வெள்ளி, 23 ஜனவரி, 2015

பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சில்மிஷம்





ராமநாதபுரம்: பரிகார பூஜை என்று கூறி இளம்பெண்ணை  நிர்வாணப்படுத்தி சில்மிஷம் செய்த, தேவிபட்டினத்தை சேர்ந்த  அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட் டம், தேவிப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர்  கணேசமூர்த்தி (35). அதிமுகவை சேர்ந்த இவர் தேவிப்பட்டினம் கிளை  ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். தேவிபட்டினம்,  நவபாஷாண கோயிலுக்கு வருவோரை அணுகி தோஷம் கழிக்க  பரிகாரம் என்ற பெயரில் பூஜை செய்து வந்துள்ளார். 3 நாட்களுக்கு  முன்னர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை  பிறந்தது. தொப்புள் கொடி சுற்றிய நிலையில் குழந்தை பிறந்ததால்  பரிகாரம் செய்ய குடும்பத்தினர் அந்த பெண்ணை, குழந்தையுடன்  தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

அந்த பெண்ணை மட்டும் இரவு 8 மணிக்கு நவபாஷாண கோயிலுக்குள்  கணேசமூர்த்தி தனியாக அழைத்து சென்றுள்ளார். பூஜையின் போது  அருகில் யாரும் இருக்கக் கூடாது என உடன் வந்திருந்த அந்த  பெண்ணின் உறவினர்களிடம் கூறியுள்ளார். கடற்கரையில் இருந்து 50  மீட்டர் தொலைவில் கோயில் கடலுக்குள் உள்ளதால், கோயில்  வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை கரையில் நிற்பவர்களால்  பார்க்க முடியாது. இதை சாதகமாக்கிக் கொண்ட கணேசமூர்த்தி, பரிகார  பூஜை செய்வதாக கூறி அழைத்து சென்ற அந்த பெண்ணை  நிர்வாணமாக்கியுள்ளார்.

சிறிய லிங்கத்தை வைத்து பெண் ணின் உடல் முழுவதும் 108 முறை  தடவி கொடுத்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். கணேசமூர்த்தியின்  இந்த பூஜை குறித்து, பெற்றோரிடம் அந்த பெண் உடனடியாக  சொல்லவில்லை. ஊருக்கு சென்றதும் தனக்கு நடந்த கொடுமைகளை  கூறி கதறி அழுதுள்ளார். தேவிபட்டினத்தை சேர்ந்த டூரிஸ்ட் கைடு  கற்பூரசுந்தரம் என்பவர்தான் பரிகார பூஜைக்காக கணேசமூர்த்தியை  சிவகங்கையை சேர்ந்த பெண்ணின் உறவினர்களுக்கு அறிமுகம் செய்து  வைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள்  கற்பூரசுந்தரத்திடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த கற்பூரசுந்தரம்,  கணேசமூர்த்தியை சந்தித்து தட்டி கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி கற்பூரசுந்தரத்தை கடுமையாக தாக்கி,  கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து  கற்பூரசுந்தரம் தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதில்,  பெண்களை இரவில் தேவிபட்டினம் கோயிலுக்கு அழைத்து சென்று  நிர்வாணப்படுத்தி, சில்மி ஷம் செய்து வந்த விபரத்தையும் விரிவாக  தெரிவித்துள்ளார். கொலை மிரட் டல் விடுத்த வழக்கில்  கணேசமூர்த்தியை போலீ சார் நேற்று கைது செய்தனர். பெண்களிடம்  சில்மிஷம் செய்தது குறித்து, வழக்கு ஏதும் பதியவில்லை.

இதையறிந்த தேவிபட்டினம் பாஜ கட்சியின் மாநில செயற்குழு  உறுப்பினர் மகேந்திரன், தேவிபட்டினம் போலீசில் தனியாக புகார்  அளித்துள்ளார். இதில், யாத்திரை வந்த பெண் பக்தரிடம் மோசமாக  நடந்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து, கணேசமூர்த்தி மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

போலிகளுக்கு எப்போது வரும் தடை?

வெளியூரை சேர்ந்த பெண் பக்தர்களிடம் கணேசமூர்த்தி தனது  சில்மிஷங்களை அரங்கேற்றியுள்ளார். தோஷம் கழிக்க நிர்வாண பூஜை  அவசியம் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் பக்தர்களை  குறி வைத்து இந்த பரிகார பூஜைகளை செய்துள்ளார். இளம்பெண்கள்  என்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் பூஜையை செய்ய வேண்டும்  என்பாராம். கோயில் வளாகத்தில் இதுபோன்ற போலி ஆ‘சாமி‘கள்  ஏராளமானோர் திரிகின்றனர். இரவு நேரங்களில் பரிகார பூஜை நடத்த  தடை விதிக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வியாழன், 22 ஜனவரி, 2015

பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல்


 10 மணி நேர கடுமையான மோதல்
* 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்


பெஷாவர்: பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் நுழைந்து, வகுப்பறைகளில் இருந்த குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இதில்  140 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 160 பேர் உயிரிழந்தனர். சுமார் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கடும் சண்டை 10 மணி நேரம் நீடித்ததால் பெரும்  பரபரப்பு நிலவியது. பள்ளிக்குச் சென்ற தங்களது குழந்தைகளின் நிலை அறிய பள்ளிக்கு வெளியே திரண்ட பெற்றோரை சமாதானப்படுத்தவும், தடுக்கவும் முடியாமல்  ராணுவத்தினர், போலீசார், பாதுகாப்பு படையினர் திணறினர். பாகிஸ்தான் முழுவதும் 146 ராணுவ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ராணுவ அதிகாரிகள்,  வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் 10 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். தாக்குதல் ஆரம்பம்:  இதேபோன்ற ராணுவப் பள்ளி, பெஷாவர் நகரின், வார்சாக் சாலையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 800 க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,  பள்ளிக்கு அருகேயுள்ள கல்லறைக்குள் பதுங்கியிருந்த, தற்கொலைப்படை தீவிரவாதிகள், கருப்பு உடைகளை அணிந்து, பள்ளிச்சுவரில் ஏறிக் குதித்து நேற்று காலை உள்ளே  நுழைந்தனர். 

இதையடுத்து, அங்கிருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பல தீவிரவாதிகள் ராணுவ  உடையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வகுப்புக்குள் நுழைந்து வெறியாட்டம்: தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள,  நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும், தீவிரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் பலரது உடலை துளைத்தன. உயிரைக் காக்கும் முயற்சியாக ஏராளமான மாணவர்கள்  வகுப்பறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து, ஒவ்வொரு வகுப்பாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக சுட்டனர்.  மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், பலரது உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. ரத்த வெள்ளம்: கண்மூடித்தனமாக  தீவிரவாதிகள் சுட்டதில், மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். வகுப்பறைகள், பள்ளி வராண்டா என்று எங்கு பார்த்தாலும் ரத்தம் சிதறி கிடந்தது. 

குண்டு காயமடைந்த மாணவர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. பல மாணவர்கள் தரையில் படுத்து உயிர் தப்பியுள்ளனர். தீவிரவாதிகள் வேறு  திசைக்கு சென்றதும் பல மாணவர்கள் வெளியே தப்பி ஓடிவந்துள்ளனர். ராணுவம் முற்றுகை: பள்ளிக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றி தகவல்  கிடைத்ததும் ராணுவத்தினர் விரைந்து வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். ஹெலிகாப்டரிலும் வானில் வட்டமிட்டபடி கண்காணித்தனர். பள்ளிக்குள் துப்பாக்கியால் சுடும்  சத்தமும், குண்டுகள் வெடித்த சத்தமும் கேட்டதால், தீவிரவாதிகள் எத்தனை பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.  பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டனர். மருத்துவமனைகளில்...: தாக்குதல் சம்பவத்தை அறிந்த,  ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கையில் துரிதமாக செயல்பட்டனர். 

25 ஆம்புலன்சுகள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் பெஷாவர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரத்தம் தட்டுப்பாடு  ஏற்பட்டதால், உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே, சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோரும், பள்ளியை முற்றுகையிட்டனர். பிரதமர்  நவாஸ் ஷெரீப், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து ராணுவத்தின் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். 

160 பேர் உயிரிழப்பு

தாக்குதல் சம்பவத்தில் சிக்கி 140 மாணவர்கள், ஒரு ஆசிரியர், ராணுவ வீரர் என மொத்தம் 160 பேர் உயிரிழந்தனர். தீவிராவதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, சில  மாணவர்கள், பள்ளியின் பின்புற வாசல் வழியாகச் சென்று உயிர் தப்பினர். சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலரது நிலைமை  கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.  ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில், 8 தீவிரவாதிகள் சுட்டுக்  கொல்லப்பட்டனர். 

பிணைக் கைதிகள்

பள்ளி ஆடிட்டோரியத்தில் பிரின்சிபால், 20 ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 60 பேரை, தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று, தகவல்கள்  வெளியாகியது. இதனால், பள்ளிக்குள் ஏராளமான தீவிரவாதிகள் நுழைந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. தீவிரவாதிகளிடம் இருந்து மாணவர்களை மீட்கும் முயற்சியில்  ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

பீதியை கிளப்பும் தீவிரவாதிகள் 

ராணுவப் பள்ளி மீதான தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பெறுப்பேற்றுள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் முகமத் கொராசனி  கூறியதாவது: “ராணுவத்தினர் எங்கள் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ளாதவரை, நாங்கள் ஒவ்வொரு ராணுவ பள்ளிகளையும் குறி வைத்து தாக்குவோம்.  எங்களுடைய 6 வீரர்கள் வெற்றிகரமாக ராணுவப் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆலோசனைகளை வழங்கிக்  கொண்டிருந்தோம். நாங்கள் கடுமையான பதிலடியை அரசுக்கு கொடுத்துள்ளோம். 

ராணுவத்தினர் எங்களது குடும்பத்தாரை கொன்று குவிக்கிறார்கள். பெண்களை சித்திரவதை செய்கின்றனர். எனவே  அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவும் பழிக்கு  பழிவாங்கவும், அவர்களுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியை குறி வைத்தோம். மூத்த ராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளாக இருந்தாலும் கூட, சிறு குழந்தைகளை  கொல்ல வேண்டாம் என எங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு கொராசனி கூறினார்.  

ஆத்திரமூட்டிய ஆபரேஷன்

தலிபான்களின் கொட்டத்தை அடக்க, பாகிஸ்தான் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து, சர்ப்-இ-அஸ்ப் என்ற ஆபரேஷனை நடத்தி,  தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது.  வடக்கு வஜிரிஸ்தானில் நடந்து வரும் இந்த ஆபரேஷனில், 1,300 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இது, தாலிபான்களுக்கு கடும் ஆத்திரத்தை  ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை  நடத்தியுள்ளனர். போதாக்குறைக்கு, தாலிபான்களின் முக்கிய எதிரியான மலாலாவுக்கு, நோபல் பரிசு வழங்கப்பட்டதும், தலிபான்களை வெறுப்பேற்றி உள்ளது.

நவாஸ் ஷெரீப் சபதம்

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து, பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியதாவது: இது தேசத்துக்கு ஏற்பட்ட பேரிடர். உயிரிழந்தவர்கள்  அனைவரும் என்னுடைய குழந்தைகள். இந்த இழப்பு, எனக்கு ஏற்பட்டது. பெஷாவர் தாக்குதல் கோழைத்தனமாது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், அரசும்  ராணுவமும் முக்கிய முடிவை எடுக்கும். தீவிராதத்தை ஒழிக்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். தாக்குதல் நடத்தியதற்கான விளைவுகளை தலிபான்கள் சந்திப்பார்கள்.  அடுத்த 3 நாட்களுக்கு, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும். இவ்வாறு நவாஸ் ஷெரீப் பேசினார். 

இதேபோன்று, பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் இம்ரான் கான், மதகுரு காதிரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத் தில் அரசுக்கு  தங்களது முழுஒத்துழைப்பு இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.

அனைத்து கட்சி கூட்டம் 

பாகிஸ்தானுக்கு தாலிபான்கள் பகிரங்க மிரட் டல் விடுத்திருப்பதால், அந்நாட்டில் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்துள்ளது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ளள நிலைமையை  சமாளிக்கும் வகையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி, முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் திட்டமிட்டுள்ளார். 

இந்தியா கடும் கண்டனம்

தீவிரவாத தாக்குதலு க்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல் பட்டு, அதனை சமுதாயத்தில்  இருந்து முற்றிலுமாக வேரறுக்க வேண்டும். என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தாலிபான்களின் தாக்குதல் கோழைத்தனமானது. வார்த்தைகளால் விவரிக்க  முடியாத கொஞ்சம் கூட உணர்வே இல்லாத செயல். இது பள்ளிக் குழந்தைகளான அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துள்ளது என்று பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நான் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். 

இது கோழைத்தனமான, மனிதத் தன்மையற்ற தாக்குதல். இது தீவிரவாதத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது.“ என்று ட்விட்டரில் கூறியுள்ளார். இதேபோன்று, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-தினகரன்18.12.14

புதன், 21 ஜனவரி, 2015

அரவிந்தர் “ஆ”சிரமத்தில் பாலியல் கொடுமை

சிக்கும் வரை சாமியார்; சிக்கிய பின் போலிச் சாமியார் என்பார்கள் வழக்கத்தில். ஆசிரமங்களில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் செய்தி வரும்போது, எல்லா மடமும் அப்படியில்ல... நல்ல மடங்களும் இருக்கு என்று கைகாட்டுவார்கள். பிரேமானந்தா மாட்டிய போது, சாய்பாபாவைக் காட்டினார்கள்.. சங்கர மடத்தைக் காட்டினார்கள்.
சாய்பாபாவும், சங்கரமடமும் மாட்டியபின், புதிய சாமியார்களைக் காட்டினார்கள். புதிதாய் வந்தவர்களும் சீக்கிரம் சீக்கிரமாய் மாட்டியபின், வெள்ளைக்காரப் போலீசிடம் மாட்டாமல் இருப்பதற்காகவே பாண்டிச்சேரியில் ஆசிரமம் கட்டிய அரவிந்தரின் ஆரோவில் ஆசிரமத்தைக் கை காட்டினார்கள். (நீண்டநாட்களாக மாட்டாமல் இருப்பதற்காக போலும்!) இப்போது அங்கே நடக்கும் உண்மைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த அரவிந்தர் பக்தர்கள் தங்கள் சொத்துகளையும், உடைமைகளையும் ஆசிரமத்திற்குக் கொடுத்துவிட்டு அங்கேயே தங்கியிருக்கின்றனர். இப்படிப்பட்டோர் தங்குவதற்காக ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் புதுவை ஒயிட் டவுண் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளன. இதில் சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி யுள்ளனர். இவர்களுக்குப் பல விதிமுறைகள் உண்டு. நிர்வாக விதிமுறைகளை மீறுவோர்-மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை குருசுகுப்பத்தில் உள்ள குடியிருப்பில் பீகார் மாநிலச் சகோதரிகள் அய்ந்துபேர் சேவை செய்து வந்தனர். இவர்களின் பெற்றோர் புதுவையில் வேறொரு இடத்தில் வீடு எடுத்து வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சகோதரிகள் அய்வரும், ஆசிரம நிர்வாகிகள் சிலர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்ததுடன், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்தனர். ஆசிரம நிர்வாகத்தின்மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர். சகோதரிகள் கொடுத்த புகார் காவல் துறையினரால் பதிவு செய்யப்படவில்லை. எனவே, நீதிமன்றத்தை அணுகிப் புகாரைப் பதிவு செய்ய உத்தரவு பெற்றனர்.
ஆசிரம விதிகளை மீறி காவல்துறையில் புகார் கொடுத்ததால் அய்ந்து சகோதரிகளையும் ஆசிரமக் குடியிருப்பிலிருந்து வெளியேற வேண்டும் என ஆசிரம நிர்வாகம் கூறியது. சகோதரிகள் குடியிருப்பிலிருந்து வெளியேற மறுத்ததுடன், ஆசிரம நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆசிரம நிர்வாகத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததுடன், ஆசிரமக் குடியிருப்பிலிருந்து சகோதரிகள் வெளியேற வேண்டும் என்றும் ஆணையிட்டது.
சகோதரிகள் உயர் நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றமும் ஆறுமாத காலம் அவகாசம் கொடுத்து, குடியிருப்பிலிருந்து சகோதரிகள் வெளியேற வேண்டும் என ஆணையிட்டது.
உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆறு மாதக் கெடு முடிந்தும் சகோதரிகள் குடியிருப்பை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இதனைப் பார்த்த ஆசிரம நிர்வாகம், நீதிமன்ற உத்தரவைக் காட்டி, காவல்துறையினர் மூலம் சகோதரிகளைக் குடியிருப்பிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. இதனை அறிந்த சகோதரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தங்களை வெளியேற்றினால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டியுள்ளனர். சகோதரிகளுள் ஒருவர், நான்கு மாடிக் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்று தங்களை வெளியேற்றினால் இங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். மற்ற சகோதரிகள் கீழ்தளத்தில் நின்றுகொண்டு அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, குடியிருப்பிலிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் அங்கு வந்து, மேலிருந்து குதிக்கும் முடிவைக் கைவிட்டு கீழே இறங்கி வரும்படிக் கூறியபோது சகோதரி மறுத்துள்ளார். பேட்டி எடுக்க பத்திரிகை-யாளர்கள் மொட்டை மாடிக்குச் சென்றபோது காவல்துறைத் துணை ஆய்வாளரும் உடன் சென்று மீட்டுக் கைது செய்துள்ளனர்.
மற்ற 4 சகோதரிகளையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பியுள்ளனர். தங்கள் பெற்றோரிடம் செல்வதாகக் கூறிச் சென்ற சகோதரிகள் மறுநாள் அதிகாலையில் காலாப்பட்டு கடற்கரைப் பகுதிக்குச் சென்று பெற்றோருடன் கைகோர்த்தபடி கடலுக்குள் இறங்கியுள்ளனர்.
ஏழு பேரும் தண்ணீரினுள் அதிக தூரத்திற்குச் சென்றுவிட்டதால் இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த மீனவர்களால் நான்கு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. சகோதரிகளுள் இரண்டு பேரும், அவர்களது தாயாரும் உயிரிழந்துவிட்டனர்.
உயிர் பிழைத்த சகோதரிகளுள் ஒருவர்,
அரவிந்தர் ஆசிரமக் குடியிருப்பில் நாங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். அங்கு எங்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் வந்தன. இதனை எதிர்த்து ஆசிரமத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினோம். போலீசில் புகார் அளித்தோம். ஆனால் அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை ஆசிரம நிர்வாகம் வெளியேற்றியதால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம்.
பெற்றோர் வீட்டிற்குச் சென்ற நாங்கள் இரவு முழுவதும் அழுதுகொண்டே இருந்தோம். பின்னர் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு எடுத்தோம். அதிகாலையில் குடும்பத்துடன் சின்னகாலாப்பட்டு கடற்கரைக்குச் சென்றோம். அப்போது அங்கு இருந்த 2 பேர் என்னைத் தூக்கிச் சென்று கற்பழித்தனர். ஏற்கெனவே வேதனையில் இருந்த எங்களுக்கு இது பெரிய கொடுமையாக இருந்தது.
அதன் பின்னர் நாங்கள் ஏழு பேரும் கடலில் குதித்தோம். எங்களது அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் நான்கு பேரைக் காப்பாற்றினர். நான் கற்பழிக்கப்பட்டதை நிரூபிக்க டி.என்.ஏ. சோதனை நடத்த தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
- செல்வா
--------------------
ஆரோவில்லில் இன்னுமோர் அட்டூழியம் நில அபகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் ஆரோவில் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்டது கோட்டக்கரை கிராமம். விவசாயம் மற்றும் கால்நடை மேய்த்தல் போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து வாழ்ந்து வரும் இக்கிராம மக்கள் பயன்படுத்திய பொது-வழியானது முற்றிலும் அரசாங்கத்திற்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் ஆகும். இவர்கள் இவ்வாறு அந்நிலத்தைத் தங்களது அடிப்படைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்த வேளையில், திடீரென்று பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஆரோவில் நிருவாகத்தைச் சேர்ந்த அங்காத்து, கோபால், கோதண்டராமன் மற்றும் ஆரோவில் பகுதியின் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து, அரசாங்கத்திற்குச் சொந்தமான அம்மக்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலங்களைச் செம்மைப்படுத்தி சுத்தம் செய்து கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு சுத்தம் செய்திருந்த பகுதியை சிறுவர்கள் தங்களது விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் இளைஞர்களாக மாறிய பிறகும் இந்தப் பகுதியில் விளையாடி வந்த வேளையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு யாரும் எதிர்பாராத வேளையில் ஆரோவில்லின் எல்.ஆர்.எம். (L.R.M.) என்ற ஒப்பந்தக்காரர் மூலமாக அந்தப் பகுதியைச் (புறம்போக்கு) சுற்றி வேலி போட்டிருக்கிறார்கள். இதனை அறிந்த அக்கிராம மக்கள் உடனடியாக வேலி போடும் இடத்திற்குச் சென்று ஏன் இவ்வாறு வேலி போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் இந்த வேலிப் பகுதியினை நீங்கள் பயன்படுத்தலாம், உங்களை யாரும் தடுக்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படி இருந்துவந்த சூழலில் திடீரென்று ஒருநாள் விளையாட்டு மைதானம் அமைந்திருந்த வேலிப் பகுதியில் கனரக (கண்டைனர்) வாகனத்தை நிறுத்தியதுடன், இனிமேல் கோட்டக்கரை கிராம மக்கள் இந்த இடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள்.
இது போதாதென்று 27.06.2014 அன்று மாலை நேரத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சரசு, மாரி, தெய்வானை, பூரணி, கலா, மனோரஞ்சிதம் ஆகிய ஆறு பெண்களும் இந்தப் பொதுவழியாக இளங்காளி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது எதிர்த்திசையில் சத்பிரேம் என்பவர் கோவிலுக்குச் செல்லும் பாதையினை அடைத்துள்ளார். சத்பிரேம் என்பவர் ஆரோவில்லில் தங்கியிருக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர். கோட்டக்கரை கிராம மக்கள் ஆண்டாண்டுக் காலமாகப் பயன்படுத்தி வந்த பொதுவழியினை சத்பிரேம் தடுத்து வைத்ததைப் பொறுக்க-முடியாமல் வேறு வழியின்றி, இது அரசாங்கத்திற்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். மேலும் எங்கள் கிராம மக்கள் இவ்வழியைத்தான் பிரதான பாதையாகப் பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் யார் இதைத் தடுப்பதற்கு? என்று சத்பிரேமைக் கடக்க முயன்ற பெண்களை நாக்குக் கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஆடைகளைத் தொட்டும் கைகளைப் பிடித்தும் இழுத்து கீழே தள்ளியிருக்கிறார் வெளிநாட்டுக்காரரான சத்பிரேம். மேலும் அவர், எனக்கு அனைவரையும் தெரியும். எனவே உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஏளனமாகக் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட கோட்டக்கரை கிராம மக்கள் வெகுண்டெழுந்து 28.06.2014 அன்று பகலில் மொரட்டண்டி சுங்கவாயிலை (டோல்கேட்) முற்றுகையிட்டு கிராமப் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சத்பிரேமையும், அரசாங்க நிலத்தை அபகரிக்க முயன்ற அங்காத்து, கோபால், கோதண்டராமன் உட்பட்டவர்களையும் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியல் நடந்த தகவலறிந்து அங்கு வந்த கோட்டக்-குப்பம் உதவி காவல் கண்காணிப்பாளர் நிஷாசேகர், தாசில்தார் ருக்மணி சிறீவித்யா மற்றும் போலீசார்  மறியலில் ஈடுபட்டவர்-களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.
இதன் தொடர்ச்சியாக அன்று இரவு கோட்டக்கரை கிராமப் பெண்கள் ஆரோவில் காவல் நிலையத்தை முற்றுகை-யிட்டு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பெண்கள் போராட்டத்தின் விளைவாக சம்பந்தப்பட்ட சத்பிரேம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. மேலும் ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் ரகுநாதன் அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பதாக அக்கிராம மக்களுக்கு உத்திரவாதமும் அளித்தார். அதன்மீது எவ்வித மேல்நடவடிக்கையும் இன்றுவரை நடை-பெறவில்லை. அரசாங்கத்திற்குச் சொந்தமான சுமார் 4.5 ஏக்கர் (சர்வே எண்: 286) மட்டுமல்லாமல் மேலும் சுமார் 140 அரசாங்கப் புறம்போக்கு இடத்தினையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அங்குள்ள மக்கள் மிகவும் வேதனையுடன்,   சிறு ஏரிகளுக்குச் செல்லவேண்டிய வாய்க்கால், ஓடைப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்திப் பேசிய சத்பிரேமைக் கைது செய்யாமலும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தவர்களிடமிருந்து மீட்டு எடுக்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியப்படுத்துகிறார்கள்  அரசு அதிகாரிகள்.
- சோசு
உண்மை1-15ஜனவரி2015

சில்மிஷத்தில் ஈடுபட்ட 2சாமியார்களுக்கு தர்மஅடி

மாந்திரீகத்தால் பிரச்னையை தீர்ப்பதாக கூறி பூஜையின்போது சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 போலி சாமியார்களுக்கு தர்மஅடி



சென்னை: செங்கல்பட்டு அருகே மாந்திரீகம் மூலம் குடும்ப பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி, சில்மிஷத்தில் ஈடுபட்ட போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (30), பொன்விளைந்த களத்தூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (30) பட்டதாரிகளான இருவரும் கம்ப்யூட்டர் டிசைனர்கள். இவர்கள், சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் பார்த்த விளம்பரத்தில், ‘ குடும்ப கஷ்டமா? உடனே எங்களது செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். மாந்திரீகம் மூலம் உங்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அந்த செல்போன் நம்பருக்கு ராதாகிருஷ்ணன் போன் செய்துள்ளார். எதிர்முனையில் பேசியவர், ரூ.20 ஆயிரம் தந்தால் மாந்திரீக முறைபடி பூஜை செய்து பிரச்னைகளை தீர்ப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன் அவர்களை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதையடுத்து சூளைமேடு பகுதியை சேர்ந்த காதர்பாஷா (39), அபுசாத்கர் (30) ஆகியோர் புதுப்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேற்று வந்தனர். ராதாகிருஷ்ணனிடம் ரூ.20,000 பெற்றுக்கொண்டனர். பூஜை செய்வதற்கு கன்னிப் பெண் வேண்டும், அந்த பெண் நிர்வாணமாக நிற்கவேண்டும் என கூறியுள்ள னர். அதற்கு ராதாகிருஷ் ணன் மறுத்துள்ளார். 15 வயது சிறுமியையாவது அழைத்து வரும்படி ஆசாமிகள் கூறியுள்ளனர். இதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். அப்படியானால் நீங்கள் பூஜையின்போது நிர்வாணமாக நின்றால் தான் பூஜை முழுமை பெறும் என கூறியுள்ளனர். ஒருவழியாக ராதாகிருஷ் ணன் டவல் கட்டிக்கொண்டு நின்றுள்ளார். பூஜை நடந்து கொண்டிருந்த போது அந்த ஆசாமிகள் திடீரென ராதாகிருஷ்ணன் கட்டியிருந்த டவலை அவிழ்த்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராதாகிருஷ்ணன் கூச்சலிட்டார். 

சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் இருவரும் தப்பிஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து காதர்பாஷா, அபுசாத்கரை கைது செய்தனர். இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறை யில் அடைத்தனர். மாந்திரீகம் மூலம் பிரச்னையை தீர்ப்பதாக ஏமாற்றி வாலிபரிடம் போலி சாமியார்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  -தினகரன்29.12.14,பக்3

சிறுமி கொலை-பெண் மந்திரவாதி கைது

திருச்சி சிறுமி கொலையில் பெண் மந்திரவாதி கைது


திருவெறும்பூர்: துவாக்குடியில், சடலமாக மீட்கப்பட்ட குழந்தை, குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தள்ளி கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். திருச்சி அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை அய்யனார் கோயில் தெருவில் வசிப்பவர்கள் முனியப்பன்-அமராவதி தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள். இளைய மகள் இன்பரசி (4). அங்குள்ள பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த 30ம் தேதி, சிறுமி இன்பரசியை அருகில் உள்ள முனியப்பனின் தங்கை நாகராணி வீட்டில் விட்டு விட்டு சென்றார். மதியம் 2 மணியளவில் இன்பரசியை காணவில்லை. இதுகுறித்து துவாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்தநிலையில் அருகில் உள்ள குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில், இன்பரசியை சடலமாக போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் சாவுக்கு அப்பகுதியில் வசிக்கும் பெண் மந்திரவாதி தனம் (55) என்பவர்தான் காரணமாக இருக்கக்கூடும் என்றும், அவர் நரபலி கொடுத்து சிறுமியை கொன்றிருப்பார் என்றும் பொதுமக்கள் புகார் கூறி அவரது வீட்டை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
தனம் சில வருடங்களுக்கு முன் அதே பகுதியில் 3 குழந்தைகளை கடத்தி வந்து சத்திரம் பகுதியில் ஒளித்து வைத்திருந்தார். 

பின்னர், அருள்வாக்கு என்ற பெயரில் அந்த குழந்தைகள் இருக்கும் இடத்தை கூறி அவர்களது பெற்றோரிடம் பணம் பறித்தார். கடத்தப்பட்ட குழந்தைகள், தனம் தான் தங்களை கடத்தி வைத்திருந்தார் என கூறியதால் குட்டு அம்பலமானது. இதுபோலதான், இன்பரசியின் பெற்றோரிடம் பணம் பறிக்க அவளை கடத்தி நரபலி கொடுத்திருப்பார் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையே இன்பரசியின் உடல் திருச்சி தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கையில், தண்ணீர் அதிகமாக குடித்து குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பரசி குவாரி தண்ணீர் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே பெண் மந்திரவாதி தனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
-தினகரன்4.1.15,பக்5

அரவிந்தர் ஆசிரம மோசடி-தற்கொலை


மாலை மலர் 19.12.14பக்-9

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

காவி உடையில் காலித்தனம்


கலபுரகி, நவ.19-_ சித்தூர், கம்பலேஸ்வரர் மடத்தில் உள்ள சாமியார் சோம சேகர சிவாச்சார்யா (45) என்பவர் 11 வயது சிறுமி யிடம் பாலியல் வன்முறை யில் ஈடுபட்டதாக புகார் வெளியாகி உள்ளது. மடத் துக்கு அருகில் உள்ள வீடு களில் வசிக்கும் சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர் கள் கூட்டாக காவல் நிலையத்துக்குச் சென்று சிறுமிமீதான சாமியாரின் பாலியல் வன்முறை குறித்து புகார் கொடுத்துள்ளனர்.
மடத்திலிருந்து 20 மீட் டர் தொலைவில் உள்ள வீட்டிலிருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று அச்சிறுமி சிறுவர் களுடன் விளையாடுவதற் காக மடத்துக்குள் சென்ற போதுசாமியாரால் பாலி யல் வன்முறைக்கு ஆளாகி யதாக புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புகார் கொடுத்தவர் களில் ஒருவரான ரவீந்திர சஜ்ஜன்ஷெட்டி என்பவர் கூறும்போது, அச்சிறுமி கதறியபடி ஓடியதை அங் கிருந்த மக்கள் பலரும் பார்த் துள்ளனர். மடத்திலுள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்காக மடத் திற்குள் அச்சிறுமி சென் றாள்.
இதுபோன்ற பாலியல் வன்முறைகள் நடக்கும் போது, உடனடியாக காவல் நிலையத்தை அணுகி இருக்க வேண்டும். சிறுமியின் பெற் றோரை, மடத்திலுள்ள சாமியார் மிரட்டியதால், காவல்நிலையத்துக்குச் செல்லாமல் இருந்துள்ள தாக ரவீந்திரா கூறுகிறார்.
அச்சிறுமிக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கும் போது, அச்சிறுமி கூறியதை எழுதியே புகார் அளிக்கப் பட்டுள்ளது.
சித்தூர் மடாதிபதி கைது
சித்தூர் காவல்துறை யினர் காம்பலேஸ்வரா மடத்தின் சாமியாரான சோமசேகர சிவாச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்த னர். சாமியார் தப்பிக்க முயற்சி செய்தபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை கண் காணிப்பாளர் (பொறுப்பு) பி.மகந்தேஷ் இதுகுறித்து கூறும்போது, 11 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக சோமசேகர சிவாச்சார்யாமீது சித்தூர் ரவீந்திரா என்பவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட மருத்துவமனை யில் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற் றது. வழக்கில் குற்றம் சுமத் தப்பட்ட சாமியாருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி குற்றம் நிரூபணம் ஆகி உள்ளது. சாமியார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தில் நிறுத்தப்பட்டார். நீதி மன்றக் காவலில் இம்மாதம் 29ஆம் தேதிவரை வைப்ப தற்கு நீதிபதி உத்தரவிட்ட தையடுத்து, மடத்தின் சாமியார் சிறையில் அடைக் கப்பட்டார். இவ்வழக்கில் சிறுமி யின் பெற்றோர் போதிய ஒத்துழைப்பை அளிக்க முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறி னார்.
விடுதலை,19.11.14

2 மத குருக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


. இஸ்லாமாபாத், டிச. 25_ பாகிஸ்தானின் லாகூர் நகரின் அருகே கடந்த அக் டோபர் மாதம் கிறிஸ்தவ இணையர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளை யில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணி யாற்றி வந்தனர்.
அந்த கிறிஸ்தவ இணை யர் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனின் பக் கங்களை தீயிட்டு கொளுத்தி, அந்த புனித நூலை அவ மதித்து விட்ட தாக சக் கிராமத்தில் உள்ள இரண்டு மசூதிகளின் மூலம் அப் பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு கடந்த மாதம் 4-ஆம் தேதி தகவல் பரவியது.
இதைக் கேட்டு கொதித் தெழுந்த ஏராளமானவர் கள் உள்ளூர் மதத் தலை வரின் தலைமையில் முஹம் மத் யூசுப் குஜ்ஜாரின் செங் கல் சூளைக்கு விரைந்தனர். சஹ்ஜாத் மசியின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அந்த கும்பல், அந்த இணையரை குடிசையை விட்டு வெளியே இழுத்து, அடித்தும் உதைத்தும் சித்ரவதை செய்தது.
இதிலும் ஆவேசம் தணியாத சிலர் சஹ்ஜாத் மசி மற்றும் அவரது மனைவி ஷமாவை தூக்கி கொழுந்து விட்டு எரிந்த செங்கல் சூளை தீக்குள் வீசினர். இதில் உடல் கருகி அந்த இணையர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக பலரிடம் காவல்துறையினர் விசாரித்தனர். இவர்களில் சிலர் மீது லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன் றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய செங்கல் சூளையின் உரிமையாளர், இரண்டு மதகுருக்கள், 4 பெண்கள் உள்பட 59 பேர் மீது இன்று குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட் டது.
ஜனவரி மாதம் 2-ஆம் தேதி முதல் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெற்றோரை இழந்த இந்த இணையரின் குழந்தைகளுக்கு 50 லட்சம் ரூபாயும், 10 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என பஞ்சாப் மாகாண முதல் அமைச்சர் ஷாபாஸ் ஷரிப் அறிவித்துள்ளார்.

விடுதலை,25.12.14