ஞாயிறு, 30 அக்டோபர், 2016

சிறுமி பாலியல் வன்முறை அர்ச்சகர் கைது


பெங்களூரு, அக்.29 பெங்களூரு இந்திராநகரில் 6 வயது குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன் முறை செய்த கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு இந்திராநகர் திப்பசந்திரா பகுதியை சேர்ந் தவர் சிவகுமார் (54). அப்பகுதி யில் உள்ள கோவிலில் அர்ச்ச கராக பணியாற்றி வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு  கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி விளை யாடி கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட சிவகுமார், சிறு மியை கோவிலுக்குள் கடத்தி சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார்.  இச்சம்பவம் சிறுமி வீட்டிற்கு திரும்பியதும் தெரியவந்தது. இது குறித்து பெற்றோர் இந்திராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். இந்திராநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரி டம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-விடுதலை,29.10.16

வெள்ளி, 28 அக்டோபர், 2016

“தோஷம்” கழிப்பதாக மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பாலியல் வன்முறை: சாமியார் கைது


சென்னை, செப்.11 தோஷம் கழிப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்தததாக கைதான  சாமியார் காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக பெண்ணின் தாயும் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் நாகமணி (வயது 42). இவருடைய 19 வயது மகள் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் துடித்தார். அவரை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இன்னும் திருமணம் ஆகாத அந்த இளம்பெண் கர்ப்பம் ஆனதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், இதுபற்றி துரைப் பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் இளம் பெண்ணின் தாய் நாகமணியிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், ‘‘நான் மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் கோவி லுக்கு செல்வது வழக்கம். அங்கு சாமியரான விழுப்புரம் மாவட் டம் விக்கிரவாண்டியை சேர்ந்த கார்த்திக்(27) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் தோஷம் கழிப்பதாக கூறி எனது மகளை பாலியல் வன்முறை செய்தார்’’ என காவல் துறையினரிடம் கூறினார்.
இதையடுத்து துரைப்பாக்கம் காவல் துறையினர், சாமியாராக மக்களை ஏமாற்றி வந்த கார்த் திக்கை கைது செய்தனர். காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
மேல்மலையனூர் கோவி லுக்கு நாகமணி மாதந்தோறும் வரும்போது அவரது குடும்ப கஷ்டங்களை என்னிடம் சொல் வார். இதனால் அவருக்கு தோ ஷம் இருப்பதாகவும், அதை பூஜை செய்து சரிசெய்து விடலாம் எனவும் அவரிடம் கூறினேன். அதை நம்பி நாகமணியும் பூஜைக்கு வந்தார்.
அப்போது விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து அதை நாகமணிக்கு கொடுத்தேன். அவர் அந்த தண்ணீரை குடித்ததும் மயங்கினார். பின்னர் நான் அவரை பாலியல் வன்முறை செய்தேன். அதன் பிறகு நாங்கள் நெருங்கி பழகி வந்தோம். இத னால் நான் நாகமணி வீட்டுக்கும் சென்று வந்தேன்.
அப்போது வீட்டில் அவரது மகளை பார்த்ததும் அவரையும் அடைய எண்ணினேன். அப் போது நாகமணி, தனது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாக வும், எப்போதும் சோகமாக இருப்பதாகவும் என்னிடம் வேத னையுடன் கூறினார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த நான், உனது மகளுக்கும் தோஷம் உள்ளது. அதை கழிக்க அவருக்கு தனியாக பூஜை செய்ய வேண்டும். மேல்மலையனூருக்கு அழைத்து வா என்று கூறினேன்.
அதை நம்பி அவரும் மகளு டன் அங்கு வந்தார். அப்போது நாகமணியை மட்டும் பூஜை பொருட்களை வாங்கி வரும்படி கூறி அனுப்பி விட்டேன். அதன் பிறகு நாகமணிக்கு கொடுத்தது போலவே அவரது மகளுக்கும் விபூதி தண்ணீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அவர் மயங்கியதும் அவரையும் பாலி யல் வன்முறை செய்தேன்.
இவ்வாறு கார்த்திக் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தாயும் கைது
இதையடுத்து சாமியாருக்கு உடந்தை யாக இருந்ததாக இளம் பெண்ணின் தாய் நாகமணியையும் காவல்துறையினர் கைது செய் தனர். கைதான 2 பேரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-விடுதலை,119.16

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பாதிரியார்கள் திருமணம்: போப்பிடம் பெண்கள் விண்ணப்பம்


வாடிகன்,மே 21- வாடிகன் சிட்டியில் கத்தோலிக்க பாதிரி யார்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்க வலி யுறுத்தி போப்புக்கு பெண்கள் கடிதம் எழுதியுள்ளனர். கத் தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பழக்கம் சுமாராக ஆயிரம் ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை யில் இத்தாலியை சேர்ந்த 26 பெண்கள் போப் பிரான்சி சுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாங்கள் அனைவரும் கத்தோ லிக்க கிறிஸ்தவ மத பாதிரியார்களை காதலிக்கிறோம். அவர் களும் எங்களை மனமாற விரும்புகின்றனர். ஆனால், எங் களை திருமணம் செய்ய விடாமல் மத கோட்பாடு தடுக் கிறது. இதனால் நாங்கள் கடும் துயருக்கு ஆளாகி இருக் கிறோம். அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எனவே, அவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதியுங்கள். உங்களின் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறோம். பல கஷ்டங்களில் தவிக்கும் அவர்களுக்கு மாற்றம் தாருங்கள். இதன் மூலம் அனைத்து தேவாலயங்களிலும் நல்லது நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். கடிதத்தில் தங்களின் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை மட்டும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.  கடிதத்தில் பல தொலைபேசி எண்களையும் எழுதியுள்ளனர். இத்தகவலை வாடிகன் இணையதளம் வெளியிட்டுள்ளது.
-விடுதலை,21.5.14

பாதிரியாரின் காமப் பசிக்கு மாணவி இரை!


திருவனந்தபுரம், ஜூலை 28_ கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.
இலவச கணினிப் பயிற்சி
இந்தக் கோவிலின் சார்பில் ஒரு இலவச கணினிப் பயிற்சி நிறுவன மும் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த நிறுவனத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை பெண்கள் இலவச மாக கணினி பயிற்சி பெற்று வந்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியும் கணினி பயிற்சி பெற்று வந்தார். அந்த மாணவியிடம் பாதி ரியார் ஜோமோன் அன் பாக பழகினாராம். மேலும் அவரது படிப் பிற்கும் பல உதவிகளை செய்து வந்தாராம்.
இந்த நிலையில் அவர் ஆசைவார்த்தைகளை கூறி அந்த மாணவியை பாலியல் வன்முறை செய்துள்ளார். மேலும் அதை தனது செல்பேசி யில் படம் பிடித்து வைத்து கொண்டு மிரட்டி அந்த மாண வியை தொடர்ந்து தனது ஆசைக்கு பலியாக்கி வந்துள்ளார்.
காவல் துறை கண்காணிப்பாளரிடம்...
நாளடைவில் அந்தப் பாதிரியாரின் தொந்தரவு அதிகமானது. தனது ஆசைக்கு இணங்காவிட் டால் அந்த மாணவியின் ஆபாச படத்தை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டத் தொடங்கினார். இதனால் பயந்துபோன அந்த மாணவி இடுக்கி காவல் துறை கண்காணிப்பாள ரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி எடுத் துக்கூறி கதறி அழுதார்.
அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு காவல் துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி அந்தப் பாதிரியாரைக் கைது செய்தனர். அவரது செல்பேசியை பறிமுதல் செய்து சோதனை செய்த போது அதில் அந்த மாணவி மட்டுமல்லாமல் வேறு பல பெண்களின் ஆபாசப் படங்களும் பதிவு செய்யப்பட்டு இருந் தது தெரிய வந்தது.
மேலும் அந்தப் பாதிரி யாரின் கணினியிலும் ஏராளமான ஆபாச படங்களும் பதிவு செய் யப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் பாதிரி யார் ஜோமோன் மேலும் பல பெண்களின் வாழ்க் கையும் சீரழித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையி னர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் பாதிரி யாருக்கு எதிராக  பெண் கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துப் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர்.
-விடுதலை,18.7.14

செக்ஸ் குற்றம் மன்னிப்புக் கோரும் போப்!

வாடிகன்சிட்டி, ஜூலை 10_ மேலை நாடுகளில் சில கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் பிஷப்களால் செக்ஸ் குற்றத்துக்கு ஆளாகி பல சிறுவர்  சிறுமிகள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளி யாகி இருந்தன. அவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர் _சிறுமிகளிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டார்.
வாடிகன் சிட்டியில் நேற்று அவர் பிரார்த்தனை கூட்டம் நடத்தினார். அதில் பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தால் பாதிக் கப்பட்ட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் நீண்ட உரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாதிரியார்களின் செக்ஸ் குற்றத்தை மறுந்து விடும்படி உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் உங்களுக்கு செய்த கொடுமைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இருந்தாலும் அவர்கள் செய்த குற்றத் தையும் பாவச் செயல்க ளையும் விட்டு விடுங்கள். அவர்களின் செயலுக்காக உங்களிடம் நான் மன் னிப்பு கேட்டுக் கொள்கி றேன்.
செக்ஸ் குற்றத்தால் பாதிக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்கள் மற் றும் தற்கொலை செய்தவர் களை நினைக்கும்போது மிகுந்த மனவேதனையாக உள்ளது என்றார்.
பிரார்த்தனையின்போது அவர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அது ஸ்பெ யினில் மொழி பெயர்க்கப் பட்டது.
-விடுதலை,10.7.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சாமியார் சல்லாபம்: டி.வி. காட்டிக் கொடுத்தது



பெங்களூர், மே 2-வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னைத் தானே விளம் பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி சிறீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது.
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் ஓட்டுநர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச் சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரைக் கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரிய வில்லை.

சபரிமலையில் பெண் பக்தர்களிடம் தவறான நடத்தை
திருவனந்தபுரம், மே 2- சபரிமலையில் உள்ள  அய்யப்பன் கோ விலுக்கு லட் சக்கணக் கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயதுக் குட்பட்ட சிறுமிகளும் 50 வயதுக்கு மேலான பெண்களும் மட்டுமே சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய முடியும்.
இந்த நிலையில் கடந்த சித்திரை விஷு பண்டிகையின்போது சபரிமலை சன்னிதானத்தில் 18ஆம் படி அருகே பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவல்துறை துணை ஆய்வாளர் ஜகாங்கீர் என்பவர் சிறுமிகளிடமும், பெண் பக்தர்களிடமும் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக பக்தர்கள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த புகார் மீது சரியான விசாரணை நடத்தப்படவில்லை.
இதைத் தொடர்ந்து காவல் உயர் அதிகாரி ஏ.டி.ஜி.பி.ஹேமச்சந்திரனிடம் புகார் கூறப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நடைபெற்ற விசா ரணையில் துணை ஆய்வாளர் ஜகாங்கீர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
-விடுதலை,2.5.14

சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து தலைமறைவான பாதிரியார் பிரேசிலில் கைது


ரியோ டி ஜெனிரோ, மார்ச் 2 அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதி யில் கிறிஸ்துவ மத தொண் டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னி யாஸ்திரி முகாமை நடத்தி வந்த பாதிரியாரான விக்டர் அர்டன் பெர்ணார்ட் (53) என்பவர் அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த ஒரு சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டு கள் வரை பலவந்தப்படுத்தி பாலியல் வன்முறை செய்த தாக புகார்கள் எழுந்தன.
இதேபோல், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத் தியதாக அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண்ணும் தெரிவித்தார்.  அவரால் பாதிக்கப் பட்ட மேலும் பல பெண் கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தயங்கி வந்த நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010ஆ-ம் ஆண்டு திடீரென தலைமறை வானார்.
அவர் பிடிபட் டால் அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில் அமெரிக்க காவல்துறை யினர் அவரை வலைவீசி தேடிவந்தனர்.
அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்ற வாளியாகவும் அறிவிக்கப் பட்டிருந்த அவரை பிரே சில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரை யாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங் களாவில் நேற்று பிரேசில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவருடன் சுமார் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்த கணி னிகள், செல்பேசிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரி கின்றது.
-விடுதலை,2.3.15