலில் ஒரு குழந்தை, 5 பெண்கள் என மொத்தம் 6 பேர் பலியாகினர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக சாமியாரின் ஆதரவாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாமியார் செய்த கொலைகள் தொடர்பான வழக்கு  ஹிசார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த   வழக்குகளில்  சாமியார் குற்ற வாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்த தீர்ப்பு அக் டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

முன்னதாக ராம்பால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 27 பேரிடம்   நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது.

- விடுதலை நாளேடு, 13.10.18

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

ஏமாறாதே! ஏமாற்றாதே!! பக்தி வேஷம் படுமோசம்!!!

 பெரம்பூரில் வசிப்பவர் 45 வயதான திருமதி. லதா ரமேஷ் என்பவர்; அவரது மகளுக்குப் பேச்சு வரவில்லை அல்லது திக்குவாய் என்ற குறையையோ போக்க, (மருத்துவர்களிடம் போகாமல்) மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரியும் 26 வயது தினேஷ் என்ற பார்ப்பனரிடம் சென்று கடவுளருள் மூலம் குணப்படுத்த வேண்டிக் கொண்டார்.

வீட்டிலுள்ள அத்தனை நகைகளையும் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி - "90 நாள் அம்மனிடம் தொடர்ந்து வேண்டி பூஜை, அபிஷேகம் - ஆராதனை செய்து வந்தால் அந்த வாய் பேசாத பெண் பேசுவாள்" என்று நம்பிக்கையூட்டினான் அந்த அர்ச்சகப் பார்ப்பனன் தினேஷ்.

90 நாள் கழித்து பாத்திரத்தைத் திறந்து பார்த்தால் 15 சவரன்கள் உள்ள நகைகள் வைத்த இடத்தில் - பாத்திரத்தில் வெறும் கற்களே இருந்தன.

பிறகுதான் நகைகளைப் பறிகொடுத்த இந்த லதா - வயிற்றிலும், வாயிலும்  அடித்துக் கொண்டு, போலீசில் புகார் கொடுத்துள்ளார்!

இந்த அர்ச்சகப் பார்ப்பனரான தினேஷ் - முதல் முறை - இப்படி பக்தி வேஷத்தில் 'சுவாகா' செய்யவில்லை. இவன் இதற்கு முன்பே - சரியான மோசடி மன்னனாம்! பள்ளிக்கரணையில் 60  வயதான வேணுகோபால் என்பவரையும், இப்படி ஏமாற்றியுள்ளதாக போலீஸ் ரிக்கார்டு கூறுகிறது; அவரிடம் 5 சவரன் நகையை வாங்கி, "உனது கெட்ட தோஷங்கள் நீங்க" என்று அவரிடம் மோசடிசெய்துள்ளான்!

காவல்துறையின் ஆவணங்கள் இவன் - இந்த அர்ச்சகப் பார்ப்பான் கை தேர்ந்த "மிஸ்டர் 420" என்கின்றன; 2017ஆம் ஆண்டிலேயே புழல் சிறைக்குச் சென்றவனாம்!

பிறகு மீண்டும் இவனுக்கு கோயில் அர்ச்சகர் வேலை எப்படிக் கிடைத்தது? யார் மூலம் இவன் கோயில் அர்ச்சகர் ஆனான்? இதுபற்றி எவரும் விசாரிப்பதில்லையா?

இவனும் எஸ்.வி.சேகர், எச். இராஜா போல 'ஜம்'மென்று காலரைத் தூக்கி விட்டு எடப்பாடி அரசின் போலீஸ், பற்றிப் பேசி 'அம்மனின் ஏஜெண்ட்டாக' வலம் வருகிறான் போலும்!

எவ்வளவு பஞ்சமா பாதகம் செய்தாலும் பார்ப்பனர்கள் தப்பித்து விடுகிறார்கள் - இது இன்று நேற்றிலிருந்து அல்ல!

திருவிளையாடற் புராண காலத்திலிருந்தே நாம் பார்த்து, கேட்டு, படித்து வரும் வாடிக்கையான - வழமையானவைதான்!

அன்னையைப் புணர்ந்து தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடு அளித்தது என்றால் பின்னை நீர் இழி நோய் குட்டம் பெரு வயிறு ஈளை வெப்பு என்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை. என்பதுதான் அந்த திருவிளையாடல் பாடல் - (மாபாதகம் தீர்த்தபடலம் - பாடல் 1573)

மதுரையில் தாயைப்புணர்ந்து, தட்டிக் கேட்ட  அவன் தந்தையைக் கொலை செய்த பார்ப்பனக் கொடூரனுக்கு சிவபெருமான் - சொக்கனோ - மக்கனோ ஏதோ ஒரு வடிவில் தோன்றி, "நீ பொற்றாமரைக் குளத்தில் (மீனாட்சியம்மன் கோயில் குளம்) மூன்று முறை மூழ்கி எழுந்தால் முக்தி நிச்சயம்" என்றாராம்!

அட பக்தி மூடநம்பிக்கைக்கு பலியான பரிதாபத்திற்குரிய பக்தர்களே, கேடி, கள்வன், பஞ்சமா பாதகன் என்றாலும் பார்ப்பனருக்குத்தான் பிராயச் சித்தம் - கழுவாய் - வருவாய் - மோட்சத்தில் 'ரிசர்வேஷன்' - உங்களுக்குப் பிச்சை பட்டை சோறு தானா?

"பக்தி வந்தால் புத்தி போகும்

புத்தி வந்தால் பக்தி போகும்"

என்றாரே தந்தை பெரியார் - அது சரிதானே?

***


முழு நிலவு முந்நாள் என்றால் அதில் ஊடகங்களில், சில தொலைக்காட்சிகளில் - நிலவில் சாய்பாபா உருவம் தெரிகிறதாம்! இப்படி ஒரு திடீர் புருடா! உடனே பார்த்ததாக இரண்டு பேர்! என்னய்யா கொடுமை! அவனவன் கையில் செல்போன் - ஆன்லைன் என்ற யுகத்தில் கூடவா இப்படி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

முன்பு நமது குழந்தை பருவத்தில் நிலாவில் "அவ்வைக் கிழவி பாட்டி பாக்கு இடிக்கிறாள், வடை சுடுகிறாள்" என்று பாட்டிகள் கதை சொல்லி சோறு ஊட்டியது உண்டு! இப்போதும் இப்படியா?

***


தொலைக்காட்சியில் மற்றொரு அருவருப்புக் காட்சியை ஒரு  நாள் கண்டேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்ற "அறிவின் வேந்தர்" ஒருவர் - வேட்டி மட்டும் கட்டி, சட்டையில்லாமல் கோயிலில் பக்திப் பரவசத்துடன் "டான்ஸ்" ஆடுகிறார்! பாஸ்கர் என்பது அவரது திருநாமமாம்! இவருக்கு "பக்தி ரத்னா" பட்டத்தை - கொடுக்கலாமே! இவருக்குப் பதவி  கொடுத்த மேதைகள் யாரோ! வெட்கம்! மகா வெட்கம்!! - இல்லையா?

-  விடுதலை நாளேடு,27.9.18

தோசம் கழிப்பதாக கூறி பெண் கழுத்தறுத்து கொலை! சிக்கினான் சாமியார்

புதுச்சேரி, செப்.22 நகைக்கு ஆசைப்பட்டு, தோசம் கழிப்பதாக கூறி, இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த  சாமியார், காவல்துறையினரிடம் சிக்கினான்.

புதுச்சேரி மாநிலம், கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அசோக்; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சிந்துஜா, வயது 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை, கரிக்கலாம்பாக்கம் தெப்பக்குளம் காளி கோவில் அருகே, கழுத்து அறுபட்ட நிலையில், சிந்துஜா கொலை செய்யப்பட்டு கிடந்தார். நரபலியா என்ற சந்தேகத்தில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராசு, 46, என்ற  சாமியார், அசோக் குடும்பத்தில் தோசங்கள் இருப்பதாகவும், அதை கழித்தால் தான் குடும்பம் செழிக்கும், திருமணம் நடக்காமல் உள்ள அசோக் தங்கை திலகத்திற்கு திருமணம் நடக்கும் என கூறி, அவ்வப்போது பரிகாரம் செய்து, பணம் பறித்துள்ளான்.அசோக்கிற்கு தெரி யாமல், சிந்துஜாவிடம் கணவர் உயிருக்கு ஆபத்து என கூறி, அதற்கு உண்டான பூஜைகள் செய்தால், அவரை காப்பாற்றி விடலாம் எனவும் கூறியுள்ளான். இதற்காக, நகைகளுடன், காளி கோவிலுக்கு வருமாறும் கூறியுள்ளார்.மூடநம்பிக்கையில் மூழ்கிய சிந்துஜா,  சாமியாரின் பேச்சை நம்பி, 20ஆம் தேதி இரவு, 8:30 மணியளவில் குளித்து, கணவரின் தங்கையின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த நகைகளுடன், காளி கோவிலுக்கு சென்றுள்ளார்.

காளி கோவிலில் சாமி கும்பிட்ட சிந்துஜாவை, அருகே இருந்த புளியமரத்தடிக்கு கோவிந்தராசு அழைத்து சென்று, மரத்தடியின் கீழ், சாக்கின் மீது கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர வைத்துள்ளான். அவரது புடவையாலேயே இரு கைகளையும் கட்டியுள்ளான்.இறந்து போன மாமனாரை நினைத்து, ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுமாறு தெரிவித்தவன், கண் இமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த கத்தியால், சிந்துஜாவின் கழுத்தை அறுத்து, கீழே சாய்த்து, மடியில் வைத்திருந்த நகைகளுடன், தலைமறைவாகி விட்டான்.போலி சாமியார் கோவிந்தராசுவை காவல்துறையினர் கைது செய்து, விசாரிக்கின்றனர்.

- விடுதலை நாளேடு, 22.9.18

சனி, 22 செப்டம்பர், 2018

கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல்


03:00 pm Sep 22, 2018 | dotcom@dinakaran.com(Editor)





கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு செப்.24 வரை போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிரான்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. 

...........

பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய பேராயர் பிராங்கோ கைது

கொச்சி, செப்.22  கன்னியாஸ்திரி பாலியல் வன்முறை வழக்கில், கேரள காவல்துறையினர் விசாரிக்கப்பட்டு வந்த, பேராயர் பிராங்கோ, 54, நேற்று கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ, 2014 - 2016இல், கேரள மாநிலம் கோட்டயத்தில் பணியாற்றினார்.அப்போது, அங்கிருந்த கன்னியாஸ்திரியை மிரட்டி, 13 முறை பாலியல் வன்முறை செய்ததாக, காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரிக்கின்றனர். இதையடுத்து, பேராயர் பொறுப்பிலிருந்து, பிராங்கோ விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில், காவல்துறையினரின் தொடர் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானதை அடுத்து, நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

 - விடுதலை நாளேடு, 22.9.18

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

அசாம் மாநிலத்தில் விஷ்ணுவின் அவதாரமாம் ‘முத்த’ சாமியார் கைது



மக்களிடையே ஏற்படுகின்ற  திருமண பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கின்ற சக்தி தனக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு, ராம்பிரகாஷ் சவுகான் என்ற சாமியார், மூடநம்பிக்கை களால் தன்னை நாடி வருகின்ற பக்தர்களில் பெண் பக்தைகளுக்கு முத்தம் கொடுப்பாராம். அதன்பின்னர் ஏமாறுகின்ற பெண்களை வஞ்சித்து வந்துள்ளார்.


போரால்டப் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக அவர் கோயில் கட்டியுள்ளதாகவும், ‘முத்த சாமியார்’ என்ற பெயருடன், தன்னை நாடிவரும் பக்தர்களை ஏமாற்றி வந்துள்ளதாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ராம்பிரகாஷ் சவுகான் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.


பக்தர்களில் பெண்களை கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாராம். முத்தங்கள் கொடுப் பாராம். அப்படியே மெய்மறந்த நிலையில் சாமியாராக அந்த பக்தர்களின் குறைகளை கேட்டு, தீர்ப்பதாகக் கூறுவாராம்.


மத்திய அசாம் மோரிகான் மாவட்டத்தில் போரல்டப் கிராமத்தில் தன்னை சக்தியுள்ள சாமியார் என்று பரப்பிவிட்டு, உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு, குறிப்பாக திருமணப் பிரச் சினைகள், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பக்தர்களிட மிருந்து ஏராளமான அளவில் பொருளை அபகரித்துள்ளார்.


மோரிகான் காவல்துறை தலைமை அலுவலர் ஜே.போரா கூறியதாவது:


“சாமியார் ராம்பிரகாஷ் சவுகான் பெண் களை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு அது ஒரு சிகிச்சை முறை என்று கூறிக்கொண்டு, பக்தர்களை சுரண்டி வந்துள்ளார். குறிப்பாக பெண்களை ஏமாற்றியுள்ளார். ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, சாமியார் ராம்பிரகாஷ் சவுகானைக் கைது செய்துள்ளோம்’’ என்றார்.


ராம்பிரகாஷ் சவுகான் விஷ்ணுவிட மிருந்து சக்தியைப் பெற்றான் என்றும், பெண்களை முத்தமிட்டால் அவர்கள் குண மடைகிறார்கள் என்றும் தன் மகன்குறித்து கூறிவந்த அவன் தாயையும் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.


அசாம் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவுக்கு கல்வி பெற்ற மாவட்டமாக மோரேகான் உள்ளது.


கவுகாத்தி நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள மாயாங் எனும் கிராமமே மூடநம்பிக்கையால் மக்களை ஏமாற்றி வருகின்ற சாமியார்களை, மந்திரவாதிகளைக் கொண்டுள்ள கிராமமாக உள்ளது. ஓஜா அல்லது பெஜ் என்று குணப்படுத்தல் என்கிற பெயரால் போலியான சிகிச்சை சாமியார்களால் அளிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் தங்களை விஷ்ணுவின் அவதாரம் என்றே கூறிக்கொள் கின்றனர்.


அசாமில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொண்ட ராம்பிரகாஷ் சவுகான் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டான்.


சாமியார்கள் கைது செய்யப்படும் தருணம் இது. ஜெகத்குரு என்று பார்ப்பனர் போற்றிய சங்கராச்சாரியாரே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட வில்லையா?

- விடுதலை ஞாயிறு மலர், 1.9.18